அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, April 25, 2011

வரிந்து கட்டிய வார இதழ்….வாக்களிக்காத வாத்தியார்...

புரட்சி நடிகர் எம்ஜிஆருக்குப் பிறகு அனைத்துத் தரப்பு மக்களாலும் வாத்தியார்என அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படுபவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா. தன்னை வாத்தியார் என்று அழைப்பதையே அவரும் விரும்புகிறார். அதன்காரணமாகத்தான் இந்த தேர்தலுக்கு அம்மா!! அம்மா!! என தலைப்பிட்டு அடித்தஅத்தனை நோட்டீஸ்களிலும் எம்ஜிஆருக்குப் பக்கத்தில் தன் படத்தைஇடம்பெறச் செய்தார் இந்த வாத்தியார்
தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பலதலைப்புகளில் பல கட்டுரைகள்எழுதியிருக்கும் இந்த பேராசிரியரின் மனதில் புகுந்த பதவி ஆசை அவர்அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தைக் கூட தூக்கி குப்பையில் வீசியெறியும்அளவிற்கு கொண்டு வந்து விட்டதுசரி மார்க்கத்தைத் தான் தூக்கி எறிந்துவிட்டார்கள்ஜனநாயகக் கடமையாவது சரிவர ஆற்றினார்களா என்றால் அதுவும்கிடையாது.

தமுமுக அதிகாரபூர்வ இதழில் சென்ற வாரம் ஒரு செய்தி இடம்பெற்று இருந்தது.அதிலே ஓட்டுப் போடத பிரதமர்ஊருக்கு மட்டும் தான் உபதேசமாஎன முதல்பக்கத்தில் ஒரு செய்தியைப் போட்டு இருந்தார்கள்அசாம் சட்டபேரவைத்தேர்தலில் பிரதமர் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்யவில்லைஜனநாயகக்கடமையை ஆற்றவில்லைஊருக்கு மட்டும் தான் உபதேசமா என ஒரு சூடானசெய்தியைப் போட்டு பிரதமர் வாக்களிக்காத விசயத்தை வரிந்து கட்டிக் கொண்டுதங்களின் பத்திரிக்கை சுதந்திரத்தை நிலை நாட்டியுள்ளனர்பாராட்ட வேண்டியவிசயம் தான்.
ஆனால் பிரதமர் வாக்களிக்காத விசயத்தை இப்படி போட்டு அலசும் இந்தகழகத்தினர் தங்களின் தலைவர் வாத்தியார் ஏன் வாக்களிக்கவில்லை என்பதையாரிடம் சென்று கேட்கலாம் என்பது தெரியாமல் இப்போது விழிபிதுங்கிமுழித்துக்கொண்டு இருக்கின்றனர்வாத்தியார் அவர்களின் சொந்த ஊர்தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஆகும்பிறகு வாணியம்பாடி கல்லூரியில்பேராசிரியராக வேலை செய்த வாத்தியார் அவர்கள்தமுமுகவின் நிரந்தரத்தலைவர் ஆன பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்தார்பல வருடங்களாக சென்னை சூளைமேட்டில் குடியிருக்கும் பேராசியர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்வாக்காளாராக இருக்கிறார்.
ஆனால் ஊருக்கு உபதேசம் செய்யும் அவர்களின் பத்திரிகை செய்தியைப் படித்தபிறகும் கூட வாத்தியாருக்கு வாக்களிக்க மனம் வரவில்லைஅவர் தேர்தல்நாளன்று முழுக்க முழுக்க இராமநாதபுரம் தொகுதியில் இருக்கும் ஒவ்வொருவாக்குச்சாவடியாக வலம் வந்தாரே தவிர தன் வாக்கைச் செலுத்தி தன்னுடையஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியளவும்இல்லைஅவருக்கு இருப்பதெல்லாம் நாம் எப்படியாவது வெற்றியட்டைந்து விடமாட்டோமாநமக்கு தெளிவாக ஓட்டு விழுகிறதா என்பது மட்டுமே ஆகும்.

