அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, February 28, 2011

2011-12 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு!



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
புதுடெல்லி:  மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று காலை 11 மணியளவிலிருந்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் 2011-12 ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் ஊரக வீட்டு வசதி நிதியின் அளவு ரூ. 3000 கோடியாக அதிகரிப்பு, ஊரகக் கடன்களை வழங்க நபார்டு வங்கிக்கு ரூ. 12,000 கோடி ஓதுக்கீடு போன்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

2011-12 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஒப்புதல்

* கல்விக்கான நிதி ஒதுக்கீடு 24 சதவீதம் அதிகரிப்பு.

* கல்வித்துறைக்கு ரூ. 52,057 கோடி நிதி ஒதுக்கீடு.

* நாடு முழுவதும் 15 பெரும் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.

* நாடு முழுவதும் 24 குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

* யூரியாவுக்கு புதிய உரக்கொள்கை ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை

* நபார்டு எனும் விவசாய மேம்பாட்டு வங்கியின் நிதி ஆதாரத்தை உயர்த்த ரூ.3,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

* உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்ட 2,500 கோடி டாலர்களுக்கு உள்கட்டமைப்புப் பத்திரங்கள் வெளியிடப்படும்.



* பெரு நிறுவனங்கள், வெளிநாடுகளில் நிதி திரட்டுவதற்கு வசதியாக 4,000 கோடி டாலர் அளவிற்கு பத்திரங்களை வெளியிட அனுமதி அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படும்.

* எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியம் குறித்து பணிக்குழு அமைக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.

* உரத்திற்கும், மண்ணெண்ணெய்க்கும் நேரடியாக மானியங்கள் அளிக்கப்படும்.

* உரங்கள் எளிதாகக் கிடைக்கும் வகையில் உரக்கொள்கை மாற்றியமைக்கப்படும்.

* சத்துணவு அடிப்படையில் உரக்கொள்கை மாற்றி அமைக்கப்படும்.

* வேளாண்துறையில் தனியார் முதலீட்டை அதிகரிக்க புதிய திட்டங்கள்.

* பொதுத்துறை வங்கிகளில் கூடுதலாக ரூ. 6 ஆயிரம் கோடி முதலீடு.

* உணவுப் பொருள் வீணாவதைத் தடுக்க பதப்படுத்துதல் திட்டம் ஊக்குவிக்கப்படும்.

* வேளாண்பொருட்களை சேமித்து வைக்க கிராமங்களில் கிடங்கு வசதி ஏற்படுத்தப்படும்.

* மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கூடுதல் நிதி வழங்க ஏற்பாடு.

* விவசாயிகளுக்கு 3 சதவிகிதம் கடன் மானியம் வழங்கப்படும்.

* வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க 5 அம்ச திட்டம்

* எண்ணெய் வித்து உற்பத்தியை பெருக்க ரூ. 300 கோடியில் புதிய திட்டம்

* 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பு தொகை அதிகப்படுத்தப்படும் என்றார்.

* பாரத் நிர்மாண் சமூக மேம்பாடு திட்டத்திற்கு ரூ. 58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* உணவுப் பாதுகாப்பு திட்டம் இந்த ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும்.

* பணவீக்கத்தை குறியீடாகக் கொண்டு தேசிய ஊரக வேலை திட்டத்தின் ஊதியம் நிர்ணயம்

* வேளாண் துறையில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

* கைத்தறி நெசவாளர்களுக்கு நபார்டு வங்கிளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* புதிய திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவர்.

* விவசாயத்தை மேம்படுத்த கூடுதலாக ரூ.7860 கோடி ஒதுக்கீடு

-* விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வரும் கடன் 4.75 லட்சமாக உயர்ந்துள்ளது.

* வேளாண்துறையில் தனியார் முதலீடுகளை அதிகப்படுத்த புதிய திட்டங்கள்

* உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த உணவு பதப்படும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்;

* இயற்கை விவசாய முறைகளை மேம்படுத்தி அதன்மூலம் தங்கள் விளைநிலங்களில் இருந்து நல்ல விளைச்சலை விவசாயிகள் பெறுவதற்கு அரசு உதவும்.

* நாட்டின் மேற்கு பகுதியில் பசுமை புரட்சியை அதிகரிக்க கூடுதலாக ரூ.400 கோடி ஒதுக்கீடு

* குறிப்பிட்ட தேதிக்குள் கடன்களை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கடனில் 3 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்.

