அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, January 13, 2013

வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் வெறியாட்டம்! கண்டித்து களமிறங்கிய முஸ்லிம்கள்!!

e
பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்களை அந்தக் கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுதந்திர இந்தியாவில் கொண்டு வரப்பட்டதுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டம். இந்த சட்டத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஜாதியைச் சொல்லி யாராவது திட்டினால், இந்த சட்டத்தின் மூலம் அவர்களை சிறைக்கு அனுப்பலாம். அதுமட்டுமல்லமால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான பலதரப்பட்ட கொடுமைகளுக்கு தகுந்தாற்போல இந்த சட்டத்தின் வாயிலாக ஆயுள் தண்டனை அல்லது 10ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை வழங்கும் வகையிலும் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.


நிலைமை தலைகீழ்:
ஆனால் இப்போதுள்ள நிலையோ தலைகீழாக மாறிவிட்டது. தாழ்த்தப் பட்டவர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சொல்லி தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு அவர்களை உள்ளே தள்ளுவதற்குத்தான் தாழ்த்தப்பட்ட சகோதரர்களில் பெரும்பாலனவர்கள் இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.
அப்பாவிகள் மீது இந்த சட்டம் பாயும்போது வன்கொடுமையிலிருந்து அவர்களை நாம் காப்பாற்ற வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு இந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சொல்லி அப்பாவிகளை பயம்காட்டி, “நான் நினைத்தால் உன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன்” என்று மிரட்டுவதற்கும், பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கும் பயன்படுத்தப்படும் கருவியாக இந்தச் சட்டம் மாறியுள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.

அப்பாவியான ஒரு முஸ்லிம் தமிழாசிரியர் மீது இந்த சட்டத்தின் பெயரைச் சொல்லி ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் பொய்ப் புகார் கொடுக்க அந்தப் புகாரை வாங்கிய போலீசார் அப்பாவி தமிழாசிரியர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள சம்பவம் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூர் சம்பவம்:
கடந்த 3.12.2012 அன்று காலை 7.30 மணியளவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வாணத்தோடு காதர் நாகூர் (வயது 80) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் கடையநல்லூர் மெயின் பஜார் பூக்கடை அருகில் சென்று கொண்டிருந்தார். கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச்சார்ந்த ஓய்வு பெற்ற இராணுவவீரர் திரு.வேல்சாமி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து காதர் நாகூர் என்பவரின் மோட்டர் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் இருவண்டிகளுக்கும் எந்த சேதமும் இல்லாமல் வேல்சாமி என்பவர் மட்டும் சிறிய காயத்துடன் இருவரும் இறையருளால் உயிர் பிழைத்தனர்.
உடனே வேல்சாமி என்பவர் பெரியவரை கீழே தள்ளி வண்டிச் சாவியை பிடுங்கிக்கொண்டார். விபத்தை நேரில் பார்த்த மாவடிக்காலை சார்ந்த நாயக்கர் சமூகத்தைச்சார்ந்த செங்கலமுடையார் என்பவர் வேல்சாமியிடம் உன்னிடத்தில்தானே தவறு உள்ளது. ஏன் பெரியவரிடம் தகறாரு செய்கிறாய்? என்று கேட்டார். இதையும் கேட்காமல் வேல்சாமி பிடிவாதமாய் வம்பு செய்ய, சாலை முழுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கூட்டம் அதிகமாக கூடிவிட்டது.

இதனால் கூட்டத்தில் உள்ளவர்கள் சாவியைக் பிடுங்க முயற்சித்தபோது தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த காவல் துறையினரை கண்டவுடன் வேல்சாமி தனது சட்டையை கிழித்துக்கொண்டு நாடகமாடியுள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் இரு நபர்களையும், காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அப்போது நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த செங்கலமுடையார் என்பவர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நடந்த சம்பவங்களை உதவி ஆய்வாளர் சிவன் அவர்களிடம் கூறியுள்ளார். காவல்துறை அதைக்கண்டு கொள்ளாமல் இதையெல்லாம் தாங்கள் நீதிமன்றம் சென்று சாட்சியாகச் சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளனர்.

பொய்ப் புகார்:
அதன்பின்னர் வேல்சாமி தனது மருமகன் வக்கீல் பூராசன் என்பவருடன் காவல் நிலையம் வந்தார். அங்கு ஒரு பொய்யான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் காதர் நாகூர் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய மூன்று நபர்கள் தன்னை ஜாதியைச்சொல்லி திட்டியதாகவும், அடித்ததாகவும் பொய்யான புகாரைக் கொடுத்தார். அதன்பின் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்வதாக சொன்ன காவல் உதவி ஆய்வாளர் சிவன் அவர்கள் விசாரணை செய்யாமலே குற்ற எண் 459/12 U/S 294 (b) 323 506 (1) IPC And 3(1) X of SC/ST (P&A) 1989 ஆகிய பிரிவின்படி 4.12.2012 அன்று வழக்கு பதிவு செய்துள்ளார். உடனடியாக காதர் நாகூர் உட்பட நான்கு நபர்களும் தலைமறைவாகி மதுரை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமின் பெற்றனர்.