இந்திய ஜனநாயகம் கடந்து வந்த பாதையில் ஒரு ஓட்டு கூட வெற்றி தோல்வியைதீர்மாணித்திருக்கிறது. 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில் .தி.முகபா..,.தி.மு. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது.வெறும் 13 மாதங்கள் நீடித்த இந்த அரசு.தி.மு. தனது ஆதரவை வாபஸ் பெற்றகாரணத்தால் அதன் மெஜாரிட்டியை நிருபிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.கடைசியில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.
ஆக ஒரு ஓட்டு என்பது சாதாரண விசயமல்லஅதுமட்டுமின்றி ஒரே ஒருஓட்டினால் வாஜ்பாய் அரசையே கவிழ்த்த அம்மா அவர்களின் கூட்டணியில்இருந்து கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அம்மாஅம்மா என அழைத்து,சின்னச்சின்ன பிட் நோட்டீஸ்களில் கூட அம்மா தாயே என புகழ்ந்து தள்ளிவாக்குகேட்ட இந்த வாத்தியார் தன்னுடைய வாக்கை செலுத்தவில்லை எனபதுவேடிக்கை என்றாலும்இவரே வாக்களிக்காத போது பிரதமர் வாக்களிக்கவில்லை,ஊருக்குத் தான் உபதேசமாஎன தங்களின் அதிகாரபூர்வ வார இதழில்கேள்விகேட்டு எழுதுவதும் கொடுமையிலும் கொடுமை.
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரான முஹம்மது அலி ஜின்னாவை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர்வளர்மதி அவர்களுக்கு தன்னுடைய வாக்கினை வாத்தியார் அவர்கள்செலுத்தவில்லை.
ஒருவேளை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வளர்மதி அவரைஎதிர்த்துப் போட்டியிடும் முஹம்மது அலி ஜின்னாவை விட ஒரே ஒரு ஓட்டுவித்தியாசத்தில் தோற்றுவிட்டார் என வைத்துக்கொள்வோம்அதற்கு காரணம்யார்எல்லாம் தெரிந்த சிறந்த ஜனநாயகவாதியான வாத்தியார் அவர்கள் தான்.அதைப்போன்று வளர்மதி தோல்வியடைந்து திமுக 118 இடங்களையும்அதிமுக117 இடங்களையும் பிடித்து அதிமுக ஆட்சியமைக்க முடியாமல் போனால் அதற்குகாரணம் யார்அதற்கும் காரணம் பேராசிரியர் தான்இதெல்லாம் வளர்மதி காதுக்கு எட்டினால் வாத்தியாரின் கதி என்னவாகும் என்பது அவர்களின் தொண்டர்களிடையே பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. காரணம் வளர்மதியைப் பற்றி அதிமுககாரர்களுக்கு மட்ட்டுமின்றி பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும். வளர்மதியை சித்தரித்து சில சினிமாக்களும் கூட வந்துள்ளன. இயக்கத்தின் தலைவரே வாக்களிக்காத போது அவர்களின் தொண்டர்கள் பலரும் நாமும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று இருந்து விட்டதாகவும் மக்கள் மத்தியில் செய்திகள் உலா வருகின்றன.

