அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, September 14, 2011

ஜன்லோக்பால் ஓர் ஆய்வு


ந்தியாவில் அதிகமாக பேசகூடிய வார்த்தையாகிவிட்டது லோக்பால். அதை பற்றி என்னனே தெரியாத ஒரு கும்பல் சினிமாவில் கதை சொல்லும் போது ஒரு வரியில் கதை சொல்லிவிட்டார் அது எனக்கு பிடித்துபோகிவிட்டது அதனால் நான் இந்தபடத்தை எடுத்தேன் என்பது போல அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக போராடுகிறார் அவரை ஆதரிப்போம் என்று ஒரு கும்பல்.


அன்னா ஹஸாரே யாரு லோக்பால் லா என்னு தெரிந்துகிட்டு ஆதரவு தெரிவித்தால் நல்லது, ஆனால் அப்படி எதுவும் இல்லாம சும்மா குருட்டான் போக்கு’ல நானும் ஊழலுக்கு எதிரானவன் என்பதை காட்டிகொள்கிறேன் என்பது போல பலர் காட்டிகொள்கிறார்கள்.

அன்னா ஹஸாரே க்கு பின்னாடி இருப்பது யார் என்று கூட பார்க்கதவறுகிறார்கள், இதுக்கு முன்னாடி அன்னா ஹஸாரேவின் செயல்திட்டம் எப்படி இருந்தது என்பதையும் பார்பது இல்லை,அப்படி பார்த்து இருந்தார்கள் என்றால் அன்னா ஹஸாரேவை காரித்தான் துப்பியிருப்பார்கள்.அப்படிபட்ட கொள்கைக்கு சொந்தகாரர்தான் அன்னா ஹஸாரே.

பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது விரட்டி அடித்த மத்திய அரசு ஏன் அன்னா ஹஸாரே இப்படி செய்யமுடியவில்லை அன்னா ஹஸாரேக்கு பின்னாடி பலமான பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கு இந்த போராட்டம் நடத்த பல லட்சம் கோடிகள் அன்னா ஹஸாரேக்கு கொடுக்கபட்டு இருக்கிறது, மேலும் பல கோடிகளை வைத்துக்கொண்டு இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறது பன்னாட்டு கம்பனிகள் ஏன் இப்படி இவர்கள் நடத்துகிறார்கள் என்பதுக்காண காரணத்த்தையும் நாம் பார்ப்போம்.

இந்தியாவின் பன்னாடு தொழில் நிறுவணங்கள் தொடங்க கடுமையான சட்டதிட்டங்கள் இருந்த்து,அவர்களை அனைத்துவிதங்களிலும் கட்டுபடுத்த சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்தது, அதனால் அது அவர்களுக்கு தடையாக இருந்தது அதனால் அதை உடைக்க இந்திய சட்டத்திற்க்கு கட்டுப்படாத ஒரு சட்டத்தையே பன்னாடு நிறுவனங்கள் ஏற்படுத்தியது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள், சிறப்பு பொருளாதர மண்டலம் என்ற பெயரில் இந்திய அரசியலமைக்கு கட்டுப்படாத புது சட்டதிட்டைதே உருவாக்கினார்கள், அதனால் பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து வேரூன்றி இருக்கிறார்கள் அவர்களை கட்டுபடுத்தும் அதிகாரத்தையும் நாம் இழந்துயிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

இப்படி வளர்ந்த அவர்களுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து பணம் கொடுப்பதிலிருந்து தப்பிக்கமுடியவில்லை ஒரு பெரும் தொகை அரசியல்வாதிகளுக்கு கொடுக்கவேண்டி இருக்கிறது,மேலும் இந்தியாவில் சிறு வியாபாரிகளை ஒழித்து தாங்கள் நிலையாக நிற்க எப்படி தாங்கள் உள்ளே வர இந்திய அரசியலமைப்புக்கு கட்டுப்படாத ஒரு சட்டத்தை இயற்றினார்களோ அதுபோல் தங்களை நிலையாக நிலைத்து நிறக்க இப்போது ஒரு சட்டத்தை உருவாக்க முயற்ச்சிகிறார்கள்.

லோக்பால் என்ற பெரியரில் அன்னா ஹஸாரேக்கு பல லட்சங்கள் கொடுத்து பல லட்சங்களை செலவு செய்தும் இத்தகைய நாடகத்தை நடத்துகிறார்கள்,பிரதமரும் லோக்பால்க்குல் வரவேண்டும் என்று சொல்கிறார்கள் அப்படி வந்தால் ஊழல் ஒழிந்துவிடுமா என்ன? இல்லை பிரதமரை ஊழல் குற்றசாட்டில் விசாரிக்கபோகிறார்களா என்ன?? இதற்க்கு முன்பு பல கடுமையாண சட்டங்கள் இருந்தும் அதை நிறைவேற்றாமல் தானே கிடைப்பில் கிடக்கிறது.

லோக்பால் சட்டமசோதாவில் கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டி இருக்கிறது உதாரணமாக லோக்பால் சட்டமசோதாவில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை,இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதுதான், ஆனால் லோக்பாலில் பல வருடங்கள் தண்டனை வழக்க முடியும் , லஞ்சம் வாங்குபவர்களுக்கும் தண்டனை லஞ்சம் கொடுத்தாலும் தண்டனை 500 ரூபாய் கொடுத்தாலும், வாங்கினாலும் 10 ஆண்டுவரை தண்டனை வாங்கலாம் என்று சொல்கிறது லோக்பால்.

இந்தியாவை பொருத்தவரை சிறு வணிகங்கள் அதிகம் (உதா)தொருவோர கடைகள் வைத்து இருப்பவர்கள் சட்டத்திற்க்கு புறம்பாகத்தான் வைத்து இருக்கிறார்கள் இப்போது அவர்கள் கடைகள் நடத்த போலீஸ்க்கு சிறுதொகையை கொடுக்கிறார்கள் லோக்பால் என்று வரும் போது அந்த சிறுதொகை கொடுத்தவர்களுக்கும் குறந்தபட்சமாக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கமுடியும், இப்படித்தான் இருக்கிறது லோக்பால்.

ஆனால் இதுவரை அன்னா ஹஸாரே ஏழைகளை பற்றி எதுவும் பேசவில்லை என்பதை பற்றியும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள் அன்னா ஹஸாரே பின்னாடி எந்த ஏழையும் நிற்க்கவில்லை மேட்டுகுடிகளை சேர்ந்த ஒரு குழுமட்டும் பன்னாடு கம்பனிகளுக்கு ஆதரவு அளித்துகொண்டு இருக்கிறது என்பதையும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள் ஆக லோக்பால் என்பது பன்னாட்டு நிறுவனங்களை காக்க பல கோடிகள் செலவு செய்து நடத்தபடுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

போராட்டம் நடக்கும் இடத்தில் ஒரு ஊரடங்கு உத்தரவு போட்டால் தெரிந்துவிடும் இவர்களின் தேசபற்று எப்படி என்று! ஆனால் இன்றுவரை மத்திய அரசு பன்னாட்டு கம்பனிகளின் இத்தகைய செயலை எப்படி கட்டுபடுத்துவது என்று வேடிக்கைபார்த்துகொண்டு இருக்கிறது!

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y