அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, February 21, 2012

பிஜேயை மட்டும் குறி வைப்பது ஏன் ?

கேள்வி : இந்த ஜமாத்தை குறைகூறக்கூடிய பல நபர்களை பார்த்துள்ளேன் இந்த ஜமாஅத்தில் நிவாகிகள் மற்றும் பேச்சாளர்கள் என்று பல்லாயிரக்கான பேர் இருக்கும்போது ஜாமத்தை பற்றி ஃபித்னா செய்வதாக இருந்தாலும் அவதூறு சொல்வதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் பிஜே என்ற உங்களை மட்டுமே திட்டக்கூடிய இந்த ஜாமத்தின் எதிரிகளின் செயல்பாடுகள் இந்த பிரசாரதிர்க்கும் நமது ஜமாஅதிர்க்கும் பலமா பலவீனமா? 
சமீபத்தில் ஒரு கிருத்துவ மூதாட்டியிடம் பைபிளிலிருந்து சில கேள்விகளை கேட்டேன் சுதாரித்துக்கொண்ட அந்த மூதாட்டி உங்களை சொல்லிக் குற்றமில்லை உங்களையெல்லாம் தூண்டி விடுகிறானே அந்த பிஜேவை சொல்லவேண்டும் அவன்தான் இதற்க்கெல்லாம் காரணம் என்று சொன்னதை கேட்க்க முடிந்தது. 
மற்று மததினர்கூட உங்களைத்தான் குறிவைத்து தாக்குகிறார்கள் என்றால் இது குறித்து உங்களின் கருத்து என்ன? 
-கலீலுர்ரஹ்மான் சென்னை 


பதில்: இதற்க்கான காரணத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை நான் தலைமை பொறுப்பில் இருப்பதால் என்னை குறிவைக்கிறார்கள்  என்று சொல்ல முடியவில்லை நான் தலைமை பொறுப்பில் இல்லாதபோதும் என்னைத்தான் குறிவைகிறார்கள் எனது பிரசாரத்தில் சொல்லும் கருத்துக்காக இவர்கள் எதிர்க்கிறார்கள் என்று கருத முடியவில்லை 1990 என்று நினைக்கிறன் ஜாக் இயக்கத்தில் இருக்கும் போது நாகூரில் தர்காவுக்கு அருகில் ஒரு பிரச்சார கூட்டம் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது அதில் எனக்கு முன்னால் கமலுதின் மதனி பேசினார் அவர் தனது உரையில் இந்த தர்காக்கள் இடித்தது தகர்க்கப்படவேண்டும் என்று தர்க்காவை நோக்கி கைநீட்டி பேசினார் தர்கா வழிபாட்டிற்கு எதிராக கடுமையாக அவர் பேசி முடித்தார் யாரும் எந்த சலனத்தையும் காட்டமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர் அதன்பின்னர் நான் பேச எழுந்து இறைவனை போற்றி புகழ்ந்துவிட்டு கண்ணிய்திர்க்குரிய  அல்லாஹ்வின் நல்லடியார்களே என்றுதான் சொன்னேன் சரமாரியாக கற்கள் வந்து விழுந்தன டியுப் லைட்டுகளை பிடுங்கி என்னை நோக்கி வீசினார்கள் சேர்களை வீசி எரிந்து ரத்தக்களரியை ஏற்படுதினர் நாங்கள் யாரும் மேடையிலிருந்து இறங்கி ஓடவில்லை காவல்துறையினர் வரும்வரை தாக்குதல் தொடர்ந்தது அதன்பின்னர் கூட்டத்தை நடத்தி முடித்தோம் கருத்துக்காக தாக்குவது என்றால் கமாலுதீன் மதனி அன்று பேசியபோது தாக்கியிருக்கவேண்டும் ஆனால் நான் எந்த கருத்தையும் சொல்வதுக்கு முன்பு வாயை திறந்தவுடன் தாக்கினார்கள் என்றால் இவர்களுக்கு ஆள்தான் இலக்கே தவிர கொள்கை இல்லை என்ற ஆச்சரியமான உண்மையை அறிந்துகொண்டேன்.

இந்த ஜமாத்திலிருந்து பலர் நீக்கப்பட்டனர் அவர்கள் நீக்குவதற்கு நான் மட்டும் காரணமல்ல ஜாமத்தின் விதிகளும் அனைத்து நிர்வாகிகளுமே காரணம் அவர்கள் மீதான நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டுமானால் நான் காரணமாக இருந்திருப்பேன் ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் நானாக தான் இருக்கிறேன்.

இதில் அல்லாஹ் ஏதோ ஒரு நன்மையை நாடியிருப்பன் என்று நான் கருதுவதால் இதுபோன்ற விமர்சனங்கள் என்னைப் பெரிய அளவில் பாதிப்பதில்லை என்னைப் பொருத்தவரை இதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

நன்றி : உணர்வு இதழ் 


No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y