அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, March 28, 2012

ஹாஜிகள் சந்தித்த அவலங்கள்(ஜித்தா மண்டல சமுதாய சேவை)





ஹஜ், உம்ரா செய்வது புனித பயணம் என்றும், அமல்கள் செய்யவும் என்ற நிலை இருந்தபோது, செய்பவர்களும், குறைவாக இருந்தனர். அழைத்து வரும் ஏஜெண்ட்களும் குறைவாக இருந்தனர். ஆனால் இன்று இஹ்லாஸோடு வருபவர்கள் குறைந்து பலர் ஹஜ், உம்ரா செய்வதை ஒரு சமூக அங்கீகாரமாகாவும், பகட்டை வெளிபடுத்தும் ஒரு காரியமாக சமுதாயத்தில் ஆக்கி ஹஜ், உம்ரா செய்பவர்கள் அதிகமாகும் பொழுது அதனை வைத்து பணம் பண்ணும் ஏஜெண்ட்களும் அதிகரித்து வருகின்றனர். இதில் அதிக தொகையினை ஹாஜிகளிடம் பெற்று, குறைந்த தொகையினை அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்களிடம் கொடுத்து பல மடங்கு லாபத்தை ஈட்டி கொழிக்கும் போலி ஏஜெண்ட்கள்தான் அதிகமாக உள்ளனர். இப்படி ஒரு டிராவல்ஸிடம் மாட்டி அவதிப்பட்ட அப்பாவி பெண்களின் விபரம்தான் இது.
கடந்த 20-03-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டல தலைவர் சகோ. ஃபைசல் ஜித்தா மண்டல தலைவர் சகோ.நௌஷாத்திற்க்கு போன் செய்து மக்காவில் சில பெண்கள் மஹ்ரம் பிரச்சிணையால் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்படுவதாகவும் அது பற்றி ரியாத்திலுள்ள ஒரு சகோதரருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இது பற்றி விசாரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதுடன் சில தொடர்பு விபரங்களையும் கொடுத்தார். உடன் நௌஷாத் மக்கா கிளை நிர்வாகிகளான சகோ.அப்துற் ரஹ்மான் மற்றும் அபுதாஹிர் இவர்களை தொடர்பு கொண்டு விபரங்களை சேகரித்து தகவல் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். உடன் செயல்பட்ட அவர்கள் கூரிய விபரங்களும், நடந்த சம்பவங்களும் வருமாறு-

2 – மெஹ்தியா ஹஜ் சர்விஸில் பெண்களே அதிகம் இருந்ததால் அவர்களுக்கு விஸா, டிக்கெட், சௌதியில் தங்குமிடம், உணவு மற்றும் வாகனம் ஏற்பாடு செய்யும் அல் முனவ்வரா ஹஜ் சர்விஸ் அவர்கள் பக்கமிருந்த சில ஆண்களை இந்த பெண்களுக்கு மஹ்ரமாக போட்டு விஸா ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் மஹ்ரமாக போட்டுள்ள ஆண்களுடன் இந்த பெண்களை இணைந்து அனுப்பாமல் பிரித்து பிரித்து முன்பின் என பல தேதிகளில் அனுப்பி உள்ளனர். சௌதி சுங்க இலாக வரும்போது அவ்வளவாக கண்டு கொள்ளாத மஹ்ரம் துணைகளை செல்லும்போது கண்டிப்புடன் கவனிக்கிறது.