அதன்படி 21.12.2012 அன்று தனது மகனான ஆசிரியர் முகைதீன் பிள்ளை காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமின்படி கையெழுத்திட அழைத்துச்சென்றார். அப்போது உதவி ஆய்வாளர் முன் கையெழுத்து போட்டுவிட்டு வெளியில் வரும்போது வழக்கில் தொடர்பு இல்லாத தாருஸ்ஸலாம் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் அவர்களை காவல் நிலையத்தில் இருக்கச் சொல்லிவிட்டு உடனடியாக மனுதாரர் வேல்சாமியையும், வக்கீல் பூராசனையும் தொலைபேசியில் அழைத்து இவர்தான் என்னை அடித்தார் என்று வேல்சாமியை விட்டு சொல்லச் செய்து வேல்சாமி என்பவரிடம் எழுத்துப்பூர்வமாக ஒரு மனுவை வாங்கி உடனடியாக திடீரென தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அநியாயமான முறையில் காவல்துறை கைது செய்துள்ளனர்.

இதனை அறிந்து காவல் நிலையம் வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் உதுமான் மைதீன் என்பவர் காவல் உதவி ஆய்வாளரிடமும், வேல்சாமி மற்றும் வழக்கறிஞர் பூராசன் ஆகியோரிடமும் சில கேள்விகளை கேட்டுள்ளார்.
கடந்த நான்கைந்து நாட்களாக தனதுதகப்பனாருக்காக சமாதான முயற்சியில் ஈடுபட்டதமிழாசிரியர் முகைதீன் பிள்ளை மீது அப்போதுஎந்த குற்றசாட்டும் சொல்லாத நீங்கள் திடீரெனபொய்ப் புகார் கொடுத்துள்ளீர்களே!
தற்போது கைது செய்யப்பட்ட முகைதீன்பிள்ளையின் வீட்டிற்கு காவல் துறை பலமுறைவந்து சென்றார்களே! அப்போது ஏன் அவர்களை கைதுசெய்யவில்லை?

தலைமறைவான அவரின் தந்தை காதர்நாகூர்என்பவரை தேடிவந்த போது அப்போது வீட்டில்இருந்த முகைதீன்பிள்ளையை கைது செய்யாதஉதவி ஆய்வாளராகிய நீங்கள் இப்போது ஏன் கைதுசெய்தீர்கள்?
என்று அவர் மேற்கண்ட கேள்விகளை கேட்டதற்கு எதையும் பொருட்படுத்தாமல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது அக்கிரமக்கார காவல்துறை.

டிஎன்டிஜே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :
இந்தச் செய்தியை அன்றைய மாலை இதழில் செய்தியாக வந்தது. இதனால் கடையநல்லூர் இஸ்லாமிய மக்களிடையே பரபரப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களும் அந்த பகுதி வட்டாரவாசிகளும், இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து கடந்த 29.12.2012 அன்று மாலை 4.30 மணியளவில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய ஒரு போராட்டத்தை டிஎன்டிஜே நடத்தியது.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும், ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர்.

தலித்துகளும், உயர் ஜாதியினரும் கைகோர்த்த அதிசயம்:
கடையநல்லூரில் இந்து முன்னணி சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அனைத்து நடுநிலையான மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் என்னவென்றால், முற்றிலும் பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில் இந்து முன்னணியுடன் இணைந்து தேவேந்திர குல சமுதாய மக்கள் என்ற வாசகம் போடப்பட்டிருந்தது.
இந்து முன்னணியில் உள்ளவர்கள் அனைவரும் தாங்கள்தான் உயர்ந்த ஜாதி என்று சொல்லக்கூடியவர்கள். இந்த நாட்டில் வர்ணாசிரமத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திய புண்ணியவான்கள்(?) இவர்கள்தான். இவர்கள் தங்களை உயர் ஜாதி என்று சொல்லிக்கொண்டு பிற இந்துக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி ஒடுக்கி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் யாரும் தெருவில் செருப்போடு நடமாடக்கூடாது; மேல் சட்டை அணியக்கூடாது; பொதுக் கிணற்றில் நீர் அருந்தக்கூடாது; கோவிலுக்குள் உள்ளே நுழையக்கூடாது; வேதம் ஓதுவதை தப்பித்தவறி கூட காதில் கேட்டுவிடக்கூடாது என்று கொடுமை செய்ததால்தான் இந்த நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற ஒரு சட்டமே கொண்டு வரப்பட்டது என்ற உண்மையை யாரும் மறுக்க மாட்டார்கள்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு காரணகர்த்தாவாக யார் இருந்தார்களோ அவர்களுடன் தாழ்த்தப்பட சாதி என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் கைகோர்த்திருப்பது இவர்களின் சுயரூபத்தை வெளிக்காட்டுகின்றது. முஸ்லிம்கள் மீது தாங்கள் போட்ட பொய் வழக்கை நியாயப்படுத்துவதற்காக எந்த அளவுக்கும் தாங்கள் கீழிறங்கத் தயார் என்று அவர்கள் தங்களது செயல்களின் வாயிலாக நிரூபித்து வருகின்றனர்.

