அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, September 13, 2012

எங்கே உங்களின் ஒற்றுமை ?

முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்ப்பெயருக்கு களங்கம் கற்ப்பிக்கும் முகமாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து  யூத இனத்தைச் சேர்ந்த ஷ்யாம்பைசரி என்பவன் இயக்கிய திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளான் இந்த படுபாதகச் செயலை உலகத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் கடுமையாக கண்டித்துள்ளனர் அமெரிக்காவிற்கு எதிராக உலக முஸ்லிம்கள் பொங்கி எழுந்துள்ளனர். 

அதேபோல தமிழகத்திலும் அணைத்து முஸ்லிம் இயக்கங்களும் வன்மையாக கண்டித்துள்ளது இஸ்லாத்திற்கும் முஸ்லிமுக்கும் ஒரு அவமானம் என்றால் உடனே களம் இறங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இச்செயலை வன்மையாக கண்டித்து முதலில் கண்டன அறிக்கையையும் அதனைத்தொடர்ந்து வரும் 15.09.2012 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றிகையிடப் போவதாக அறிவித்தது.


அதைனைத்தொடர்ந்து தமிழகத்திலுள்ள அணைத்து அமைப்புகளும் தனித்தனியே முற்றுகைப்போரட்டதை அறிவித்தனர் எல்லாரும் இந்த விசயத்தில் ஒரே கொள்கையில்தான் உள்ளனர் அதில் ஒன்றும் குறைவில்லை ஆனால் சமுதாய ஒற்றுமை என பேசித்திறியும் தமிழகத்திலுள்ள பல்வேறு அமைப்புகள் ஒன்றினைந்து ஏன் இந்த போராட்டத்தை நடத்த முடியவில்லை.

டிஎன்டிஜே யாருடைய போராட்டத்திலும் கலந்து கொள்வதில்லை பிற இயக்கங்களின் மேடையில் ஏறுவதில்லை என்ற ஒரு கொள்கை முடிவை எடுத்து அதை இன்றுவரை பின்பற்றி வருகிறது ஆனால் மற்ற இயக்கங்களை அவ்வாறில்லை இவர்கள் அனைவரும் ஒற்றுமை என்னும் கையிற்றைப் பற்றிப் பிடிக்கவேண்டும் என்று குர்ஆனின் வசனத்தை தங்களுக்கு சாதகமாக விளக்கம் கொடுப்பவர்கள்.

ஒற்றுமைக்கோசம் போடும் இவர்கள் நபிகள் நாயகத்தை இழிவு படுத்திய அய்யோகியனை கண்டித்து நடத்தும் போராட்டத்தில் இவர்களின் ஒற்றுமையை எங்கே காணோம் ஏன் எதெதுக்கோ ஒருமையைப் பற்றி பேசும் இவர்கள் இப்படி பாரதூரமான விசயத்தில் இவர்களின் ஒற்றுமை எங்கே இந்த விசயத்தில் இவர்களை ஒன்றிணைய விடாமல் தடுத்தது எது.

தவ்ஹீத் ஜாமத்தை தடைசெய்யச் சொல்லி வால்போஸ்டர் அடிப்பதில்  காட்டும் ஒற்றுமை அதன் மாநிலத்தலைவரை கைது செய்யச்சொல்லி காவல்த்துறை ஆணையரிடம் புகார் மனுக் கொடுப்பதில் காண்பிக்கும் ஒற்றுமை ஒற்றுமை என்ற பெயரில் செல்வந்தர்களிடம் கல்லாக்கட்டி ஒன்றாக கூடி ஹோட்டலில் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவதில் காட்டும் ஒற்றுமை இன்னும் ஏன் தனி ஒரு மனிதனுக்கு ஸலாம் சொல்லலாமா கூடாது என்று விவாதிப்பதர்க்காகவே பட்டிமன்றம் நடத்துவதில் காட்டும் ஒற்றுமை இந்த விசயத்தில் ஏன் காணாமல் போனது அப்படியானால் இவர்கள் பேசுவது போலி ஒற்றுமை என்று மக்கள் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

சரி இவர்களால் நிச்சயம் ஒன்று படவே முடியாது என்று தெளிவாக புரிந்து விட்ட பிறகு இவர்கள் என்ன செய்திருக்கவேண்டும் இது ஒரு முக்கிய பிரச்சனை போராட்ட அறிவிப்பில் தவ்ஹீத் ஜமாஅத் முந்திக்கொண்டது அதனால் நாம் அனைவரும் இதில் சென்று கலந்துகொள்வோம் என்றாவது முடிவு செய்திருக்க வேண்டும் உண்மையில் இவர்கள் ஒற்றுமையை விரும்புபவர்களாக இருந்தால் ஆனால்  அதற்க்கு இவர்களின் சுயமரியாதை? இடம் கொடுக்கவில்லை என்றால் தங்களின் கழக கண்மணிகளுக்காவது அறிவித்திருக்கவேண்டும் இந்த விசயத்தில் நமது எதிர்ப்புதான் முக்கியம் யார் நடத்துகிறார்கள் என்பது முக்கியம் இல்லை அதனால் கண்மணிகளே நீங்கள் அனைவரும் டிஎன்டிஜே நடத்தும் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொல்லுங்கள் என்றாவது சொல்லியிருக்க வேண்டும் ஆனால் இவர்கள் அவ்வாறு சொல்ல மாட்டார்கள் ஏனென்றால் இவர்களிடம் உண்மையான ஒற்றுமை இல்லை.

அதேமாதிரி இவர்கள் கூறும் போலி ஒற்றுமையை தவ்ஹீத் ஜமாஅத் என்றும் ஒத்துக்கொண்டதில்லை ஆதரித்ததும் இல்லை ஏனென்றால் இவர்கள் கூறும் போலி ஒற்றுமையை இஸ்லாம் கற்றுத் தரவில்லை இஸ்லாம் கூறும்  ஒற்றுமை குரான் சுன்னாவில் ஒன்றுபடும் ஒற்றுமை மத்ஹப் என்றும் தரீக்கா என்றும் பிரிந்து கிடக்கும் ஒற்றுமையை இஸ்லாம் வலியுறுத்தவில்லை மார்க்கத்தில் ஒன்று படச்சொல்கிறது இஸ்லாம் அதைதான் தவ்ஹீத் ஜமாத்தும் இத்தனை வருடங்களாக பிரச்சாரம் செய்து வருகிறது என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் அதனால்தான் மற்றவர்கள் அழைத்தால் வராத மக்கள்  தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால் மட்டும் மடை திறந்த வெள்ளம் போல ஓடி வருகிறார்கள் அவர்கள் வருவதற்கு இன்னொரு காரணமும் இருக்கு தவ்ஹீத் ஜமாஅதிலுள்ள  தலைவர்கள் சுயநலவாதிகள் இல்லை கூட்டத்தை காட்டி தங்களை வளப்படுத்திக்கொள்ள மாட்டார்கள் என்று தெளிவாக மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள் மற்றவர்கள் எல்லாம் தங்களைக் காட்டி பேரம் பேசுவார்கள் என்றும் புரிந்து வைத்துள்ளார்கள.

இனிமேலாவது இதுபோன்று அரசியல் குள்ளநரித்தன ஒற்றுமையை இவர்கள் கைவிட்டு உண்மையான குரான் சுன்னா காட்டும் ஒற்றுமையை தீனில் பிரிந்து நிற்காமல் அதில் ஒன்றுபடவேண்டும் அதுதான் இவர்களின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு நல்லது.

 முஹம்மது உபைஸ்
    

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y