இந்த இடத்தில் ஒரு தகவலை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.சௌதியில் பணிபுரிய வரும் பெண்களுக்கு ஒரு சௌதி நாட்டவரோ அல்லது நிறுவனமோ பொறுப்பேற்றுக்கொள்வதால் தனியாக வரலாம். கணவரும் தங்க வரும் பெண்கள் கணவரை ஸ்பான்சராக கொண்டு தனியாக வரலாம். ஆனால் சுற்றுலா, ஹஜ் மற்றும் உம்ரா வரும் பெண்கள் தனியாக வர சௌதி அரசாங்கம் சில நிர்வாக, சட்ட ஒழுங்கு காரணங்களால் தடை விதித்துள்ளது. பெண்கள் சுற்றுலா, ஹஜ் மற்றும் உம்ரா வரும் பொழுது, தன் கணவர், மகன், தகப்பனார், உடன் பிறந்த சகோதரகள், அல்லது தாய் மாமன் இவர்களில் ஒருவரை மஹரம் துணையாக அழைத்துக்கொண்டுதான் வரவேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் நமது நாட்டில் இருந்து சுற்றுலா, ஹஜ் மற்றும் உம்ரா வரும் பெண்களுக்கும் அவர்களை அனுப்பி வைக்கும் ஆண்களுக்கும் இந்த சட்டம் தெரியாததால், ஏஜெண்ட்களிடம் ஹஜ் உம்ரா செல்லா பாஸ்போர்டையும் பணைத்தையும்  கொடுத்து ஏற்பாடு செய்ய சொல்லி விடுகின்றார்கள். ஆனால் இந்த சட்டம் தெரிந்தும் பொருளாதாரா லாபத்திற்க்காக ஏஜெண்ட்கள் ஹாஜிகளிடம் இதுபற்றி சொல்லாமல் தனியாக வரும் ஆண்களை தாய்மாமன் என்று போலியாக சொல்லி விஸா எடுத்து விடுகின்றனர். தான் யாருக்கு மஹ்ரம் என்றும், தனக்கு யார் மஹ்ரம் என்று தெரியாமல்தான் அனேகர் இங்கு வருகின்றனர்.
3 – இந்த நிலையில் கடந்த 21-03-2012 அன்று ஹாஷிம் 15 பெண்களுடனும் 1 ஆண் மற்றும் தானும் தாயகம் திரும்ப ஜித்தா விமான நிலையம் சென்றுள்ளனர்.(இவர்களில் 1 ஆணும், 1 பெண்ணும் அல் முனவ்ரா ஹஜ் சர்விஸ் மூலம் நேரடியாக வந்தவர்கள்) இவர்களின் 4 பெண்களுக்கு ஹாஷிம் மஹ்ரமாக இருந்ததால் அவர்களையும் ஹாஷிமையும் தாயகம் திரும்ப சுங்க அதிகார்கள் அனுமத்துவிட்டு மீதமுள்ளவர்களை மஹ்ர துணை இல்லாததால் சௌதிலேயே இருந்து மஹ்ரத்துடன் வர சொல்லி விட்டனர்(இதில் ஒரு கொடுமை என்னெவென்றால் மஹ்ரம் போட்ட ஒருவர் முதலிலேயே தாயகம் திரும்பி விட்டார். இன்னெருவர் அதுவரை சௌதிக்கே வந்து சேரவில்லை). இதை கேட்டு பதற்றமுட்ட 11 பெண்களும் அழ தொடங்கி விட்டனர். தங்களை அழைத்து வந்தது ஹாஷிம்தான் என்று அதிகாரிகளிடம் அவர்கள் சொன்னவுடன் அதிகாரிகள் ஹாஷிமின் விஸாவை புதுப்பித்து மீண்டும் சௌதி அனுப்பி விட்டனர். இதற்க்குள் வந்தவர்களின் துணிமணிகள், மருந்து மாத்திரைகள் விமானத்தில் இந்தியா சென்று விட்டது. எனவே இருப்பவர்கள் மாற்று உடையின்றியும், தினம் உண்ணும் மாத்திரைகள் இல்லாமலும், இங்கு அந்த மாத்திரைகளை வாங்க அதன் பெயர்கள் கூட தெரியாதவர்களாகவும் இருந்தனர்.
