அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, September 24, 2012

காதலின் பெயரால் தொடரும் (தற்)கொலைகள் !

சமீபத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காதலால் ஏற்ப்படும் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது தொடர்ந்து நடக்கும் தற்கொலைகளால் பெற்றோர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் கோவையில் மட்டும் மூன்று காதல் (தற்)கொலைகள் நடந்துள்ளன.

நேற்று முன்தினம் தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் மாணவி தன்னை காதலிக்க மறுத்தால் அவரின் வீட்டிற்கு சென்று அந்த மாணவியையும் அவரின் தாயாரையும் கத்தியால் குத்தி தானும் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார் ஒரு மாணவன்  இதேபோல் வேறொரு சம்பவத்தில் பதினான்கு வயதான மாணவியை இருபத்தி ஒரு வயது மாணவன் தன அவளை காதலிப்பதாகவும் தன்னை அவளும் காதலிக்க வேண்டும் என கூறியுள்ளார் அதற்க்கு அந்த மாணவி மறுக்கவே அந்த மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.


இதுபோன்ற சம்பவம் சென்னையிலும் சிலவாரங்களுக்கு முன்பு நடந்தது எப்பவுமே பரபரப்பாக காணப்படும் சென்னை பாரிமுனையில் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை நூற்றுக்கணக்கானோர் கண் முன்பாக அவளின் கழுத்தை அறுத்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டான் இதற்கும் காரணம் காதல்தான் அதேபோல சில மாதங்களுக்கு முன்பு மகளை தனக்கு திருமணம் முடித்து தர மறுத்தால் அவளின் தாயை நடுரோட்டில்ய்யே வைத்து கொலை செய்துள்ளான் இதற்கும் காரணம் காதல்தான்.

இப்படி சமுகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நிகழ்வதற்கு காரணம் இந்தியாவிலுள்ள சமூக கட்டமைப்பு முற்றிலும் சீர்கெட்டு காணப்படுகிறது ஒரு மாணவனை செம்மையாக வார்த்தெடுப்பதில் மிக முக்கிய பங்கு ஆசிரியர்களுக்கு உண்டு ஆனால் இன்று ஆசிரியர்களால்தான் மாணவர்கள் தவறான வழியை  தேர்வு செய்கின்றனர் ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் அவர்களே ஒழுக்கம் கெட்டவர்களாக மாறியுள்ளனர் ஆசிரியர்களை பின்பற்றும் மாணவர்களும் அவர்களைப்போன்றே கெட்டு சீரழிகின்றனர்.

ஒழுக்கத்தை போதிக்க கூடிய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை போதித்து அவர்களை சிறந்த மாணாக்களாக உருவாக்க கடமைப்பட்டுள்ள ஆசிரியர்கள் தாங்களே ஒழுக்கம் கெட்டவர்களாக மாறி சமூகத்துக்கும் தவறான முன் உதாரணமாக திகழ்கின்றனர் முன்பெல்லாம் இலைமறை காயாக நடந்து வந்த ஆசிரியர்களின் காதல் திருமணங்கள் இன்று அப்பட்டமாக அனைவரும் பார்க்கும்படி ஒரு ஆசிரியர் தன்னுடன் வேலை செய்யும் சக ஆசிரியயை காதலித்து திருமணம் செய்கிறார் அதுமட்டுமல்ல பெரியார் அண்ணா போன்றோர் இதுபோன்ற காதல் திருமணத்தைதான் அதிகம் ஊக்குவித்தனர் அப்பொழுதான் சாதி கொடுமை ஒழியும் என்றும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றார்கள் தங்கள் செய்யும் இதுபோன்ற அசிங்கத்தை மாணவர்களையும் செய்யும்படி ஊக்கப்படுத்துகின்றனர்.

அடுத்து அரசியல் தலைவர்கள் இவர்களும் இதுபோன்ற செயலையே ஆதரிக்கின்றனர் இதற்கு பொறுத்தமற்ற சாதி ஒழிப்பு என்ற காரணத்தையும் கூறுகின்றனர் இதுபோன்ற கலப்பு திருமணம் செய்வதால் சாதி கொடுமையை ஒழித்துவிட முடியுமா முடியாது மாறாக இது சாதிய துவேசத்தைதான்  மக்கள் மத்தியில் அதிகப்படுத்தும் அதை நாம் நாள்தோறும் பதிரிக்கைகளிலும் வரும் சாதியின் பெயரால் நடக்கும் கலவரங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம் எந்த ஒரு உயர்ந்த சாதியை சேர்ந்தவனும் தனது மகளோ மகனோ ஒரு தாழ்த்தப்பட்டவனை வாழ்க்கை துணையாக்கிக் கொள்வதை ஏற்றுக் கொள்ளமாட்டான்.

அடுத்து திரைப்படம் இது இன்று சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது அதிலும் காதலை மைய்யமாக வைத்து வெளிவரும் திரைப்படங்கள் மாணவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது இந்த திரைக் கூத்தடிகளை முன்மாதிரியாக கொண்டே அதிகமான மாணவர்கள் தாமும் காதல் செய்துதான் திருமணம் செய்ய வேண்டும் காதில் திருமணத்தில்தான் புனிதம் உள்ளது என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு அதிலேயே வாழ்கின்றனர்.