அம்மா செல்லும் ஒவ்வொரு இடங்களுக்கும் முன்கூட்டியே திட்டமிட்டு 3 அல்லது 4பேர்களை நியமித்து அவர்கள் கையில் மமகவின் பிரம்மாண்ட கொடிகளைக்கொடுத்து அம்மா இந்தப்பக்கம் பார்க்கும் போது நல்ல வேகமாக ஆட்டுங்கள் என்றுஉத்தரவு பிரப்பித்தால் மட்டும் போதாதுஜனநாயகத்துக்கு ஆற்றும் கடமை,கூட்டணி கட்சிக்கு ஆற்றும் கடமை என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்கவும்வந்திருக்க வேண்டும்ஒருவேளை ஆயிரம் விளக்கு தொகுதியில் மமகவின்வேட்பாளர் நின்றிருந்தால் அவருக்கு வாக்களிக்க வராமல் ராமநாதபுரம்தொகுதியிலேயே சுற்றிக்கொண்டிந்திருப்பாரா ஜவாஹிருல்லாநிற்பது கூட்டணிவேட்பாளர் தானே! அதுவும் வளர்மதி தானேஅவர் ஜெயித்தால் என்ன?தோற்றால் என்னஎன் வேலை மட்டும் நடந்தால் போதும் என தான் போட்டியிட்டதொகுதியில் மட்டுமே முழுகவனம் செலுத்திய வாத்தியாரை யார் கேள்விகேட்பது?

கருணாநிதிஜெயலலிதாமுக.ஸ்டாலின்விஜயகாந்த் போன்ற அனைத்து பிரபலவேட்பாளர்களும் தாங்கள் போட்டியிட்ட தொகுதியை விட்டு விட்டு வந்து தங்களின்சொந்த தொகுதியிலே வாக்களித்தனர்காரணம் அவர்கள் ஆற்ற வேண்டியஜனநாயக கடமை மற்றும் தங்களின் கூட்டணிக்கு செய்ய வேண்டிய பொறுப்பு எனதங்களின் கடமையை ஆற்றவாத்தியார் மட்டும் தன் சொந்த வேலை நடந்தால்போதும் என அவர் போட்டியிடும் தொகுதியிலேயே கூடாரம் அடித்து தங்கிவிட்டுபிரதமர் வாக்களிக்கவில்லைஜனாதிபதி வாக்களிக்கவில்லை என விதவிதமாகதங்களின் பத்திரிகையில் கட்டம் கட்டி எழுதுகிறார்கள்இவர்களை நினைத்தால்ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது.

ஒரு ஊரில் ஒரு பெரிய ஹசரத் இருந்தாராம்ஒரு நாள் வெள்ளிக்கிழமை ஜூம்மாபயானுக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டு கோழிஅவர் வீட்டு பின்பக்கம் மேய்வதைக் கண்டு அதை அப்படியே கூடை போட்டு கவுத்திதன் மனைவியிடம் இதை இன்னிக்கு சால்னா வைத்து விடு என சொல்லிவிட்டுபயானுக்குச் சென்றுவிட்டாராம்கோழிக்கறிக்கு மசாலா வாங்குவதற்காககடைக்குச் சென்ற ஹசரத்தின் மனைவிக்கு ஹசரத் பயான் செய்வது தெளிவாகக்கேட்டதாம். “அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே என மிக காரசாரமாகமுழங்கினாராம் ஹசரத்ஹசரத்தின் பயானைக் கேட்டு நேராக வீட்டுக்கு வந்தமனைவிமூடிக்கிடந்த கோழியை வேகமாக திறந்து விட்டுவிட்டாராம்.ஜூம்மாவுக்கு பிறகு கோழிச்சால்னா சாப்பிட ஆசை ஆசையாக வீட்டுக்கு வந்தஹசரத் தன் மனைவியிடம் சாப்பாடு வை என கேட்கநடந்தவிசயங்களையெல்லாம் மனைவி சொல்லஅதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஹசரத்அழாத குறையாக சொன்னாராம்., அடிப்பாவி அத உனக்காடி சொன்னேன்?ஊருக்குலடி சொன்னேன்” . இதைப் போலத்தான் தன் தலைவர் வாக்களிக்காதவிசயத்தைக் கண்டுகொள்ளாமல்பிரதமர் வாக்களிக்களிக்கைவில்லைஊருக்குத்தான் உபதேசமாஎன கேட்பவர்களின் நிலையும்.

நன்றி: உணர்வு வார இதழ்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y