ஆவேசத்துடன் எழுந்த கோஷங்கள்:
காவல் துறையே! காவல் துறையே!
ஏவல் துறையாய் இல்லாமல்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டு!!!
போடாதே! போடாதே!!
பொய் வழக்குப் போடாதே!!
வாபஸ் வாங்கு! வாபஸ் வாங்கு!!
போட்ட வழக்கை வாபஸ் வாங்கு!!
அராஜகத்தை தட்டிக்கேட்டால்
வன்கொடுமை என புகார் கொடுக்கும்
அநியாயம் ஒழிய வேண்டும்!
கொடுத்த கடனை திருப்பிக்கேட்டால்
வன்கொடுமை பயம் காட்டும்
ரவுடிகள் ராஜ்ஜியம் ஒழிய வேண்டும்
ஓய மாட்டோம்! உறங்க மாட்டோம்!!
நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!!
என்று ஆவேசமாக நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் காஜா நூஹ் அவர்கள் காவல்துறைக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.

அதில் அவர் அரசுக்கு விடுத்த கோரிக்கைகள் பின்வருமாறு:
“கடந்த காலங்களில் உரிமைக்காக கொண்டு வரப்பட்ட தீண்டாமை வன்கொடுமைச்சட்டத்தை தற்போது அவர்களே தவறாக பிற சமூகத்தினர் மீது பொய்யாக புகார் கொடுப்பதற்கு பயன்படுத்துவதால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த சட்டத்தை நீக்க வேண்டும்.
தீண்டாமை மனிதநேயமற்ற செயல் பெருங்குற்றம் என பாடம் நடத்திய மனித நேய ஆசிரியர்கள் மீது பொய்ப்புகார் கொடுத்துள்ளனர். சிறையில் அடைத்த அப்பாவி ஆசிரியரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் உட்பட ஒரே குடும்பத்தில் நான்கு நபர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும் அல்லது காவல்துறையின் வேறு ஒரு பிரிவின் மூலம் வழக்கை மறு விசாரணை செய்யவேண்டும்.

பொய்ப்புகார் அடிப்படையில் தீண்டாமை வழக்கை பதிவு செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் சிவன் மற்றும் இந்த வழக்கை முறையாக விசாரணை செய்யாத துணைக் கண்காணிப்பாளர் ஜமீம் ஆகியோர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார்.

போராட்டத்தின் எதிரொலியால் தமிழாசிரியர் விடுதலை:
இப்போராட்டத்தின் எதிரொலியாக கைது செய்யப்பட்ட தமிழாசிரியர் முகைதீன்பிள்ளை என்பவர் அன்று மாலை ஐந்து மணியளவில் விடுதலையாகி வெளியில் வந்து நமது ஜமாத்தினுடைய நிர்வாகிகளை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக்கொண்டார். எல்லாப்புகழும் இறைவனுக்கே! என்றார்

இதன்பின்னர் நமது போராட்டத்திற்கு எதிராக கடையநல்லூர் நகர் முழுவதும் மதக்கலவரங்களை தூண்டுகின்ற வகையில் இந்து முன்னணியினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதைப்பார்த்த அனைத்து சமுதாயப் பெரியவர்களும் முகம் சுளித்துக்கொண்டனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பலன் ஒன்றுமில்லை:
வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற இந்தச் சட்டத்தினால் எந்த பலனும் இல்லை என்றும், இதனால் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை என்றும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தோல்வியடைந்து விட்டது என்றும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர், வன்கொடுமை தடுப்பு சட்டம், 1989 மற்றும் விதிகளுக்கான திருத்தங்கள் குறித்து சென்னையில் நடந்த மாநில மாநாட்டில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அன்று உரை நிகழ்த்திய தமிழக அரசின் கூடுதல் செயலர் கிறிஸ்துதாஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதை வைத்துப் பார்க்கும்போது வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற இந்தச் சட்டத்தின் வாயிலாக தீண்டாமை ஒழிக்கப்படவில்லை. அதற்கு அந்த சட்டம் பயன்படவுமில்லை. மாறாக அந்த சட்டத்தைக் காட்டி பயமுறுத்தி தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடத்தான் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்றது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
அப்படியானால் நன்மைக்கு பதிலாக தீமையை விளைவிக்கும் இந்த சட்டத்தை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்து மனித உரிமையை காப்பதுதான் சாலச் சிறந்ததாகும்.

