அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, February 13, 2011

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பள்ளிவாசலில் மவ்லித் ஓத தடை


நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சுலைமான் நபி பள்ளியல் கடந்த 11-2-11 அன்று  பள்ளி நிர்வாகம் மவ்லித் ஓத தடை விதித்துள்ளது.ஜமாஅத் பொது மக்கள் 450 க்கு மேற்பட்ட குடும்பங்கள் மவ்லித் ஓதக் கூடாது என கையெழுத்திட்டு கொடுத்ததால் பள்ளி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
இதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் பின்பற்றி அந்த முஹல்லாக்களில் கையெழுத்து பெற்று ஜமாஅத் நிர்வாகிகளிடம் வற்ப்புறுத்த வேண்டும் அவர்கள் அந்த பாவத்தை தொடர்ந்து செய்தால் நாங்கள் உங்களின் 
ஜமாஅத்திலிருந்து நீங்கிக்கொள்கிறோம் என்று கட்டாயப்படுத்த வேண்டும். 

 


மக்கள் சக்த்திக்கு முன்னாள் யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்பதை அனைவரும் அறியவேண்டும் படைத்தவனை மட்டுமே துதிக்கவேண்டிய பள்ளிவாசலில் மனிதர்களை துதிப்பது பாவம் என்பதையும் மறுமை நாளில் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் நாமும் அல்லாஹ்வின் முன்பு குற்றவாளிகளாக நிற்போம் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

நமது நாட்டைப் பொறுத்தவரை ஈமானின் முதல் நிலையை கையில் எடுக்க முடியாவிட்டாலும் ஈமானின் இரெண்டாம் நிலையை நாம் ஒவ்வொருவரும் கையில் எடுக்கலாம் ஜாமாத் நிர்வாகிகளிடம் முஹல்லா வாசிகள் வாக்குவாதம் கூட நடத்தலாம் அவ்வாறு நாம் செய்ய வில்லையென்றால் மறுமையில் நாம் நிச்சயம் குற்றவாளிகளாக நிற்போம் என்பதை கீழ்க்கண்ட குர்ஆன வசனம் மூலம் தெளிவாக விளங்கலாம்.

(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்." (அல் குரான் 7:164)

 மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். 3;110 

நன்மையை ஏவி தீமைகளை தடுத்து அல்லாஹ் விரும்பிய சிறந்த சமுதாயமாக நாம் மாறுவோம் இன்ஷா அல்லாஹ் .

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y