அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, November 07, 2012

சாதிய தலைவர்களின் விழாவும் சேதப்படுத்தப்படும் மக்கள் சொத்தும்?

சிலகாலமாக அடங்கியிருந் தென்மாவட்ட சாதிக் கலவரம் கடந்த இரண்டு வருடவங்களாக மீண்டும் தலை தூக்கியுள்ளது   இதற்கு முதல் காரணம் என்ன என்று பாமர மக்களிடம் கேட்டாலும் உடனே பதில் வரும் இதற்கு முதல் முக்கிய காரணம் அரசின் கையாளாகதனம் தான் என்று ஒட்டுப்பொறுக்கும் இந்த அரசியல்வாதிகளால் இன்று தென்மாவட்ட மக்கள் ஒருவித அச்ச உணர்வுடனேயே வாழ்கின்றனர். 



இந்த கலவரம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு அவர்களில் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது அன்றாடம் வேலை செய்தால் தான் தமது குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையிலிருக்கும் ஏழை கூலித்தொழிலாளிகள் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர் தாய்மார்கள் தங்கள் வீட்டுக்குதேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கோ அல்லது அருகிலுள்ள நகரங்களுக்கோ போய்வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்  இவற்றையெல்லாம் கூட சகித்துக்கொள்ளலாம் நோயாளிகள் அவசரமாக மருத்துவமனை செல்ல முடியாமல் உயிரிழப்பு ஏற்ப்படும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

இவற்றை சீர் செய்ய அரசு எந்த வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொண்டதாக தெரியவில்லை  இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு என்ன காரணம் என்பதை நாம் முதலில்  தெரிந்து கொள்ளவேண்டும்.

கடந்த மாதம் முப்பதாம் தேதி முத்து ராமலிங்க தேவர் என்பவருக்கு குருபூஜை என்ற பிறந்தநாள் விழா முக்குலத்தோர் என்ற தேவர் இனத்தைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்பட்டது விழா என்றால் என்ன என்றே விளங்காதவர்கள் மற்றவர்களின் அமைதியை கெடுக்க மட்டுமே இதுபோன்ற விழாக்களை நடத்துகிறார்களோ என்று என்ன தோன்றுகிறது இதுபோன்று நடத்தும் விழாக்களை சாதகமாக்கிக் கொண்டு தங்களின் எதிரிகளை வஞ்சம் தீர்ப்பதற்காகவே இவர்கள் பயன் படுத்திக்கொள்கின்றனர்.

இவர்கள் செய்யம் செயல் குரங்கு தானும் கெட்டு வனத்தையும் சேர்த்து கெடுக்கும் என்பதைப்போல இவர்களின் பொருளாதரம சேதமடைந்தது மட்டும்மல்லாமல் பொதுச்சொத்தையும்  சேதப்படுதுகின்றனர் அவர்களின் பொருளாதாரத்தை வீணடிப்பதே தவறான செயல் என்றிருக்க மற்றவர்களின் சொத்துக்களை அடுத்தவர்களின் கடைகளை அரசு பேருந்துகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களால் அப்பாவிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் இவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டிய அரசாங்கமோ அவர்களுக்கு நிதியளித்து அவர்களை மீண்டும் இதுபோல விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட ஊக்கமளிப்பது கண்டனதிர்க்குரியது.

பொதுச்சொத்தை சேதப்படுத்துவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்கின்ற அளவிற்கு இருவேறு சாதியினர் போட்டிப்போடுகின்றனர் மேலும் இவர்களால் பல்வேறு பொருளாதார சிக்கலும் ஏற்படுகிறது பலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிடட்ட இடத்திற்கு போய் சேரமுடிவதில்லை பலர் இவர்களின் இந்த செயல்களால் விமானதைக்கூட தவறவிடும் சூழல்  ஏற்ப்பட்டுள்ளது. 

