அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, February 02, 2011

18 தொகுதிகளா! 24 தொகுதிகளா!- எந்திர வாக்கு பதிவு என்பதால் தேர்தலில் போட்டி இடுமா


மமக என்ற கட்சி  தொடங்கப்பட்டதின் முக்கிய நோக்கம், எம்.பி  மற்றும் சட்ட சபை உறுப்பினர்கள் பதவியில்  மமக கட்சியை சேர்ந்தவர்கள் அமரவேண்டும் என்பதுதான்...மமக கட்சிக்கு முன்பு, தமுமுக கட்சி சார்பாக திமுகவை ஆதரித்தார்கள், வக்பு போர்ட் தலைவர் பதவி கிடைத்தது...திமுக ஆட்சியில் இருந்ததால், சில மரியாதைகள் கிடைத்தது. வக்புபோர்ட் பதவி, அரசியல் மரியாதைகள் , அரசியல் நட்பு , தமுமுக தலைவர்களை திக்கு முக்காட செய்தது....கட்ட பஞ்சாயத்து, குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் அராஜகம்,,ரியல் எஸ்டேட் வியாபாரம் போன்றவைகள், கட்சியை சார்ந்தவர்களால் நடத்தப்பட்டன..அரசியல் என்றால் இதெல்லாம் சகஜம் என்ற நிலை பிரகடனபடுத்த பட்டது............சில தலைவர்களின் , இந்த அரசியல் போதைக்காக தான் , தமுமுக முன்பு உடைக்க பட்டது அதிலிருந்து , TNTJஎன்ற அரசியலில் போட்டி இடாமல், ஆளுபவர்களை பயமுறுத்தல்தான், நம் அரசியல் என்ற அரசியல் வாக்கியம் வைத்து, இஸ்லாமிய சமுதாய இயக்கம் உருவானது என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.



அரசியல் போதையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில், மமக என்ற கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக துடங்க பட்டு , அவர்களின் அப்போதைய அரசியல் தலைவர் கருணாநிதி கட்சி திமுகவிடம், சீட் பேரம் நடத்த பட்டது. பாராளுமன்றத் தேர்தலில், ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற்காகத் தான் ம.ம.க.வே தொடங்கப்பட்டுள்ளது என்று தங்களது அதிகாரப்பூர்வ இதழில் அறிவித்தனர்..

சீட் பேரம் என்று வந்தவுடன், கருணாநிதி கட்சி, தன் சுய முகத்தை காட்டியது..... நாங்கள் அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். வேலூர்மத்திய சென்னைமயிலாடுதுறை,ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளிலிருந்து ஏதாவது மூன்று தொகுதிகள் தேவை என ம.ம.க. சார்பில் தி.மு.க விடம் கேட்கப்பட்டது.. பாராளுமன்ற தேர்தலில், மூன்று  தொகுதியை கேட்டவுடன், திமுக , மயங்கி விழாத குறையாக, பூஜ்யத்திலிருந்து புறப்பட்டு ஒரு தொகுதி என்ற நிலையிலேயே திமுக தரப்பு நின்றதுசில லெட்டர் பேட் கட்சிகள், சில அமைப்புகள், சில பேரவைகள், சில சங்கங்கள், கிறிஸ்தவ இயக்கங்கள் போண்றவைகள் எல்லாம் எங்களை ஆதரிகின்றன. என பட்டியல் இடப் பட்டு திமுகவிடம் தெரிவிக்க பட்டது. திமுக மசிய வில்லை, ஆனால் , பதவி பித்து பிடித்தவர்கள் என்பதை திமுக மோப்பம் பிடித்ததினால், ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள், இன்னொரு தொகுதிக்கு பதிலாக யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியும்,சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியும் காங்கிரஸ் சார்பில் தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறியது...மேலும், இவையெல்லாம் , கூட்டணி  கட்சியாகிய  காங்கிரஸ் யின் பங்கில் இருந்துதான் உங்களுக்கு, , திமுக சார்பில் ஜீரோ தான் என்றது...

மமக, பதவி ஆசையின் உச்ச கட்டமாக, ஜெயா கட்சியிடம் மறைமுகக் பேரம் நடத்த தொடங்கியது...ஜெயா கட்சியோ , திமுகவை விட்டு விலகுங்கள் , உங்களுக்காக எங்கள் வாசல் எப்போதும் திறந்து கொண்டு இருக்கும் என ஆசை காட்டியது.. கடைசியாக ஜெயா கட்சியும் கைகழுவியது... பதவி ஆசைகள் சுக்கு நூறாக பட்டன ..குழம்பி போன தலைவர்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட கனவு தொகுதிகளான வேலூர்,மத்திய சென்னைமயிலாடுதுறைராமநாதபுரம், போன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்து அதன் உண்மை பலத்தை மற்றவர்களுக்கு தெரிய படுத்தியது...

பலம் தெரிந்தவுடன், திமுக மொத்தமாக , அட் கட்சியை கை கழுவியது. சட்டசபை தேர்தல் நெருங்கியதால், தனித்து போட்டிடுவது தற்கொலைக்கு சமம என்று முடிவு செய்து, அதிமுகவிடம் பேச்சு வார்த்தை துடங்கியது... முஸ்லிம் லீக், திமுகவுடன் இருப்பதால் , அதிமுகவும், மமக என்ற கட்சி நம்முடன் இருப்பது நலம் என  பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறது......

·         பாராளுமன்றத் தேர்தலில், நான்கு தொகுதிகளுக்கு நாங்கள் தகுதியானவர்கள் என்பதினால், ஒரு பாராளுமன்றத் தொகுதி = ஆறு சட்டமன்ற தொகுதிகள், என்ற விதியை வைத்து, இவர்கள் 24 தொகுதிகளில், தேர்தலில் நிற்க வேண்டும்.....

·         கூட்டணி என்று வரும் போது,,,, இவர்கள் ஏற்கனவே திமுகவிடம் கேட்ட கணக்குப் பிரகாரம் 3 பாரளுமன்ற தொகுதிகள் இவர்களுக்குத் தேவை, அப்படி என்றால் ஒரு பாராளுமன்றத் தொகுதி = ஆறு சட்டமன்ற தொகுதிகள், என்ற விதியை வைத்து, 18 தொகுதிகளில், தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக நிற்க வேண்டும்.....

ம.ம.கட்சியினரருக்கு  18 தொகுதிகளுக்குக் குறைவாக, அதிமுக ஒதுக்கினால் அதைப் புறக்கணித்து விட்டு, சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது போல் அதற்கு நிகராக 24சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.

மேலும், எந்திர வாக்கு பதிவு தேவை இல்லை, மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். என்று சொன்ன இவர்கள், இந்த தேர்தலில் போட்டி , எந்திர வாக்கு பதிவு என்ற நிலை இருக்கும் போது என்ன செய்வார்கள் என்பதும்,, ஒரு கேள்வி குறியாகவே உள்ளது...

 நன்றி : செய்யத் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y