இவர்கள் திரும்ப செல்ல எடுத்திருந்த விமான டிக்கெட் திருப்பவோ, மாற்றவோ முடியாத வகுப்பில் குறைந்த விலையில் எடுக்கப்பட்டிருந்ததால் விமான டிக்கெட்டும் காலாவதியாகிவிட்டது. எனவே மஹ்ரத்துடன், இந்நிலையில் மக்கா திரும்பிய ஹாஷிம் மற்றும் ஹாஜிகள், தங்க இடமும் உண்ண உணவும் ஏற்பாடு செய்ய தவித்த பொழுது, ஹாஷிம் ஹஜ் சர்விஸிற்க்கு உணவு வழக்கமாக உணவு வழங்கி வரும் பாவா என்கிற சாதிக் பொறுபேற்றுக்கொண்டு தங்க வைத்துள்ளார்கள். அதற்க்கு ஈடாக 3 பாஸ்போர்ட்களை ஹோட்டல் நிறுவனத்திரிடம் ஒப்படைத்து விட்டனர்.(இந்த நிலையில் தங்க இடமும், உணவும் தடையில்லாமல் ஏற்பாடு செய்த அவர் பாராட்டப்படவேண்டியவர்) ஜித்தாவிலிருந்து மக்கா சென்ற வாகனத்திற்க்கு பணம் கொடுக்க முடியாமல் 10 பாஸ்போர்டும் ஈடாக கொடுக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தனது முக்கிய ஏஜெண்டான அல் முனவ்வரா நிறுவனத்தை தொடர்பு கொண்டு புதிய டிக்கெட்டும், ஊருக்கு சென்று விட்ட மஹர ஆணின் பாஸ்போர்ட் காப்பியையும் கேட்டனர். அவர்கள் மிக தந்திரமாக அனைவருக்கு டிக்கெட் ஏற்பாடு செய்கின்றோம். என்று கூறி தனது நிறுவனம் மூலம் நேரடியாக வந்து இருவருக்கு மட்டும் (1 ஆண் & 1 பெண்) மறுநாள் டிக்கெட் அனுப்பி அவர்கள் 23-03-2012 அன்று தாயகம் சென்று விட்டனர். ஊருக்கு சென்ற 1 ஆண் மஹ்தியா குருப்பில் உள்ள 3 பெண்களுக்கும் மஹ்ரமாக இருந்தார். ஆனால் அவரின் பாஸ்போர்ட் காப்பியை பெற்று வைத்து கொண்டதால் பெரிய குழுப்பம் வரவில்லை. தன் ஆட்கள் வந்தவுடன், முனவ்வரா நிறுவத்தினர். 1 லட்சம் கொடுத்தால்தான் டிக்கெட் அனுப்புவோம் என்று கூற தொடங்க ஆரம்பித்து, பின் 1.20 லட்சமாகவும் உயர்த்தியதோடு, முன்பு ஊருக்கு சென்ற மஹ்ரம் ஆணின் பாஸ்போட்டின் நகலையும் அனுப்ப மறுத்தனர். அத்தோடு முனவ்வரா நிறுவனர் சகோ. அப்துல் ஹாதியை தொடர்பு கொண்ட சகோ. அபுதாஹிர் இங்கு பெண்கள் பதட்டத்துடனும், மருந்துகள் இன்றியும், மாற்று துணிகள் இன்றியும் அழுது தவிக்கின்றனர் என்று கூறிய பொழுது, சகோ.ஹாதி அற்புதமாக ஒரு வார்த்தையை கூறி உள்ளார். அவர்கள் என்ன காட்டிலா இருக்கிறார்கள் மக்காவில்தானே இருக்கிறார்கள், தொழுது சாப்பிட்டுகொண்டு இருப்பதுதானே என்று. இந்த ஒரு வார்த்தைக்காகவாது அந்த நிறுவனத்தை தடை செய்யலாம். இதற்க்கிடையிம் 4 பெண்களுக்கு மஹ்ரமான சகோ. ஷாஜஹான் இறுதியாக சௌதி வந்து சேர்கிறார்.
