அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, May 28, 2011

ரியாத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்


சவூதி அரேபியாவின் ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் 11வது மாபெரும் இரத்ததான முகாம் கடந்த 27-5-2011 அன்று நடைபெற்றது.
ரியாத் மண்டலம் நடத்திய இம்முகாமில் 230 பேர் இரத்ததானம் செய்தனர்.
ரியாத் மாநகரிலுள்ள மிகப்பெரும் மருத்துவமனைகளில் ஒன்றான கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் 27-05-2011 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இம்முகாம் 

காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இம்முகாமில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலத்தவர்களும் இலங்கை, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், பாகிஸ்தான், எகிப்து, சிரியா மற்றும் ஏமன் நாட்டை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
தனது உடன்பிறந்த சகோதரனுக்கு இரத்த தானம் செய்ய பலர் தயங்குவதோடு பணம் கொடுத்தால் யாராவது கொடுப்பார்களா என தேடும் நிலையில் கண்ணுக்கு தெரியாத ஒருவருக்கு இரத்த தானம் செய்ய நமது முகாமுக்கு மக்கள் கொளுத்தும் வெயிலில் போட்டி போட்டுக் கொண்டு வந்திருந்தனர்
அதில் ஒருவர், தான் 23வது முறையாக இரத்ததானம் செய்கிறேன் என்று கூறி மக்களை நெகிழ்ச்சியடைய செய்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல நிர்வாகிகளின் மேற்பார்வையிலும் அனைத்து கிளை நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சுமார் 20 வாகனங்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட இம்முகாமில், தமது சொந்த வாகனங்களில் மக்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவது மற்றும் காலை, மதியம் உணவு, தண்ணீர், குளிர்பானங்கள் வழங்குவது என தொண்டர் அணியினர் களைப்பின்றி செயல்பட்டனர். மாலை 5 மணிக்கு பிறகும் கொடையாளிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த நிலையில், காலையிலிருந்து தொடர்ச்சியாக பணியாற்றும் இரத்த வங்கி ஊழியர்கள் களைப்புற்ற காரணத்தால், 5 மணியோடு குருதிக்கொடை முகாம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இரவில் நன்றாக தூங்காதவர்கள், ஆன்டிபையாட்டிக் மருந்து, மாத்திரைகள் பயன்படுத்துபவர்கள், ஹீமோகுளோபின் குறைவு, பிளட் பிரஷர் அதிகமானவர்கள் போன்றோர் திரும்ப அனுப்பட்டதை தவிர்த்து 230 பேர் இரத்தானம் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில், மண்டலப் பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், மறுமை வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நடைபெறும் இம்மாதிரியான சமூக பணிகளில் நமது பங்களிப்பின் அவசியத்தை கூறி, துஆவுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மாநகரில் நடத்தும் 
11வது இரத்த தான முகாமாகும். முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைகளுக்காகவும் அடிக்கடி இரத்ததானம் வழங்கப்பட்டு வருகின்றது.


அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து விருதுகளை பெற்று வருவது போல, சவூதி அரேபியாவிலும் வளைகுடா மண்டலங்களின் இரத்த தானம் மூலம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!





No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y