* வீட்டு கடன் தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்;

* பொதுத்துறை திட்டங்களும் அதிகரிக்கப்படும்

* அரசுத்துறை வங்கிகளில் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு செய்யப்படும்.

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதல் முதலீட்டு நிதி வழங்க திட்டம்.

* நுண்ணிய கடன் வழங்க சிட்பிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* முதலீடு உச்சவரம்பு 20 பில்லியன் டாலரில் இருந்து 25 பில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* கிராமப்புற அடிப்படை கட்டமைப்புகளுக்கான நிதி 18,000 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.

* யூரியாவுக்கு புதிய உரக்கொள்கை ஏற்படுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும்.

* மண்ணெண்ணை மற்றும் உரத்துக்கு நேரடி வரி மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வரி விதிப்பு முறை எளிமைபடுத்தப்படும்.

* உத்தேச நேரடி வரி விதிப்பு சட்டம் அமலுக்கு வரும்போது வரி விகிதங்கள் குறையும். சரக்கு மற்றும் சேவை வரிகள் செயல்பாட்டுக்கு வரும்போது * பொருட்கள் மீதான வரி குறையும். அடுத்த நிதியாண்டில் இரு சட்டங்களையும் அமலுக்கு கொண்டு வர திட்டம்.
* அரசு நிறுவனப் பங்குகளை  தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டம் தீவிரப்படுத்தப்படும்.

* அங்கன்வாடி பணியாளர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த மாத ஊதியமான ரூ.750 வரும் நிதியாண்டில் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது.

* ராஷ்ட்ரிய கிரிஷி யோக திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் அகண்ட அலைவரிசைத் தொடர்புகள் ஏற்படுத்தப்படும்.

* ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.7,860 கோடி நிதி ஒதுக்கீடு.

* மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்துகள் தொடர்பான தேசக் கொள்கை வகுக்கப்படும்.

* சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி அளவு 17 விழுக்காடு உயர்த்தப்பட்டு ரூ.1.6 லட்சம் கோடியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பாரத் நிர்மாண் திட்டத்திற்கு ரூ.58,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* வரும் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.40,000 கோடிக்கு தனியார் முதலீட்டிற்கு அனுமதிக்கப்படும்.

* ரூ.15 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு 1 விழுக்காடு வட்டி மானியம் அளிக்கப்படும்.

* இறக்குமதிகளை வேகமாக துறைமுகங்களில் இருந்து வெளியே கொண்டு செல்ல வசதியாக சுய மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்.

* நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அளிக்கப்படும் நிதி ஒதுக்கீடு 23 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது.

* 80 வயதிற்கும் அதிகமான குடிமக்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.200 லிருந்து ரூ.500 ஆக அதிகரிப்பு.

* பாதுகாப்புத் துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ.1.64 லட்சம் கோடியாக உயர்வு.

* ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டுத் தேவைகளுக்கு ரூ.8,000 கோடி ஒதுக்கீடு.

* வடகிழக்கு மாநிலங்களுக்கும், இதர மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ்வரும் மாநிலங்களின் மேம்பாட்டிற்கும் ரூ.8,000 கோடி ஒதுக்கீடு.

* மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.26,760 கோடி ஒதுக்கீடு.

* நீதித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி 3 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.3,000 கோடியாக ஒதுக்கீடு.


* தனி நபர் வருமான வரி செலுத்த வேண்டிய உச்சவரம்பு அதிகரிப்பு.

* தற்போது வருமான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு ரூ.1 லட்சத்து 60,000 ஆக உள்ளது. வரி விலக்கு உச்சவரம்பு ரூ.1 லட்சத்து 60,000லிருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரிப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வரை உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டாம்.

* மூத்த குடிமக்கள் வரி செலுத்த வயது வரம்பு 65 லிருந்து 60ஆக குறைக்கப்படுகிறது.

* மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு வரம்பு ரூ.2,40,00-லிருந்து ரூ.2,50,00ஆக உயர்த்தப்படுகிறது. ரூ.2,50,000 வரை வருமான உள்ள முதியவர்களுக்கு வருமான வரி தள்ளுபடி.

* தனி நபர் வருமான வரி பிரிவில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு புதிய சலுகை அறிமுகம்.

* 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டாம். தனி நபர் வரிச் சலுகைகளால் ரூ.11,500 கோடி அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும்.
நன்றி:தினகரன் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y