அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, January 29, 2013

மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா ?

மனுஷ்ய புத்திரனுக்கு கொலை மிரட்டல் விட்டதைக் கண்டித்து சிலர் அறிக்கை விட்டுள்ளார்களே? மசூத் கடையநல்லூர்.

மனுஷ்யபுத்திரன் எழுத்தாளராக ஆனது அவரது எழுத்தாலும் அறிவாலும் அல்ல. அவரது எந்த வாத்த்திலும் அறிவார்ந்த வாதம் இருக்காது. ஆனால் அவரது உடல் நிலை காரணாக சிலர் பச்சாதப்ப்பட்டு பிழைப்புக்கு வழி ஏற்படுத்தலாமே என்று அவரது எழுத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

தன்
மீது பச்சாதாபம் ஏற்படுவதற்காக இவர் எதுவும் செய்யக் கூடியவர் என்பது தான் எனது கணிப்பு.

ஒருவர் ஒரு களத்தில் தோற்று விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் என்ன செய்வார்? அது பற்றி பேசாமல் ஒதுங்கி விடுவார். ஆனால் இவர் என்ன செய்வார் என்றால் என்னை தோற்கடித்து விட்டார்கள் என்று மீடியாவில் புலம்புவார். நாம் விவாத்த்துக்கு இவரை அழைக்கிறோம். அழைப்பை ஏற்கும் அளவுக்கு இவரிடம் உண்மை இல்லாததால் அதை அவரால் ஏற்க முடியவில்லை. ஆனால் இது அவருக்கு அவமானமானதாகும். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் என்னை விவாத்த்துக்கு அழைக்கிறார்கள். நான் போகவில்லை என்று கலைஞர் டிவியிலும் ஹிந்து பத்திரிகையிலும் ஒப்பாரி வைக்கிறார். பாவப்பட்ட இண்டஹ் மனிதனை இந்தப் பாடுபடுத்தலாமா என்று படம் காட்டுவதே இவரது நோக்கம். கொலை மிரட்டல் என்பதும் இது போன்றது தான்.

இவருக்கு கொலை மிரட்டல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல் துறைக்கு சென்று கொலைமிரட்டல் விட்டவர்களுக்கு எதிராக புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். முற்போக்குகளாவது கொலை மிரட்டலுக்கான மெயில் அல்லது கடிதம் அல்லது போன் நம்பர் ஆகியவற்றுடன் அவரை அழைத்துச் சென்று புகார் கொடுத்திருக்க வேண்டும்.

அல்லது அநாமதேயமான மிரட்டல் என்றால் அது பற்றி அலட்சியப்படுத்த வேண்டும். மொட்டை மிரட்டல் என்றால் எனக்கு இது போல் ஆயிரத்துக்கும் மேல் வந்துள்ளது. நான் அதுபற்றி புலம்பிக் கொண்டிருக்கவில்லை. அது என்னைப் பாதித்தால் காவல் துறையை நான் அணுகி அதை எதிர்கொண்டிருப்பேன்.

அப்படி ஒன்றும் செய்யாமல் இருப்பதில் இருந்து கொலை மிரட்டலை இவரே தயாரித்துக் கொண்டார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. யாராவது கொலை மிரட்டல் விட்டால் அது கண்டிக்கத்தக்கது என்பதில் நாமும் உடன்படுகிறோம். . ஆனால் இது தனக்குத்தானே இவர் அளித்துக் கொண்டது என்ற சந்தேகம் தான் நமக்கு வருகிறது.

 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y