அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, February 28, 2012

கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29-02-12] கடைசி நாள்


மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இருப்பீர்கள் பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள் ஆனால் கூகுள் உங்களிடம் இதை மாற்றப்போவதாக அறிவித்து உங்களுக்கு தகவலை அறிவித்து இருக்கும் நீங்களும் வழக்கம் போல ஓகே கொடுத்து போய் இருப்பீர்கள் icon smile கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29 02 12] கடைசி நாள் நாம என்னைக்கு இதை எல்லாம் படித்து இருக்கிறோம். கணக்கு துவங்கும் போது ஒரு பெரிய Agreement வரும் 99 % மக்கள் அதை படிக்காமலே Accept செய்து விடுவோம். இது போல ஒன்றில் தான் ஒரு சிலர் நமக்கு வேட்டு வைத்து விடுகிறார்கள்.
நீங்கள் கூகுள் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் சமீபத்தில் நீங்கள் நிச்சயம் இதை கவனிக்காமல் இருந்து இருக்க முடியாது. தன்னுடைய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது அதாவது தன்னுடைய சேவைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டு வரப்போவதாகவும் இதை மார்ச் 1 முதல் செயல்படுத்தப்போவதாகவும் கூகுள் அறிவித்து இருந்தது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் Google Web History ஆகும். இது தான் தற்போது இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

Google Web History என்றால் என்ன?
நீங்கள் எந்த உலவியை (Browser) பயன்படுத்தினாலும் நீங்கள் எந்தெந்த தளங்கள் சென்றீர்கள் என்பது பற்றிய தகவல்கள் உலவியின் History யில் சேமிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் வைத்து இருக்கும் settings ஐ பொறுத்து. யாராவது விஷயம் தெரிந்தவர் என்றால் இதை நோண்டினால் நீங்கள் எந்தெந்த தளம் சென்றீர்கள் இணையத்தில் என்னென்ன பார்த்தீர்கள் என்று எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்.
இதையே கூகுள் எப்படி செய்கிறது என்றால்…கூகுள் சேவைகளில் நாம் என்னென்ன தளம் போகிறோம் எதை தேடுகிறோம் நம்முடைய விருப்பங்கள் என்னென்ன என்பது அனைத்தையும் சேமித்துக்கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் தளத்தில் உங்கள் பயனர் கணக்கு கொடுத்து உள்ளே சென்று இருக்கும் போது கூகுள் தேடுதலில் என்னென்ன செய்கிறீர்களோ அனைத்தும் சேமிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும். நீங்கள் How to remove the google web history என்று தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் பின் அந்தப் பக்கத்தை மூடி விட்டு புதிய பக்கத்தில் திரும்ப இதே வரியை தட்டச்சு செய்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே இதை தட்டச்சு செய்து இருந்ததால் அதுவே ஏற்கனவே நீங்கள் தட்டச்சு செய்த பழைய வரியைக் காட்டும். இது போல பல சேவைகளில் நீங்கள் செய்தது எல்லாம் சேமிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்.
இதில் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஏதாவது விவகாரமா தேடி இருந்தால் அதுவும் இதில் இருக்கும். மொத்தத்தில் உங்கள் ஜாதகமே இதைப் பார்த்தால் தெரியும். நாளை உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து ஆட்டையப்போட்டு இதில் போய்ப் பார்த்தால் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி விடும். எதை எதை தேடினீர்கள் என்று புட்டு புட்டு வைத்து விடும். கூகுளும் உங்கள் தேடுதலை அடிப்படையாக வைத்து செய்திகளை விளம்பரங்களை அனுப்பிக்கொண்டு இருக்கும்.
இதை எல்லாம் நீக்க நாளையே (29 Feb 2012) கடைசி நாள் அதனால் மறக்காமல் ஒத்திப்போடாமல் உடனே செய்து விடுங்கள். மார்ச் 1 க்கு பிறகு முடியாது. கூகுள் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து விடும்.
இதை எப்படி நீக்குவது?
https://www.google.com/history/ தளம் செல்லுங்கள் உங்கள் பயனர் கணக்கு கடவுச்சொல்லை (Password) கொடுத்தவுடன் பின்வரும் படம் போல வரும் இதில் நீங்கள் “Remove all web history” என்பதை க்ளிக் செய்தால் அனைத்து History யும் நீக்கி விடும் அதோடு இனி இது போல சேமிக்காது Pause செய்து விடும் உங்களுக்கு தேவை என்றால் On செய்து கொள்ளலாம் ஆனால் On (Resume) செய்ய வேண்டாம். கூகுள் தொடர்ந்து உங்கள் தகவல்களை எடுக்க முடியும் ஆனால் அனானிமஸ் ஆகத்தான் எடுக்க முடியும் உங்களையுடைய தகவல்கள் என்று கூற முடியாது.
Web History கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29 02 12] கடைசி நாள்
இதை செய்ய 2 நிமிடம் கூட ஆகாது வழக்கம் போல சோம்பேறித்தனப்பட்டு மறந்து விடாதீர்கள். நீங்கள் பல்வேறு கூகுள் கணக்குகளை வைத்து இருந்தால் அனைத்திற்கும் இது போல தனித்தனியாக செய்ய வேண்டும்.
நாளை தான் கூறலாம் என்று நினைத்தேன் இது பற்றி தெரியாதவர்கள் கடைசி நாளில் கவனிக்காமல் இருந்து விட வாய்ப்புண்டு என்பதால் இன்றே கூறி விட்டேன். என்னுடைய தளத்தை படிப்பவர்களுக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி icon smile கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29 02 12] கடைசி நாள் உங்கள் நண்பர்களிடமும் இந்த செய்தி பற்றி தெரிவித்து அவர்களையும் எச்சரிக்கை செய்து விடவும்.
ஆங்கிலத்தளங்கள் இது பற்றி அதிகம் எழுதிக்கொண்டு இருக்கின்றன தமிழில் ஏன் முக்கியத்தளங்கள் இது பற்றி அமைதி காக்கின்றன என்று புரியவில்லை.
கொசுறு
iPhone 5 கூகுள் வெப் ஹிஸ்டரியை நீக்க நாளையே [29 02 12] கடைசி நாள்உலகளவில் ஸ்மார்ட் ஃபோனில் சக்கைப் போடு போடும் iPhone தனது அடுத்த மாடலை வெளியிடப்போகிறது. புதிய மாடல் வரப்போகிறது என்றால் அது பற்றிய செய்திகள் இணையத்தில் இறக்கை கட்டி பறக்கும் அதிலும் iPhone க்கு சொல்லவே தேவையில்லை. கடந்த முறை iPhone 5 புதிய வடிவமைப்புடன் வரப்போகிறது என்று ஆவலுடன் இருந்த அனைவருக்கும் முந்தைய மாடலான iPhone 4 போல வடிவமைப்புடன் iPhone 4S என்று வெளியிட்டதால் அனைவரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர் இருந்தாலும் இதுவும் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது. தற்போது iPhone 5 விரைவில் வரப்போகிறது அது பற்றிய கற்பனைப் படமாக இணையத்தில் உலவும் படமே இது. 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y