வருடாவருடம் நடக்கும் இதுபோன்ற கலவரங்களை தடுக்க அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நடுநிலையாளர்களின் ஒட்டுமொத்த கருத்து சென்ற வருடம் இதேபோன்ற ஒரு மிகப்பெரிய சாதிக்கலவரம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடந்தது அதில் பலர் உயிரிழந்தனர் இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடக்காமலிருக்கு அரசு தேவையான அணைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்களையும் எடுத்திருக்க வேண்டும் விழாவிற்கு செல்பவர்கள் அலம்பல் செய்யாமல் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் மேலும் மற்றவர்களை சினம் கொள்ளச்செய்யும் துவேச சொற்ப பிரயோகத்தை கண்டிப்பாக உபயோகிக்கக்கூடாது என்றும் அதிலும் மிகக் குறிப்பாக விழாவிற்கு வருபவர்கள் மதுஅருந்தியிருக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட கூட்டத்தினரிடம் கடுமையான உத்திரவாதம் எழுதி வாங்கிக் கொள்ளவேண்டும் இவைகளை அவர்கள் மீறினால மீண்டும் இதுபோன்ற விழாக்கள் நடத்த அனுமதி கிடைக்காது என்பதையும் அவர்களுக்கு சொல்லவேண்டும்  மேலும் பொதுச் சொத்தை சேதப்படுத்தினால் சம்பந்தப்பட்ட விழா ஏற்ப்பட்டாளர்களிடம் வசூலித்து சொத்தை இழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக கொடுக்கவேண்டும்.

ஆனால் மேற்ச்சொன்ன அனைத்தையும் இந்த அரசாங்கங்கள் செய்யுமா என்பது சந்தேகமே காரணம் இவர்களுக்கு மக்கள் நலனைவிட தங்களுக்கு அவர்களிடமிருந்து கிடைக்கும் ஒட்டுதான் அவர்களுக்கு மிக முக்கியம் ஆளும் கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் மக்களின் நலனைவிட ஓட்டுப்பொறுக்கி அரசியல் நடத்துவதே இவர்களின் முக்கிய குறிக்கோள்   ஜாதிய மத மோதல்களை தூண்டிவிட்டு மக்களின் பிணத்தின் மீது  ஆட்சி நடத்தும் மோடி போன்றோர் நாட்டில் அமைதி நிலவினால எவ்வாறு தொடர்ந்து மூன்றுமுறை முதல்வராக முடியும்  ஊரு ரெண்டுபட்டால்தானே கூத்தாடிக்கு கொண்டாட்டம்.

ஆனால் எத்தனை லட்சம் மக்கள் திரண்டாலும் ஒரு சிறு அசம்பாவிதங்கள் நடக்காமல் மாநாடுகள் நடத்திய வரலாறும் தமிழ்நாட்டில் உண்டு முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமையான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி முஸ்லிம்களின் பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக பிரமாண்டமான மாநாடுகளை இந்த தமிழ்நாட்டில் நடத்திக்காட்டியது அதில் முத்தாய்ப்பாக சென்னையில் நடந்த ஜூலை மாநாடு அல்லாஹ்வின் பேரருளால் முஸ்லிம் சமுதாய  மக்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தீவுத்திடலில் சங்கமித்தனர் ஆனால் ஒரு சிறு விரும்பத்தகாத சம்பவம்கூட நடக்கவில்லை இவற்றையெல்லாம் கண் முன்னே கண்டும் கூட இந்த சாதிவெறி பிடித்த இவர்களுக்கு அதிலிருந்து பாடம் படிக்கவில்லை.

தமிழக அரசிடம் சாமானிய  மக்கள் வைக்கும் ஒரே கோரிக்கை நீங்கள் உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசாக இருக்குமானால் நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் வேட்டு  வைக்கும் இதுபோன்ற சாதி மத மோதல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் அமைதி விரும்பும் தொண்ணுற்றொன்பது சதவீத மக்களின் உயிருக்கும் உடமைக்கும் முழு பாதுகாப்பு வழங்கவேண்டும் ஒருவன் ஊழலைக்கூட பொறுத்துக்கொள்வான்  லஞ்ச லாவண்யதைக்கூட பொறுத்துக்கொள்வான் ஆனால் அவனின் உயிர் மற்றும் உடமைக்கு பாதுகாப்பற்ற சூழல் நிகழும்போது அவன் சகித்துக்கொள்ளமாட்டன் அவனின் கோபத்தை ஒட்டு என்னும் ஆயுதத்தைக்கொண்டு அவனின் அரசியல் எதிரிகளை வீழ்த்துவான் என்பதை ஆள்வோர் உணரவேண்டும்.

முஹம்மது உபைஸ் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y