4 – இந்த பெண்கள் சுமூகமாக ஊர் சென்று சேர வேண்டுமானால் அவரும் கூட செல்ல வேண்டும், ஆனால் அவர் நான் இப்பொழுதுதானே வந்தேன் 15 நாள் கழித்துதான் வருவேன் என்று சொன்னார். பின் அவரிடம் பேசி அவரை மீண்டும் ஒரு முறை இலவசமாக அழைத்து வருவேன் என்று வாக்குறுதி கொடுத்ததோடு, எழுதி வாங்கிக்கொண்டு அவரை இந்திய திரும்ப சம்மதிக்க வைக்கப்பட்டது.(இதனிடையில் பெண்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை சமாதனப்படுத்திக்கொண்டும், அவர்களுக்கு சிறு உதவிகளையும் நமது நிர்வாகிகள் செய்து கொண்டிருந்தனர்)
5 – ஹாஷிம் தன் சக ஹஜ் சர்விஸ் நண்பர் ஒருவரிடம் பணம் கடனாக கேட்டுள்ளதாகவும் அவர் 1,80000 ரூபாய் தருவதாகவும், அதில் ஒரு லட்சத்தை டிக்கெட்டிற்க்காக தருவதாகவும், 80000 ரூபாய் தங்கும் விடுதிக்கு ஒரு பகுதியை கொடுத்து மீதி தொகைக்கு எழுதி தருவதாகவும், ஊர் சென்ற உடன் அதனை திரும்ப அடைத்து விடுவதாகவும் சொன்னார். இந்நிலையில் மக்கா சென்ற சகோ. நவ்ஷாத், ஹாஜிகளுக்கு ஆறுதல் சொல்லி, ஹாஷிமிடம் பணத்திற்க்கு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு செய்யும், நீங்கள் ஊரில் உங்கள் வீட்டிலிருந்து இதற்க்கு ஈடாக நகைகளை கொடுக்க சொல்லுங்கள், சில நாட்களின் தொகையை திருப்ப கொடுத்து நகைகளை பெற்றுக்கொள்ளூங்கள் என்று சொன்னார். அதற்க்கு ஹாஷிம் மறுத்து விட்டார். அதற்க்கு பல காரணங்களை மாற்றி மாற்றியும் சொன்னார். பின் சென்னையிலுள்ள முனவ்வரா நிறுவனத்திற்க்கு போன் செய்த பொழுது அவர் நாசுக்காக எடுக்காமல் விட்டுவிட்டார். அதன்பின் இவர்கள் இரு நிறுவனத்திற்க்கிடையே ஏஜெண்டாக உள்ள ஜாஹிரிடம் தொடர்பு கொண்ட பொழுது ஏர் அரேபியா நிறுவனத்தில் டிக்கெட் உள்ளதாகவும், ஒரு லட்சம் அனுப்பினால் தான் அனைவருக்கும் டிக்கெட் அனுப்பிவிடுவதாகவும், மீதி தொகைக்கு ஹாஷிமிடம் இந்தியாவில் வாங்கிக்கொள்வதாகவும் சொன்னார். உடன் ஹாஷிம் சம்மத்தித்து அதற்க்குண்டான தொகையை சௌதியில் தந்து விடுவதாகவு, அதனை நாளையே அங்கு கிடைக்க ஏற்பாடு செய்யவும் சொன்னார். அதன்படி மாநில தலைமைக்கு பேசி ஒரு லட்சம் கொண்டு சென்றவுடன், ஜாஹிர் டிக்கெட்டிற்க்கு 1.60000 ஆகும் என்றும் மீதி 60000 தவ்ஹீத் ஜமாத் பொறுப்பேற்றுக்கொண்டால் மட்டும் முழு டிக்கெட்டை அனுப்பி வைக்க முடியும் என்றும் இல்லையென்றால் 1 லட்சத்திற்க்கு உரிய டிக்கெட்டை மட்டும் அனுப்பி வைக்க முடியும் என்று சொன்னார். உடனே நாம் கஷ்டப்படும் பெண்களின் கண்ணீரை மனதில் கொண்டு தவ்ஹீத் ஜமாத் பொறுப்பேற்றுக்கொண்டது.(அந்த தொகையினை 10 நாளில் திரும்ப தந்து விடுவதாக ஹாஷிம் எழுதிக்கொடுத்துள்ளார்).
