அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, January 23, 2013

விஸ்வரூபம் திரைப்படம் கிருத்துவ மிஷனரிகளின் தூண்டுதலா?

முஸ்லிம்களை மிகவும் கேவலமாக திட்டமிட்டே நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வரும் 25 தேதி திரையிட இருந்த நிலையில் இஸ்லாமிய இயக்கங்களில் பெரும் முயற்சியால் படம் வெளியிட தடை விதித்து  அணைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த திரைப்படம் குறித்து ஆரம்பம் முதலே கூத்தாடி கமலுக்கு  வெளியிடுவதில் ஒரு வித குழப்பம் இருந்தே வந்துள்ளது ஆனாலும் ஏதோ ஒரு தைரியத்தில் இந்த திரைப்படம் குறித்து கமல் முன்னுக்கு பின் முரணான கருத்தையே கூறிவந்தார் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தலைவர் பிஜே ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது துப்பாக்கி படத்தில் நாங்கள் பிந்திவிட்டோம் ஆனால் இந்த படத்தை  வெளியிடும்போது  எங்கேயும் நாங்கள் ஓட விடமாட்டோம் என்று அதற்க்கான காரணம் இத்திரைப்படம் பற்றி வெளியிட்டுள்ள முன்னோட்ட காட்சிகளே மிகவும் மோசமாக இருக்கிறது அந்த படத்தின் பெயரையே கமல் அரபி எழுத்தைப் போல் எழுதி காட்டியுள்ளார் ஒரு பானை சோத்துக்கு ஒருசோறு பதம்போல இதன் முன்னோட்ட கட்சிகளியே இப்படி என்றால் இந்த திரைப்படம் வெளிவந்தால் எப்படி இருக்கும் ஒட்டு மொத்த முஸ்லிகளும் பொங்கி எழுந்து விடுவார்கள் அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

இதை கவனத்தில் கொண்டு இந்த திரைபடத்தை எப்படியாவது மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்த கமல் அதற்கு ஒரு தந்திரத்தை கையாள முயன்றார் ஆனால் அதிலும் திரைப்பட உரிமையாளர்கள் மூலம் பிரச்சினை வந்தது காரணம் இந்த திரைப்படத்தை DTH மூலம் வீட்டிற்க்கே கொண்டு சேர்க்கும் முயற்சியாக ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பதம் போட்டார் ஆனால் அதை அணைத்து திரையரங்கு உரிமையாளர்களும் எதிர்த்தனர் எதிர்தத்தோடு  மட்டுமல்லாமல் இனிமேல் இந்த கூத்தாடி கமலின் எந்த திரைப்படங்களையும் தங்களின் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்று கூறி கூத்தாடி கமலை கதிகலங்க செய்தனர் பிரச்சினையின் விஸ்வரூபத்தை அறிந்த கூத்தாடி கமல் தியேட்டர் உரிமையாளர்களுடன் சமரசமானார்.

இதனை அடுத்து வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை இந்தியா மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகளிலும் வெளியிடபோவதாக அறிவித்தார் இந்நிலையில் அணைத்து முஸ்லிம்களின் கூட்டமைப்பு கடந்த ஒரு மாத காலமாக கமலை தொடர்புகொண்டு இந்த திரைப்படத்தை வெளியிடும் முன்பு தங்களுக்கு திரையிட்டு காண்பிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் முதலில் முரண்டு பிடித்த கமல் பிறகு இறுதியாக சென்ற 21ம் தேதி மாலை திரைப்படத்தை பதிமூன்று பேர் கொண்ட முஸ்லிம் அமைப்பினருக்கு போட்டு காண்பிதுள்ளார்.

