அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, July 04, 2012

ஜெமினி பாலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்து!‎ உயிர்காக்கும் பணியில் உடனடியாக களம் கண்ட டிஎன்டிஜே!


ஜெமினி பாலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்து!‎ உயிர்காக்கும் பணியில் உடனடியாக களம் கண்ட டிஎன்டிஜே கடந்த ஜூன் 27ஆம் தேதி புதன்கிழமை அன்று சென்னை ஜெமினி ‎மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த நகரப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை ‎இழந்து ஜெமினி பாலத்தின் பக்கச் சுவர்களை இடித்துக் கொண்டு ‎பாலத்திலிருந்து 20அடி ஆழத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 39 ‎பயணிகள் காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து நடந்த நேரத்தில் ‎அந்த வழியாக மண்ணடியிலிருந்து தி.நகருக்கு சவாரி ஏற்றிச் சென்ற ‎தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினரான ஆட்டோ ஓட்டுனர் ரியாஸ் ‎அவர்கள் அந்த வழியாக தேனாம்பேட்டையை நோக்கிச் சென்று ‎கொண்டிருந்துள்ளார்.‎ ‎
பஸ் கவிழ்ந்து விழுந்த போது, அவரது ஆட்டோ அந்த பாலத்திற்கு கீழே ‎சென்று கொண்டிருந்துள்ளது. அல்லாஹ்வுடைய மிகப்பெரும் கிருபையால் ‎சில நொடிப் பொழுது வித்தியாசத்தில்தான் இந்த ஆட்டோவும், ஆட்டோவில் ‎சென்றவர்களும் வல்ல இறைவனால் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இவரது ‎ஆட்டோவிற்கு முன்புதான் பஸ் கவிழ்ந்து விழுந்துள்ளது. சில நொடிகள் ‎இவரது ஆட்டோ முன்னேறிச் சென்றிருக்குமேயானால் 20அடி ‎உயரத்திலிருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து சரியாக இவரது ஆட்டோவின் ‎மீதுதான் விழுந்திருக்கும். அந்த வகையில் அல்லாஹ் இவருக்கு பேரருள் ‎புரிந்துள்ளான் என்றுதான் சொல்ல வேண்டும்.‎ ‎
பஸ் கவிழ்ந்து விழுவதை நேருக்கு நேராக ஆட்டோ ஓட்டும் பொழுது ‎பார்த்த ரியாஸ் அவர்களுக்கு பஸ் விழுந்த இடம் புகை மூட்டமாக காட்சிதர, ‎பேருந்திலிருந்து அலறல் சப்தங்கள் விண்ணைப் பிளக்க, தனது ஆட்டோவை ‎அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு, சவாரி வந்தவர்களிடத்தில், “விபத்தில் ‎பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய கடமை ‎எனக்கு உள்ளது. எனவே நீங்கள் வேறு ஆட்டோ பிடித்து தி.நகருக்குச் ‎செல்லுங்கள்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு உடனடியாக ‎உயிர்காக்கும் உன்னதப் பணியில் குதித்துள்ளார் டிஎன்டிஜே உறுப்பினர் ‎ரியாஸ்.‎
ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்த முதல் நபர் :‎ ‎ 
உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தனது தொலைபேசியிலிருந்து தகவல் ‎கொடுத்துள்ளார். விபத்து நடந்த உடனேயே ஆம்புலன்ஸுக்கு தகவல் ‎கொடுத்த முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.‎
ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து டிஎன்டிஜேவிற்கு தகவல் ‎பறந்தது:‎ ‎ 
ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ‎ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளுக்கு இந்தத் தகவலை உடனடியாக அவர் ‎தெரிவிக்க, மாநில நிர்வாகத்திலிருந்து உடனடியாக வடசென்னை மற்றும் ‎தென்சென்னை நிர்வாகிகளுக்கு தகவல் பறக்க, வடசென்னை மற்றும் ‎தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு ‎அருகில் உள்ள கிளை நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுக்க 20நிமிடங்களில் ‎சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் கிளைகளின் நிர்வாகிகள் விபத்து நடந்த ‎இடத்தை முற்றுகையிட்டு உயிர்காக்கும் மீட்புப்பணியில் ரியாஸ் ‎அவர்களுடன் இணைந்து கொண்டனர்.‎
முதலில் தூக்கியது பேருந்து ஓட்டுனரைத்தான்:‎ ‎ 
தலைகுப்புற கவிழ்ந்திருந்த பேருந்தின் கதவுகள் அனைத்தும் ‎ஆட்டோமேட்டிக் லாக் மூலமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை திறந்து ‎கொண்டு பயணிகளால் வெளியே வர முடியவில்லை.‎ ‎ 
ரியாஸ் அவர்கள் முதலில் டிரைவருடைய இருக்கைப் பகுதிக்குச் சென்று ‎பேருந்து ஓட்டுனரை தூக்கியுள்ளார். அவரது காலில் பலத்த அடிபட்டிருந்த ‎நிலையில் அவரது கையில் ஒன்றுக்கு இரண்டு செல்ஃபோன்கள் ‎இருந்துள்ளது.‎ ‎ 