6 – விமான டிக்கெட்டிற்க்கு ஏற்பாடு செய்துவிட்டோம் என்ற திருப்தியில், ஊரிலிருந்து வரவேண்டிய மஹ்ரம் நபரின் பாஸ்போர்ட் நகலை பெற முயற்ச்சித்த நமது நிர்வாகிகள் அதனை பெற்றனர். ஹாஷிம் கையில் இருக்கும் தொகையை கொடுத்து மீதி தொகைக்கு எழுதிகொடுத்து விடுதியில் இருந்த பாஸ்போட்டை மீட்டனர். வாகனத்திற்க்கான தொகை ஹாஷிமிடம் இல்லாத்ததால், சகோ.அபுதாஹிர் தனது பணத்தை கொடுத்து அந்த பஸ்போர்ட்களையும் மீட்டார். மீண்டும் மக்காவிலிருந்து ஜித்தா செல்ல நமது நிர்வாகிகளே வாகன ஏற்பாடு செய்தனர்.
7 – மறுநாள் காலை புறப்பட தயராகி கொண்டிருக்கும்பொழுது சென்னையிலிருந்து அன்புசகோதரர் ஜாஹிர் இன்னும் 26000 கொடுத்தால்தான் முழு டிக்கெட்டினை அனுப்ப முடியும் என்றார். உடன் மக்காவில் ஹாஷிமை தொடர்பு கொண்டு இதற்க்கு மேல் எங்களால் ஏதும் செய்ய முடியாது ஆனால் இன்று இவர்கள் ஊருக்கு செல்லவேண்டும் என்று நமது சகோதர்கள் வலியுறுத்திய போழுது ஹாஷிம் ஜாஹிரிடம் பேசி தான் ஊர் வந்து தருவதாக கெஞ்சி கேட்டுக்கொண்டதை ஏற்று அவர் முழு டிக்கெட்டையும் மின்னஞ்சலில் சகோ. அபுதாஹிருக்கு அனுப்பி வைத்தார்.
8 – அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-03-2012 மதியம் ஜித்தாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் சென்னை புறப்பட்டனர். புறப்படும் முன் தவ்ஹீத் ஜமாத்திடம் இது போன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு கொடுத்து சென்றனர். உங்கள் உதவியால்தான் நாங்கள் ஊர் செல்கின்றோம், இல்லை என்றால் எங்கள் நிலை என்னவென்றே எங்களுக்கு தெரியாது என்று கலங்கியது. மனதை இலக செய்வதாக இருந்தது. அதற்க்கு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் அல்லாஹ்விற்க்கு நன்றி சொல்லுங்கள், அவனிடம் எங்களுக்காக து.ஆ செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
9 – இந்த விஷயத்தை பொறுத்தவரை முனாப், ஆதம் ஹஜ் சர்விஸ் இஷாக், ஜித்தா விமான நிலையத்தில் பணிபுரியும் சுக்குர் போன்றவர்கள் களத்தில் நேரடியாக பலரும், பின்னாளிருந்து பலரும், நம் கவனத்திற்க்கு வராமலே பலரும் உதவி உள்ளார்கள். அல்லாஹ் அவர்களின் பங்களிப்பையும், பணிகளையும் முழுமையாக ஏற்று, ஈருலகிலும் வெற்றியை தர நாமும் பிரார்த்திப்போம். இது போன்ற நல்ல விஷயங்களுக்கு நம்மை தேர்ந்தெடுத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்க்கு நாமும் நன்றி கூறுவோம்.










No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y