அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, February 28, 2011

எது முன்னேற்றம்? மகளிர் தின சிந்தனைகள் !!!


மார்ச் 8, உலக மகளிர் தினம் மகளிர் தினத்தன்று பெண்கள் அடைந்து விட்ட முன்னேற்றத்திற்கு எடுத்து வைக்கப்பட்ட ஆதாரங்கள்:
அடுப்பு ஊதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு என்ற காலம் மலையேறிப் போய்பெண்கள் கல்வித் துறையில் ஆண்களை மிஞ்சிவிட்டனர்.
வீட்டிற்கு வெளியே வந்தாலே அதிசயமாகப் பார்க்கப்பட்ட பெண்விண்வெளிப் பயணம் வரை செல்லுமளவிற்கு முன்னேற்றம்.
உலகத்தில் அதிக ஊதியம் பெறக் கூடியவராக உயர்ந்த பதவியில் இந்திரா நூயி என்ற பெண்மணி தான் இருக்கிறார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் பதவியை வகித்துக் கொண்டு பாராளுமன்றத்திலே முதல் முறையாக உரையை நிகழ்த்தினார்.
உலகத்தின் தற்போதைய வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவிலும் கூட ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண் போட்டியிடும் அளவிற்கு முன்னேற்றம்.
இந்தியா உள்பட பல நாடுகளில் அரசியல் ரீதியாகப் பெண்கள் உயர்ந்த பதவியில் இருக்கும் யதார்த்த நிலை.
நகர்மன்றங்களிலும் ஊராட்சிகளிலும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள தனி வார்டுகள்.
இவ்வாறு பல படித்தரங்களை பெண் சமுதாயம் அடைந்து விட்டதாக உரைகளின் வாயிலாகவும் செய்தித் தாள்கள் வாயிலாகவும் தொலைக்காட்சிகளின் சிறப்புச் செய்திகளின் வாயிலாகவும் அறிய முடிந்தது.
இந்த ஆண்டு மகளிர் தினத்தில் மிகவும் வலியுறுத்தி வைக்கப்பட்ட கோரிக்கைகள் சில:-
பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வேண்டும்.
ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வெளியே சென்று வேலை செய்வதால் வீட்டு வேலைகளில் பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் பங்கெடுக்க வேண்டும்.