98 சதவீதத்திற்கும் மேல் பொய்ப்புகார்கள்:
1989-ம் ஆண்டில் மட்டும் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 98.8 சதவீதம் வழக்குகள் தோல்வி அடைந்துள்ளன. 2.2சதவீதம் வழக்கு மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இது நீதிமன்ற புள்ளி விவரமாகும்.
அதாவது இது குறித்து தொடரப்பட்ட வழக்குகளில் 98 சதவீதத்திற்கும் மேலான வழக்குகள் பொய்யாகப் புனையப்பட்டவை என்று நீதிமன்ற புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

உச்சநீதிமன்றமும், இந்திய நாடாளுமன்றமும், வழக்குகள், பொய்யாக புனையப்படுவதை உணர்ந்து சுட்டிக்காட்டி உள்ளது. எனவே வன்கொடுமை தடுப்புச் சட்டம் நடை முறைப்படுத்துவதில் திருத்தங்கள் வேண்டும் என்று எல்லா தரப்பு மக்களிடத்திலும் கருத்து ஒற்றுமை வலுவாக மேலோங்கி உள்ளது.

இது குறித்து சமீபத்தில் உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி பின்வருமாறு :
டில்லி, கூடுதல் செஷன்ஸ் கோர்ட் அதிரடித் தீர்ப்பு!
“எஸ்.டி., – எஸ்.சி., பிரிவினர் மீதான அத்துமீறல்கள் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, யாரையும், இனிமேல் சிறைக்கு அனுப்ப முடியாது. பொது இடத்தில், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினரை, ஜாதியை சொல்லி, திட்டினால்தான், அந்த சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்‘ என, டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவரை (எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,), அவர்களின் ஜாதியை குறிப்பிட்டு திட்டுவது, தண்டனைக்குரிய குற்றம். வரவேற்கத்தக்க இந்த சட்டத்தின் சிறப்பம்சங்களை புரிந்து கொள்ளாத, அந்த சமுதாயங்களை சேர்ந்த சிலர், எஸ்.டி., – எஸ்.சி., பிரிவினர் மீதான, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, தண்டனை பெற்றுத் தந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தகைய செயல்கள் இனிமேல் நடக்காத வண்ணம், டில்லி, கூடுதல் செஷன்ஸ் கோர்ட், நவம்பர் 14ஆம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.எஸ்.சி., பிரிவை சேர்ந்த ஒருவரை, மற்றொரு ஜாதியை சேர்ந்த குடும்பத்தினர், ஜாதிப் பெயரை சொல்லி திட்டி, தாக்கியதாக, டில்லி, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, ரஜினிஷ் பட்நாகர் பிறப்பித்த உத்தரவு:
எஸ்.டி., – எஸ்.சி., பிரிவினர் மீதான, அத்துமீறல்கள் தடுப்புச் சட்டத்தை, சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். நான்கு பேர் மத்தியில், பொதுவான இடத்தில், பிறர் அறியும் வகையில், ஜாதி பெயரை சொல்லி, திட்டினால் தான், எஸ்.டி., – எஸ்.டி., பிரிவினர் மீதான, அத்து மீறல் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த முடியும். இதற்கான சட்ட அம்சம், இந்த சட்டத்திலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாதிப் பெயரை சொல்லி திட்டியதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சம்பவம் நடந்தபோது, புகார் தெரிவித்தவரும், புகாருக்கு ஆளானவர் மட்டுமே இருந்துள்ளனர். சம்பவம், பொது இடத்தில் நடக்கவில்லை. அவர்களுக்கு இடையே, என்ன வாக்குவாதம் நடந்தது என்பதற்கான முழு விவரம் இல்லை. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான, எஸ்.டி., – எஸ்.சி., பிரிவினர் அத்துமீறல் தடுப்புச் சட்டத்தை, இந்த வழக்கில் பயன்படுத்த முடியாது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர், தாக்குதல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்கை நடத்தலாம்.இவ்வாறு, நீதிபதி, தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இப்படி ஆயிரம் ஆயிரம் பொய் வழக்குகளுக்கு அப்பாவிகள் நாள்தோறும் ஆளாவதை தடுக்க வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதே ஒரே தீர்வு!

dficab
Print This page

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y