உடனடியாக பேருந்துக்கு மேலே ஏறிய அவர் பேருந்தின் பூட்டப்பட்டிருந்த ‎கதவை உடைத்த பிறகுதான் பயணிகள் ஒவ்வொருவராக வெளியில் வர ‎ஆரம்பித்துள்ளனர்.
இவர்தான் பேருந்தின் கதவை உடைத்து அனைத்து ‎பயணிகளும் உடனடியாக வெளியே வர உதவியுள்ளார்.‎ ‎ 
அங்கிருந்த சில சகோதரர்களுடன் சேர்ந்து இவர் கணிசமான பயணிகளை ‎வெளியில் மீட்டெடுத்த பிறகுதான் விபத்து நடந்த அந்த இடத்திற்கு 108 ‎மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்கள் வந்து ‎சேர்ந்துள்ளன.‎ ‎
விபத்து நடந்த இடத்திற்கு 20 நிமிடங்கள் வரைக்கும் எந்தக் காவல்துறை ‎அதிகாரிகளும் உடனடியாக வரவில்லை என்பதை வேதனையுடன் சொன்ன ‎ரியாஸ் அவர்கள், காவல்துறையினர் வந்தவுடன் அங்கு மீட்புப்பணி செய்து ‎கொண்டிருந்த சகோதரர்களை துரத்தியடித்ததுதான் வேதனையிலும் வேதனை ‎என்கின்றார்.‎ ‎ 
விபத்து நடந்ததை நேரில் பார்த்து, உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் ‎கொடுத்து, உயிர்காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தன்னலம் ‎பாராமல் சேவையாற்றிய டிஎன்டிஜேயின் உறுப்பினரான ஆட்டோ ஓட்டுனர் ‎ரியாஸ் அவர்களை அனைத்து மீடியாக்களும் பாராட்டியுள்ளன.‎ ‎ 
அவரது பேட்டியை முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ‎அனைத்து பத்திரிக்கைகளும் முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டிருந்தன.‎ ‎ 
இவரது புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டு இவரது பேட்டியையும் ‎அனைத்து செய்தி சேனல்களும் ஒளிபரப்பிய போதும் இது குறித்து கருத்து ‎தெரிவித்த ரியாஸ் அவர்கள், “இந்த விபத்து நடக்கும் இடத்திற்கு குறிப்பிட்ட ‎நேரத்தில் என்னை அங்கு செல்ல வைத்து, பேருந்து என் ஆட்டோவின் மேல் ‎விழாமல் பாதுகாத்து, அந்த விபத்தில் சிக்குண்டவர்களது உயிர்காக்கும் ‎உன்னதப் பணியை செய்யும் வாய்ப்பை அல்லாஹ் எனக்கு வழங்கியதற்காக ‎வல்ல இறைவனுக்கு நான் நன்றி செலுத்து கின்றேன்.
இதற்கான ‎முழுமையான கூலியை வல்ல இறைவனிடத்தில் எதிர் பார்க்கின்றேன்” என்று ‎கூறி முடித்தார்.‎ ‎ 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வடசென்னை மாவட்டம் துறைமுகம் ‎கிளையின் உறுப்பினராக உள்ள முத்துப்பேட்டையைச் சேர்ந்த ரியாஸ் ‎அவர்கள் பிறமத அழைப்புப்பணி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ‎அழைப்புப்பணியில் இவர் காட்டும் ஆர்வம் குறித்து ஏற்கனவே உணர்வு 16:30 ‎‎(மார்ச் 23 – 30) இதழில் நாம் விளக்கியுள்ளோம்.‎ ‎ 
ஆட்டோ ஓட்டுனராக உள்ள ரியாஸ் அவர்கள் தனது ஆட்டோவை ‎ஏகத்துவ பிரச்சார வாகனமாக மாற்றிய செய்தியையும், கிறித்தவ விவாத ‎டிவிடிக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தனது ‎ஆட்டோவையே பிரச்சாரக் களமாக அவர் பயன்படுத்தி கிறித்தவ ‎பாதிரிமார்கள் மற்றும் கிறித்தவ சகோதரர்கள் மத்தியிலும், தனது ‎ஆட்டோவில் சவாரி வரக்கூடிய பிறமத சகோதரர்கள் மத்தியிலும் அவர் ‎செய்யும் பிறமத அழைப்புப்பணி குறித்து அந்த இதழில் விரிவாக விளக்கி ‎யிருந்தோம்.‎ ‎ 
இத்தகைய நிகழ்வுகளின் மூலம் இஸ்லாத்தைச் சரியான கோணத்தில் ‎விளங்கிக் கொண்ட வர்களான ஏகத்துவவாதிகள், தாங்கள் எங்கு சென்ற ‎போதிலும், தங்களது உயிர் மூச்சான இந்த அழைப்புப் பணியையும், ‎மறுமையில் மகத்தான நன்மைகளைப் பெற்றுத்தரும் மனித நேயப் ‎பணிகளையும் செய்வதிலேயே குறிக்கோளாக இருப்பார்கள் என்பது ‎தெளிவாகின்றது.‎ ‎ 
மேலும் இத்தகைய செயல்களை ஊக்குவிப்பதும், அதை செவ்வனே ‎செய்வதும், அதற்கு முதலிடம் கொடுத்து முக்கியத்துவம் அளிப்பதும்தான் ‎இந்த ஜமாஅத்தின் தலையாயப் பணி.
அதற்காகத்தான் இந்த ஜமாஅத் ‎மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது. மறுமை வெற்றி ஒன்றுதான் இந்த ‎ஜமாஅத்தின் குறிக்கோள் என்பதை அழுத்தம் திருத்தமாக இத்தகைய ‎நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் இந்த ஜமாஅத்தின் ‎நோக்கத்தை இன்னும் அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்துகின்றன.
இந்த ‎ஜமாஅத்தினரின் தன்னலம் பாராத இந்தப் பணி சிறக்கவும், இம்மை மறுமை ‎வெற்றியை நாம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம் ‎பிரார்த்திக்கின்றோம்.‎ அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.‎
http://www.tntj.net/93795.html

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y