அதேபோன்று நாட்டிலுள்ள இருபாலர் கல்வி முறை இதுவும் மிக முக்கிய காரணம் பருவ வயதை அடைந்து இரு வேறு பாலினத்தை சேர்ந்த இருவர் ஒன்றாக அமர்ந்து ஒரே வகுப்பில் கல்வி பயில்கின்றனர் இதுவும் ஒரு காரணம் ஒருவன் மேற்ப்படிப்புக்காக கல்லுாரிக்கு செல்லும்போது அவனின் பெற்றோர் எண்ணற்ற கனவுகளுடன் காத்திருப்பர் ஆனால் அவனோ கல்லூரியில் நுழைந்ததும் இவன் தான் படிக்கப்போகும் வகுப்பறையை தேடுகிறானோ இல்லையோ தனக்கும் ஒரு கேர்ள் ஃபிரன்ட் வேண்டும் என்றே முதலில் நினைக்கிறான் அதுதான் அவனுக்கு கவுரவம் என்றும் எண்ணுகிறான்.

இப்படி சிக்குவர்களுக்குதான் மனஅழுத்தம் அதிகமாகிறது  அவனுக்கு தனக்கான காதலி  கிடைத்தாலும் அவனுக்கு மனஅழுத்தம் இவளை எப்படி தொடந்து தன்னிடமே தக்கவைத்துக்கொள்வது என்ற ஒருபுறம் இன்னொருபுறம் தான் யாரையாவது பார்த்து அவளிடம் சென்று தனது காதலை சொல்கின்றான் அவள் அவனின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் வேறொருவனுடன் நடப்பு பாராட்டினால் அதன் காரணத்தாலும்  அவன் தாழ்வு மனப்பான்மையால் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றான் அல்லது இன்று அதிகமான மாணவிகளிடம் காணப்படுவதுபோல் முதலில் ஒருவனை காதலிப்பது பிறகு இவனை கழட்டிவிட்டு இன்னொருவனை  நாடுவது அவர்களுக்கு அது பொழுதுபோக்கு ஆனால் அவளை முதலில் காதலித்தவனோ  மனஅழுத்தத்திற்கு ஆளாகி தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு இன்னொருவனுடன் ஊர் சுத்துகிறாள் அதை பார்க்கும் அவனின் நண்பர்கள் அவனை கேலி செய்கின்றனர் அதனாலும் அவனுக்கு மன அழுத்தம் உண்டாகிறது அப்படி சக நண்பர்கள் கேலி கிண்டல் செய்யாவிட்டாலும் இவனாகவே அவ்வாறு எண்ணிக்கொள்கின்றான் இதன்மூலாமாகவும் அவன் மனரீதியான பாதிப்புள்ளாகின்றான்.

இப்படி பலவகையிலும் தாக்குதலுக்குள்ளாகும் ஒருவன் தனது மனஅழுத்தம் அதிகமாகி அதுவே அவனை மனநோய்க்கு கொண்டு விட்டு விடுகிறது மேலும் போதை போன்ற கொடிய பழக்கத்திற்கு ஆளாகின்றான் இதன் காரணமாக  தான் இந்த உலகத்தில் வாழவே தகுதியற்றவன் என்பது போன்று உணர்கிறான் இறுதியில் இவன் நாடுவது (தற்)கொலையை தன்னை காதலித்தவள் இன்று வேறொருவனின் காதலி இவனால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்ககூடாது என்ற முடிவுக்கு வருகிறான் இவனின் இந்த செயலை யாரவது தடுக்க வந்தால் அவர்களையும் அவன் ஒரு எதிரியை பார்ப்பதுபோல பார்க்கின்றான் அவர்களையும் கொலை செய்து அவனும் தற்கொலை செய்து கொள்கிறான்.

ஆனால் இதுபோன்ற தற்கொலைகள் முஸ்லிம்கள் மத்தியில் மிக குறைவாகவே காணப்படுகிறது சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசால் ஒரு ஆய்வு குழு அமைத்து கேரளாவில் மட்டும் ஏன் தற்கொலைகள்  அதிகம்  நடக்கிறது அது எந்த மதத்தில் அதிகம் நிகழ்கிறது என்றெல்லாம் அந்த ஆய்வில் மேற்கொள்ளப்பட்டது அதில் முஸ்லிம்களிடம்தான் மிக குறைவாக தற்கொலைகள் நடக்கிறது அதற்க்கு காரணம் அவர்களின் மதம் ஏனென்றால் இஸ்லாம் மதத்தில் கொலையோ தற்க்கொலையோ செய்வது தவறு (ஹராம்) என்று உள்ளது இதனால் தான் முஸ்லீ்ம்கள் தற்கொலை செய்து கொள்வது மிக குறைவு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காரணம் முஸ்லிமான ஒருவன் தற்கொலை செய்துகொண்டால் அவனுக்கு மரணத் தொழுகை கூட இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது மேலும் அவனின் மறுமை வாழ்க்கையும் கேள்விக் குறியாகியுள்ளது அவனுக்கு சொர்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது மாறாக நரகம் என்னும் கொடும் நெருப்பு அவனுக்கு காத்துக் கொண்டுள்ளது அதில் அவன் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான் அதிலிருந்து அவனால் மீளவே முடியாது என்று இஸ்லாம் கடுமையாக எச்சரிகின்றது  இதன் காரணமாகவும் முஸ்லிம்கள் தற்கொலை செய்ய மிகவும் அஞ்சுகின்றார்கள்.

