அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, March 12, 2012

புற்றுநோயை குணப்படுத்தும் ரமலான் நோன்பு விஞ்ஞானிகள் வியப்பு!

ரமலான் முழுவதும் முஸ்லிம்கள் உண்ணாமலும் பருகாமலும் நோன்பு இருக்கிரார்கள இந்த நோன்புக்கான கூலி அல்லாஹ்விடம் கிடைக்கும் இந்த நம்பிக்கையில் தான் அவர்கள் நோன்பு இருக்கிறார்கள்.

இருந்தாலும் உடல் ரீதியில் உலகத்திலும் அதற்க்கான பலன் இருக்கத்தானே செய்யும் சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பை நோற்கும் போது அவர்களுக்கு சர்க்கரையின் அளவு கூடாது மாறாக மாத்திரை மருந்து எடுக்காமலே சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் இதை நிறையப்பேர் அனுபவத்தில் அறிந்திருப்பார்கள் ரமலான் நோன்பு புற்று நோயை குணப்படுத்தும் என்று சொன்னால் அது நம்பும்படியாகவா இருக்கிறது நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மை என்று அடித்து சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்த ஆய்வை அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளார்கள் ஒரு செல் இரேண்டாக இரண்டு நான்காக நான்கு எட்டாக எட்டு பதினாறாக என பல்கி பெருகுவது சாதாரண வளர்ச்சி இதே செல் பத்து நூறாக ஆயிரமாக கணக்கில்லாமல் வளர்வதுதான் புற்றுநோய் இந்த புற்றுநோய்க்கு கீமோதெரபி என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது கிரிகட் வீரர் யுவராஜ்சிங் சமீபத்தில் புற்றுநோய்க்காக இந்த சிகிச்சையை மேற்கொண்டார் என்பது அறிந்ததே!

நோய் செல்கள் எதிர்மறையாக செயலாற்றுகின்றன இறுதியில் அவை தன்னைத்தானே அழித்து கொள்கின்றன இதற்கு புற்றுநோய்  செல்களின் தற்கொலை என பெயர் வைத்திருக்கிறார் முன்னணி ஆய்வாளர் வால்ட்டர் கோங்கோ இந்த தற்கொலை நிகழ்வை தடுப்பதற்கு புற்றுநோய் செல்கள் முயல்கின்றனர் ஆனால் அவற்றால் அதை தடுக்க முடியவில்லை என்கிறார் இவர் ஒரு புற்று நோயாளி நோன்பு நோற்க்கும் போது அதாவது பகல் முழுவதும் உண்ணாமலும் பருகாமலும் இருக்கும்போது புற்றுச் செல்களின் வளர்ச்சி தாமதாகிறது அதே சமயம் கீமோ தெரபி சிகிச்சையுடன் நோன்பு நோர்க்கும்போது அதாவது பகல் முழுவதும் உண்ணாமலும் பருகாமலும் இருந்தால் அது நல்ல பலனை தருகிறது என்பது இவரது கண்டு பிடிப்பாகும் இது முற்றிய புற்று நோய்க்குரியது.

நோன்பு நோர்க்கும்போது அதாவது பகல் முழுவதும் உண்ணாமலும் பருகாமலும் இருப்பது ஆரம்ப நிலையில் உள்ள சில புற்று நோய்களை முற்றிலும் குணப்படுதிவிடுகிறது என ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள வால்ட்டர் எனது இந்த கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய முறையை உருவாக்கும் என்கிறார் இப்படி நோன்பு நோற்கும் போது அதாவது பகல் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருப்பதால் சாதாரண செல்களில் வளர்ச்சி எந்த விதத்திலும் குறைவதில்லை என்று இவர் கண்டு பிடித்திருக்கிறார் உலகிலேயே புற்றுநோய்தான் பயங்கரமான நோய் என்கிறார்கள் இறைவனின் கட்டளையை ஏற்று ரமலான் நோன்பிருக்கும் போது இந்த புற்று நோய் வருவது முற்றிலும் தடுக்க படுகிறது எனும் போது ரமலான் நோன்பும் இந்த நோன்பை வலியுறுத்தும் திருக்குரானும் படைத்த இறைவனால் வழங்கப்பட்ட ஒன்று என்ற உறுதி ஏற்படுகிறது அல்லவா?

திருக்குர்ஆன் குறிபிடும் ஒவ்வொரு வணக்கத்திலும் நமக்கு தெரியாத பல நோய் நிவாரணங்கள் அதை ஆய்வுகள் நிருபிக்கும்போது வல்ல இறைவனைப் போற்றி புகழ்வதே ஒரு நன்றியுள்ள அடியானின் இருக்க முடியும் அந்த நன்றியுள்ள அடியார்களில் நாமும் இருக்கிறோமோ என்பதை ஒவ்வொருவரும் தங்களை சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளவேண்டும் சரிதானே!

நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். அநீதி இழைத்தோருக்கு இழப்பையே அதிகப்படுத்தும் 17:82. 
இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், நோய் நிவாரணமுமாகும்' என்று கூறுவீராக! 41:44.
                                                                                                                                         -உணர்வு இதழ் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y