அந்த திரைப்படத்தை பார்த்த முஸ்லிம் இயக்க தலைவர்கள் அதிர்ந்து போனார்கள் அவர்கள் இந்திய திரைப்பட வரலாற்றில் முஸ்லிம்களை இவ்வளவு கேவலமாக யாரும் காட்டியதில்லை என்ற அளவிற்கு அந்த படத்தின் காட்சிகள் அமைத்திருந்தன முஸ்லிம் தலைவர்கள் கேட்டா கேள்விக்கு கமல் திமுர் தனமாகவும் அகம்பாவமாகவும் சிறிதும் சலனப்படமால் அந்த திரைப்படம் குறித்து மிகவும் பெருமையாக இந்த திரைப்படம் ஒரு ஒரு போர்க்களம் ஒரு போர்க்களம் இப்படிதான் இருக்கும் என்றும் கூறியுள்ளார் இந்த விசயத்தை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனடியாக களத்தில் இறங்கியது இதற்கு மேலும் தாமதிக்க கூடாது உடனே இதை சரியாக கையாண்டு இந்த திரைப்படதிற்கு தடை வாங்கவேண்டும் அப்படி மீறி வெளியிட்டால் முன்பு டிஎன்டிஜே மாநிலதலைவர் அறிவித்ததுபோல் திரையிடும் அணைத்து திரையரங்குகளும் முற்றுகையிடுவது என்றும் அவசர நிர்வாக குழு கூடி முடிவு செய்தனர்.

23.01.2013 அன்று தமிழக உள்ததுறை செயலாளரையும் மற்றும் தமிழக காவல்துறை ஆணையரையும் சந்தித்த டிஎன்டிஜே மாநில நிர்வாகிகள் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கவேண்டும் இல்லையென்றால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்ப்படும் என்றும் கூறினார்கள்  இதனை அடுத்து இன்று காலை கொடாநாட்டிலிருந்து திரும்பிய தமிழக முதல்வர் தலைமையில் விவாதித்து இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க அணைத்து மாவட்ட ஆட்சியருக்கும் உள்துறை செயலாளர் உத்தரவிட்டார்.

இங்கே தமிழகமே கொந்தளிதுக் கொண்டிருக்குபோது எந்த வித அச்சமும் இல்லாமல் கமல்ஹாசன் அமெரிக்க சென்றுவிட்டார் 100கோடி ரூபாய் பொருட்சிலவில் எடுத்த திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ள இந்த நிலையில் அங்கெ அமேரிக்கா செல்லவேண்டிய அவசியம் என்ன வந்தது அவ்வளவு அவசரமாக யாரைப் பார்க்க சென்றார் இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளரையா சந்திக்கவா ஏற்கனவே இன்னொசென்ஸ் ஒப் முஸ்லிம் என்ற திரைப்படத்தை தயாரித்த கிருத்துவ மிஷினரிகல்தான் இந்த திரைப்படத்தையும்  தயாரித்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழகம் மற்றும் புதுவையை தொடர்ந்து இந்த திரைப்படத்தை வளைகுடா நாடுகளில் வெளியிட அணைத்து வளைகுடா நாடுகளும் தடை விதித்துள்ளன ஆனால் முஸ்லிம்கள் அதிகம் வாழக்கூடிய இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம்கள் ஆட்சியில் பங்கு பெற்று ஆட்சி நடத்தும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இத்திரைப்படம் வரும் 25ம் தேதி திரையிட இருக்கிறார்கள் ஆனால் வாய்  சவடால் மட்டுமே விட்டு முஸ்லிம்களை ஏமாற்றி ஓட்டுப்பொறுக்கும் அங்கேயுள்ள முஸ்லிம்லீக்கர்கள் இதுவரை இத்திரைப்படம் குறித்து எந்த வித சலனத்தையும் வெளிக்காட்டவில்லை வாய்மூடி மவுனிகளாகவே இதுவரையிலும் உள்ளனர்.

சரி இவர்கள் தான் இப்படியென்றால் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகின்றோம்  என்று புறப்பட்டு இன்று முனை மழுங்கிய கத்தியாகிப்போன பாப்புலர் பிரண்ட் என்ற அமைப்பினரும் கூட இப்பொழுதுவரை கேரளாவில் ஒன்றும்  சொல்லவில்லை செய்யவில்லை.

இப்படி அண்டை மாநில நிகழ்வை பார்க்கும்போது இந்தியாவிலுள்ள அணைத்து மாநில முஸ்லிம்களுக்கும் தமிழக முஸ்லிம்களே முன்மாதிரியாக திகழ்கின்றனர் அதற்கு காரணம் நாம் கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கை உண்மயிலேயே இந்த கொள்கையில் அல்லாஹ்  நம்மை ஆக்கியதற்கு நாம் படைத்தவனுக்கு நித்தம் நன்றி சொல்லவேண்டும் இந்த ஏகத்துவ கொள்கையை தமிழகத்தில் வேரூன்ற பாடுபட்ட சகோதர்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் புரிய வேண்டும்.

முஹம்மது உபைஸ்  

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y