இதன் காரணங்களாகவே இஸ்லாமிய  நாடுகளில் தற்கொலைகள் நடப்பது மிக குறைவு காரணம் அது ஒரு காரணம் என்றால் இன்னொன்று இங்கே காதல் கன்றாவியில்லாம் வெளிப்படையாக  கிடையாது இன்னும் காதல் உண்டாவதற்கு முதல் காராணமான இரு பாலினத்தை சேர்ந்தவர்கள் சந்தித்துக்கொள்வது மிக குறைவு ஏன் தொடர்பு ஏற்ப்படுத்தி கொள்வது கூட மிக மிக குறைவு அதற்க்கான வாசல்கள் அனைத்தையும் அடைத்தே வைத்துள்ளனர் இஸ்லாத்திலும் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை அதிகப்டியாக இஸ்லாத்தில் இருக்கும் இருக்கும் அனுமதி ஒரு பெண்ணை அவனுக்கு பிடித்திருந்தால் அவளில் பொறுப்பாளர்களிடம் சென்று பெண் கேட்டு அவளும் அவளின் குடும்பத்தினரும் சம்மதித்தால் திருமணம் செய்துகொள்ளலாம் அதற்கு அவளோ அவளின் பெற்றோரோ மறுத்துவிட்டால்  மீண்டும் அது பற்றி பேசக்கூடாது வேறு வழியில் சென்று விடவேண்டும்.

இதை விடுத்தது அப்பெண்ணையோ அல்லது அவளின் பெற்றோரையோ பழிவாங்குவதோ அல்லது வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்ப்படுத்துவதோ  கூடாது அது இறைவனிடம் மிக பாவமாக கருதப்படும் என்று படிப்பறிவில்லாத பாமர முஸ்லிம்கள் கூட அறிந்து வைத்துள்ளனர் ஆனால் மற்ற மதத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை மாறாக செய் அல்லது செத்து மடி என்று அவர்களின் வேதங்கள் அவர்களுக்கு வழிகாட்டுவதால்அவர்களும் அவ்வாறே செய்கின்றனர் அல்லது செத்து மடிகின்றனர் ஒருவன் ஒரு பெண்ணை விரும்பி விட்டால் அவன் எவ்வளவு பெரிய அய்யோகியனாக இருந்தாலும் அவனை அவள் ஏற்றுக் கொள்ளவேண்டும் இல்லையென்றால் அவளை அவன் கொன்று விடுகிறான் இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை.

இதுபோன்ற சமூக அவலங்களை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அவர்கள் படும் வேதனையிலிளிருந்து பாதுகாக்க வேண்டும் இதற்கான  முதல் முயற்சியாக பள்ளி முதல் கல்லூரிவரையிலான இருபாலர் கல்வி முறையை மாற்றி இருவருக்கும் தனித்தனி கல்வி முறையை அமைக்க முன்வரவேண்டும்  இதனால் அரசுக்கு எந்த நட்டமும் ஏற்ப்படப்போவதில்லை மாறாக வருங்கால சமூகத்தை ஒரு வளமான சமூகமாக  உருவாக்க முடியும்.

இதற்க்கு முன்னோடியாக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவணங்களில் இருபாலர் கல்வி முறையை ரத்து செய்து முன்மாதிரியாக மாறவேண்டும் மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக திகழவேண்டும் ஆணும் பெண்ணும் சந்திதுக்கொள்ளும் வாய்ப்புகள்  குறைந்தது இவர்கள் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலாவது அமுல் படுத்த வேண்டும் அதன் மூலம் முன்மாதிரி சமுதாயத்தை உருவாக்கலாம் நபி ஸல் அவர்களை உயிரினும் மேலாக மதிக்கின்ற முஸ்லிம்கள் நபி அவர்களின் சொல் செயல் அங்கீகாரத்திற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் அதுவே அவர்களை நாம் மதிப்பது ஆகும்.



'ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.புஹாரி 1364

யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டுமேலிருந்து கீழேஎன்றைக்கும் நிரந்தரமாக குதித்துக்கொண்டேயிருப்பார்.

யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரகநெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார்.

யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில்வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டேயிருப்பார்.” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-5778)

ஒரு உயிரை கொலை செய்தவன் ஒரு சமுதாயத்தை கொலை செய்தவன் போலாவான்
"எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப்போலாவார்” (அல் குர்ஆன் 5:32)

முஹம்மது உபைஸ்
   

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y