இவையெல்லாம் ஒரு புறமிருக்கபெண்களைப் போகப் பொருட்களாகக் காட்டும் சினிமாக்களைப் பற்றியும் சின்னத்திரைகளைப் பற்றியும் ஒரு சிறு கருத்தைக் கூட யாரும் கூறவில்லை. இதுவும் பெண்கள் அடைந்து விட்ட முன்னேற்றத்தின் அறிகுறியாஅல்லது இவ்வாறு காட்சிப் பொருட்களாக ஆக்கப்படுவதை நவீன சமுதாயம் ஆதரிக்கிறதா?
எவ்வளவு தான் கல்வியில் முன்னேறி விட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட பொருளாதாரத்தில் செழிப்பான நிலையிலுள்ள நாடுகளில் பணியாற்றினாலும்ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டுக் கொடுமைகளை நிகழ்த்தும் வக்கிர புத்தியுள்ளவர்களின் (மாமியார் என்ற பெண் உள்பட) கொடூரங்களிலிருந்து பெண்ணினத்தைக் காப்பாற்ற என்ன வழி?
சமுதாயத்தில் சம அந்தஸ்து எனக் கருதப்படக் கூடிய வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கு கணிசமாக இருந்தாலும் வேலை செய்யும் இடத்திலும் அதற்கு வெளியேயும் பெண்களுக்கு இழைக்கப்படும் தொல்லைகளிலிருந்து பெண்ணினம் விடுபட என்ன தீர்வு?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையைத் தேடாமல் வெறும் கோஷங்களுடன் முன்னேற்றம் என மார்தட்டிக் கொள்வதில் எவ்விதப் பயனுமில்லை.
நாம் வாழக்கூடிய காலச் சூழ்நிலையில் நம்முடைய சமுதாயப் பெண்களுக்கும் நிறையவே பொறுப்பு இருக்கிறது. உணர்வுகளுக்கு ஆட்படுத்த வைக்கும் சீரியல்கள் மற்றும் சினிமா போன்ற மாயைகளிலிருந்து நம் சமுதாயப் பெண்மணிகள் வெளியே வந்துசமுதாயத்தின் கல்வி நிலையை மேம்படுத்த எல்லா வித முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு அமைத்த சச்சார் கமிட்டிமுஸ்லிம்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது. இத்துயர நிலையிலிருந்து சமுதாயம் விடுபட பெண்களின் பங்கு மிகவும் அவசியமானது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் பெண்ணினத்திற்கு உத்தமத் தோழர்கள் கொடுத்த கண்ணியத்தைப் பாருங்கள்.
என்னிடத்தில் நபி (ஸல்) அவர்கள்திருமணம் முடித்துக் கொண்டாயாஜாபிரே! என்று கேட்டார்கள். நான் ஆம் என்று கூறினேன். கன்னி கழிந்த பெண்ணையாகன்னிப் பெண்ணையாஎன்று கேட்டார்கள். நான், (கன்னிப் பெண்ணை) அல்லகன்னி கழிந்த பெண்ணைத் தான் என்று கூறினேன். உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதாஎன்று கேட்டார்கள். நான்அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒன்பது பெண் மக்களை விட்டு விட்டு உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே பக்குவமில்லாத அவர்களைப் போன்று இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாகஅவர்களுக்குத் தலை வாரி விட்டுஅவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள்நீ செய்தது சரி தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)நூல்: புகாரி (4052)
(என் சகோதரிகளான) சிறு பெண் குழந்தைகளை விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காகவும் ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே நான் மணமுடித்துக் கொண்டேன். (புகாரி 2406)
இவ்வாறு ஒவ்வொரு தாய்மார்களும் தங்களுடைய குழந்தைகளைப் பராமரித்துகல்வி எனும் செல்வத்தைப் புகட்டினார்கள் என்றால் நம் சமுதாயம் முன்னோக்கிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாயே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்கன் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி)தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாயாவாள். ஆகநீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)நூல்: புகாரி (5200)
இதைப் போலவே சமுதாயத்தில் புரையோடி இருக்கும் வரதட்சணை உள்பட எல்லா தீமைகளை ஒழித்து கட்டுவதிலும் ஆண்களுக்கு ஈடாகப் பெண்களுக்கும் பங்கு உள்ளது என்பதை சகோதரிகள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
நம்பிக்கை கொண்ட ஆண்களும்பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)
மேலும் நம்முடைய ஈருலக வாழ்வும் வளம் பெற இஸ்லாமிய மார்க்கம் நமக்குத் தெளிவான போதனைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. பெண்ணினத்தைக் கொடுமைப்படுத்திய மனங்கள் பண்பட்டுஅவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதற்குக் காரணமாக அமைந்த அந்த அறிவுரைகளை நம்முடைய வாழ்வில் மிளிரச் செய்ய ஒவ்வொரு பெண்மணியும் சபதம் எடுக்க வேண்டும்.
பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம்எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள்பெண்களுக்கு ஒருநாள் உபதேசம் செய்தார்கள். அதில் ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகி விடுவார்கள் எனக் கூறியதும் ஒரு பெண் இரு குழந்தைகள் இறந்தால்...எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரு குழந்தைகள் இறந்தாலும் தான் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)நூல்: புகாரி (1249)
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் தமிழகத்திலே தவ்ஹீத் எழுச்சிக்குப் பின்னர் பெண் ஆலிமாக்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் அவர்களைக் கொண்டு சமுதாயத்தில் சத்திய மார்க்கத்தை நிலை நாட்ட பெண்கள் முயற்சிக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது பெண்களுக்கான மார்க்க நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட முயற்சி செய்ய வேண்டும்.
வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் வாழச் செய்துநம்முடைய ஈருலகங்களையும் செழிக்கச் செய்வானாக!

இப்னு சாபிரா

தீன்குலபெண்மனி


No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y