அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, July 04, 2012

நாகை காவல்துறையை நடுநடுங்க வைத்த டிஎன்டிஜேயின் முற்றுகைப் போர்!‎


நாகை (வடக்கு) மாவட்டம் தரங்கம்பாடி தாலூக்காவில் உள்ள பொறையார் ‎பத்தாய் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது அலி (வயது 75). ‎ஏகத்துவக் கொள்கையில் உள்ள இவர் கடந்த 19.6.2012செவ்வாய்க்கிழமை ‎இரவு 8 மணியளவில் வஃபாத் ஆனார்.‎ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.‎
இவருடைய மகன்களான யூசுப், இஜ்ஜதீன் உள்ளிட்ட மூன்று மகன்களுமே ‎தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.‎
இவ்வூரில் யாரேனும் மரணித்தால் பள்ளிவாசலில் அறிவிப்பு செய்வது ‎வழக்கம். எனவே முஹம்மத் அலி அவர்களின் மரணச் செய்தியை பள்ளியில் ‎அறிவிப்புச்செய்ய வேண்டும் என்று ஜமாஅத் நிர்வாகிகளிடம் குடும்பத்தார் ‎கூற, அவர்களோ ஒரு படிவத்தைக் கொடுத்து அதில் கையெழுத்துப் போட்டுத் ‎தருமாறு கூறியுள்ளனர். அந்த படிவத்தில் ‘நான் முஹையதீன் ஆண்டவர் ‎பள்ளிவாசலின் பாரம்பரிய வழக்கப்படி தொழுகை நடத்த சம்மதிக்கிறேன்’ ‎என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்ட குடும்பத்தார் கையெழுத்துப் போட ‎மறுத்து விட்டனர். கையெழுத்துப் போடாவிட்டால் ஜனாஸாவை அடக்கம் ‎செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ஜமாஅத் நிர்வாகிகள் அடாவடியாகக் ‎கூற பிரச்சனையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகளிடம் ‎முஹமது அலியின் குடும்பத்தார் கொண்டு வந்தார்கள்.‎
இவர்களிடம் நேருக்கு நேர் பேசினால் எந்தப் பயனும் இல்லை என்பதால் ‎காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. மறுநாள் காலை 10 மணியளவில் ‎காவல்துறை ஆய்வாளர் மற்றும் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை ‎ஆரம்பமானது.‎
தூக்கி வீசிய எலும்புத்துண்டிற்கு ஏற்ப வாலை ஆட்டிய காவல்துறை:‎
இந்தப் பிரச்சனையில் சட்டப்படியும், மனிதநேய அடிப்படையிலும் ‎செயல்படக்கூடிய அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும்?.‎

“இறந்த மய்யித்தை அடக்கம் செய்யக்கூடாது என்று அடம்பிடிக்கின்றீர்கள். ‎இது சட்டப்படி குற்றம். எனவே அடக்கம் செய்வதற்கு மையவாடியை ‎திறந்துவிடுங்கள்” என்று அடாவடித்தனம் செய்யும் பள்ளிவாசல் ‎நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டிருக்க வேண்டும்.‎


இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் அயோக்கியர்களுக்கு ஆதரவாக ‎சிங்கியடித்துள்ளது காவல்துறை.‎
‎ அதுமட்டுமல்லாமல், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, ‎துக்கத்திலிருந்தவர்களுக்கு மேற்கொண்டு துக்கம் கொடுக்கும் விதமாக, ‎‎“நீங்கள் சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் சொல்வதைக் கேட்டுவிட்டுப் ‎போங்கள்” என்று அவர்கள் போட்ட எலும்புத்துண்டைக் கவ்விக் கொண்டு, ‎அவர்களுக்கு ஆதரவாக வாலை ஆட்டிக் கொண்டு, அடாவடியாகவும், ‎அயோக்கியத்தனமாகவும் பேசியுள்ளது கட்டப்பஞ்சாயத்துக் காவல்துறை.‎
காவல்துறையின் இந்த அயோக்கியத்தனத்தை ஒருபோதும் ஏற்கமுடியாது ‎என்று கூறி நமது நிர்வாகிகள் காவல்துறையின் கட்டப்பஞ்சாயத்தை ‎மறுத்தவுடன் 20.06.12 அன்று மதியம் 12மணியளவில் முதல்கட்ட சமாதானப் ‎பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.‎
20.06.12 புதன்கிழமை அன்று மாலை 5மணிக்கு ஜனாஸா நல்லடக்கம் ‎செய்யவிருப்பதாக நமது சகோதரர்கள் அறிவித்திருந்தனர்.‎
மறுபடியும் அன்று மாலை 4.30 மணிக்கு ஆர்.டி.ஓ.மற்றும் மாவட்ட ‎டி.எஸ்.பி ஆகியோர் முன்னிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ‎அழைத்தனர்.ஆர்.டி.ஓ.வும், டி.எஸ்.பி.யுமாவது கொஞ்சமாவது ‎மனிதநேயத்துடனும், சட்ட அடிப்படையிலும் பேசுவார்கள் என்று பார்த்தால் ‎அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.‎
அவர்களுக்கும் எலும்புத்துண்டுகள் வீசப்பட்டுள்ளன என்ற உண்மை ‎அவர்கள் பேசிய பேச்சிலேயே வெளிப்பட்டது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் ‎ஆர்.டி.ஓ.வும், டி.எஸ்.பி.யும் அங்கு மறுபடியும் கட்டப்பஞ்சாயத்துதான் ‎செய்துள்ளனர்.‎
நீங்கள் அனைவரும் சிறுவர்களாக உள்ளீர்கள். இங்கு உள்ளவர்கள் ‎எல்லோரும் பெரியவர்களாக உள்ளார்கள். எனவே இதில் பெரியவர்கள் ‎சொல்வதை சிறியவர்கள் கேட்டுப் போக வேண்டும் என்பதுதான் இவர்களது ‎மானங்கெட்ட தீர்ப்பு. இப்படித்தான் அனைத்து விஷயங்களிலும் பெரியவர் ‎சிறியவர் என்று பார்ப்பார்களா?‎
ஒரு சிறிய குழந்தையினுடைய தங்கச் செயினை ஒரு முதியவர் ‎திருடிவிட்டால், பெரியவர் என்பதால் அவர் சொல்வதை இந்தச் சிறியவர் ‎கேட்க வேண்டும் என்று இவர்கள் சொல்லுவார்களா?‎
சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு வாங்கிய காசுக்கு மேலே ‎கூடுதலாக கூவியுள்ளனர் இந்த கட்டப்பஞ்சாயத்து காவல்துறையினர் மற்றும் ‎அதிகாரிகள்.‎
மையவாடியின் உள்ளே நுழைந்தது ஏகத்துவப்படை :‎

முந்தைய நாள் 19.06.12 அன்று மரணித்த ஒருவரது உடலை மறுநாள் ‎‎5மணி ஆகியும் அடக்க அனுமதி தராமல், இறந்தவருக்கு குழிவெட்டக்கூட ‎விடாமல் அடாவடித்தனம் செய்து கொண்டு, அநியாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள் ‎போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற செய்தி மற்ற கிளைகளுக்கும் ‎அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்கும் பரவ, நமது கொள்கைச் சொந்தங்கள் ‎பொறையாரில் வந்து குவிய ஆரம்பித்து விட்டனர்.‎

மாலை 5 மணிக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து குவிந்து ‎விட்டனர். இறந்தவரது ஜனாஸா மோசமான நிலையை அடைந்ததும் ‎குளிப்பாட்டி கஃபனிட்டு, அடக்கம் செய்ய மையவாடியை நோக்கி ஜனாஸா ‎கொண்டு செல்லப்பட டென்சன் எகிறியது.‎

ஒருபக்கம் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் கட்டப்பஞ்சாயத்து ‎காவல்துறை பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என்ற பெயரில் இழுத்தடிப்பு ‎நாடகம் நடத்திக் கொண்டிருக்க, நமது கொள்கைச் சொந்தங்கள் எது ‎வந்தாலும் பரவாயில்லை என்று ஜனாஸாவைத்தூக்கிக் கொண்டு கிளம்பி, ‎எந்தப் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து தொழுகை நடத்தக்கூடாது என்று ‎அனுமதி மறுத்தார்களோ அதே பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து ஜனாஸா ‎தொழுகை நடத்தினர்.‎

போலீஸார் தடுத்ததையும் மீறி மையவாடிக்குள் சென்று உடனடியாகக் குழி ‎வெட்டப்பட்டு நல்ல முறையில் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது.‎
கொலை வெறித்தாக்குதல் நடத்திய ம.ம.கட்சியினர்:‎

நமது சகோதரர்கள் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக மையவாடிக்குள் ‎நுழைந்ததும், காவல்துறை மையவாடியை இழுத்துப்பூட்டியுள்ளது. உடனடியாக ‎அந்த இடத்திற்கு வந்த கொள்கைக் குன்றுகளான(?) மாமா கட்சியினரும், ‎சுன்னத் வல் ஜமாஅத்தை சேர்ந்த சில ரவுடிகளும், நமது சகோதரர்கள் மீது ‎மையவாடிக்கு வெளியில் நின்று கொண்டும், பள்ளி மினாராவிலிருந்தும் ‎பெட்டைத்தனமாக சராமரியாக கற்களால் நமது சகோதரர்கள் மீது தாக்குதல் ‎நடத்தியுள்ளனர். இந்தத்தாக்குதலில் நம் சகோதரர்கள் பலருக்குப் படுகாயம் ‎ஏற்பட்டது.‎

இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை ‎பார்த்துக் கொண்டிருந்துள்ளது. அத்தோடு மட்டுமல்லாமல் இந்த ‎காட்டுமிராண்டித் தாக்குதலை நடத்திய மாமா கட்சியினருக்கு காவல்துறை ‎பாதுகாப்புக் கொடுத்ததைக் கண்கூடாகப் பார்த்த பிறகுதான் அவர்கள் போட்ட ‎எலும்புத் துண்டிற்காகத்தான் காவல்துறை அவர்களுக்கு இந்த அளவிற்கு ‎விசுவாசமாக நடந்து கொண்டுள்ளனர் என்பது இன்னும் உறுதியானது.‎

ஜைனுதீன், யூசுபு, பர்ஜீஸ், ராஜா, மரைக்கான் ஆகிய மாமா கட்சியின் ‎அயோக்கியர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் திருப்பனந்தாள் சாகுல் ‎ஹமீது, சேந்தமங்கலம் முஹம்மது நாசர், பொறையார் சேக் அலாவுதீன் ‎ஆகிய சகோதரர்கள் கடுமையாக தாக்கப்பட்டு அவர்களது மண்டை உடைந்து ‎இரத்த வெள்ளத்தில் மிதக்க, உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் ‎கொடுத்துள்ளனர் நமது சகோதரர்கள்.‎
வந்த ஆம்புலன்ஸைத் திருப்பி அனுப்பி வாங்கிய காசுக்கு வேலை பார்த்த ‎நக்கிப் பிழைக்கும் போலீஸார்:‎

நமது சகோதரர்கள் தகவல் தெரிவித்தவுடன் இரத்த வெள்ளத்தில் மிதந்த ‎நமது சகோதரர்களை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்துள்ளது. ‎மையவாடிக்கு பூட்டுப்போட்டு மாமா கட்சியினருக்கு மாமா வேலை பார்த்துக் ‎கொடுத்துக் கொண்டு காவலுக்கு நின்ற காவல்துறையினர், ஆபத்திற்கு உதவ ‎வந்த 108 ஆம்புலன்ஸைத் திருப்பி அனுப்பி, மாமா கட்சியினரிடத்தில் ‎வாங்கிய காசுக்கு வேலை பார்த்து தங்களது எஜமான விசுவாசத்தை ‎தங்களது வாலை ஆட்டி ஆட்டி வெளிப்படுத்தியுள்ளனர்.‎

அங்கு குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது சகோதரர்கள் ‎நினைத்திருந்தால் அந்த இடத்திலேயே அவர்களை சின்னாபின்னமாக்கி ‎இருக்க முடியும். ஆனால், இந்த ஜமாஅத் கட்டுப்பாடும், கட்டுக்கோப்பும் மிக்க ‎ஒரு ஜமாஅத் என்பதால் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ‎கட்டளைக்குக் கட்டுப்பட்டு அமைதி காத்துள்ளனர்.‎

ஒரு மணி நேரம் கழிந்த பிறகுதான் நம்மீது மாமா கட்சியினர் தாக்குதல் ‎நடத்தியதை கைகட்டி வேடிக்கை பார்த்த கையாலாகாத காவல்துறையினர் ‎மையவாடியின் கேட்டை திறந்து விட்டுள்ளனர்.‎

அதன் பிறகு 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்த போது கலவரப் பகுதிக்கு ‎நாங்கள் வந்தால் எங்களது வாகனம் சேதமடைந்து விடும் என்று அவர்களும் ‎கைவிரிக்க இரத்த வெள்ளத்தில் மிதந்த நமது சகோதரர்களை இரண்டு சக்கர ‎வாகனத்தில் வைத்தே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் ‎நமது சகோதரர்கள். இதில் திருப்பனந்தாள் சாகுல் ஹமீது அவர்களுக்கு ‎தலையில் உள்ள காயத்தில் எட்டு தையல்கள் போடப்படும் அளவுக்கு ‎தாக்கியுள்ளது அந்த கொலைகாரக் கும்பல்.‎

இன்னும் கொஞ்சம் தாமதமாகக் கொண்டு வந்திருந்தால் கூடுதலான ‎இரத்தப் போக்கின் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ‎உண்டாகியிருக்கும் என்று நமது சகோதரர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ‎கருத்து தெரிவித்தனர்.‎

காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்திய மாமா கட்சியினர் நமது ‎சகோதரர்களையும் கொலைவெறியோடு தாக்கியதோடு மட்டுமல்லாமல், ‎அவர்களது ஆம்புலன்ஸை உடனடியாக வரவழைத்து அந்த ‎ஆம்புலன்ஸிலேயே அவர்கள் படுத்துக் கொண்டு அவர்களாக ‎மருத்துவமனையில் சென்று அட்மிட்டாகி தவ்ஹீத் ஜமாஅத்தினர் ‎அவர்களைத் தாக்கிவிட்டதாக பொய்ப்புகார் அளித்து தங்களது சமுதாய ‎சேவையை நிலைநாட்டியுள்ளனர். இதுதான் இவர்களது ஆம்புலன்ஸ் சேவை ‎செய்யும் லட்சணம் போலத் தெரிகின்றது.‎
சீரியலுக்கு வாடகைக்கு விடுவதற்கும், நாடகமாடுவதற்கும் தான் ‎ஆம்புலன்ஸா?:‎

நாங்கள் ஆம்புலன்ஸ் மூலம் சேவை ஆற்றுகின்றோம் என்று இவர்கள் ‎சொல்வது எதையென்று இப்போதுதான் நமக்குப் புலப்படுகின்றது.‎

இதற்கு முன்பாக சன் டிவியில் ஓடிக்கொண்டுள்ள நாதஸ்வரம் மெகா ‎சீரியலுக்கு தங்களது ஆம்புலன்ஸை வாடகைக்கு விட்டு காசு பார்த்து ‎கல்லாகட்டினர். இப்போதோ நம் மீது தாக்குதல் நடத்திவிட்டு தாக்குதல் ‎நடத்தியவர்களே ஆம்புலன்ஸில் போய் படுத்துக் கொண்டு அந்த ‎அயோக்கியர்களை ஏற்றிச் சென்று நாடகமாடுவதற்கு இந்த ஆம்புலன்ஸ் ‎உதவியுள்ளது. நாடகத்தில் நடிக்க விடுவதற்கும், நாடகமாடுவதற்கும்தான் ‎இவர்களது ஆம்புலன்ஸ் சேவை போலும்.‎
அயோக்கியத்தனம் செய்த காவல்துறை:‎

இப்படி நமது சகோதரர்கள் இரத்த வெள்ளத்தில் மிதக்க அவர்களைக் ‎காப்பாற்ற துப்பில்லாமல் கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை மாமா ‎கட்சியினர் நம்மைத் தாக்கிவிட்டு அவர்களை நாம் தாக்கியதாக பொய்யான ‎புகாரை நம்மீது அவர்கள் அளிக்க, அதை ஏற்ற காவல்துறை இரத்த ‎வெள்ளத்தில் மிதக்கக்கூடிய அளவிற்கு கொலை வெறித்தாக்குதல் ‎தொடுக்கப்பட்ட சகோதரர்கள் மீதே வழக்குப்பதிவு செய்ததுதான் ‎கொடுமையிலும் கொடுமை.‎

நமது சகோதரர்கள் நால்வர் கொடுத்த புகாரை ஏற்க மறுத்த ‎காவல்துறையினர் இருவரது புகாரை மற்றும் ஏற்று அதையும் கூட ஒரு ‎புகாராக பதிவு செய்து பச்சை அயோக்கியத்தனத்தை செய்துள்ளது.‎

தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் மீதே பொய் வழக்குப் போட்டு 8 பேர் ‎மீது வழக்குப்பதிவு செய்து அநியாயமிழைக்கும் இந்த அநியாயக்காரர்கள், ‎நான்கு மாமா கட்சியினர் மீது தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது ‎கூடுதல் அயோக்கியத்தனம்.‎

இப்படி 8பேர் மீது பொய் வழக்குத் தொடுத்த மாமா கட்சியினரிடத்தில் ‎சில்லரையை வாங்கிக் கொண்டு நம் சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு ‎செய்த காவல்துறையினர் அத்துடன் இவர்களது அயோக்கியத்தனத்தையும், ‎அடாவடித்தனத்தையும் நிறுத்திக் கொண்டார்களா? என்றால் இல்லை.‎

பாதிப்புக்குள்ளான 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு ‎மட்டுமல்லாமல், ஜனாஸாவை அடக்கம் செய்ய மறுத்து, அதற்குத் துணை ‎நின்று, நம்மீது கல்வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்திய கயவர்களை ‎சுதந்திரமாக வெளியில் நடமாட விட்டுவிட்டு, அதில் பாதிக்கப்பட்ட நமது ‎பொறையார் தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் கிளைத் தலைவர் அக்பர் அலி ‎அவர்களை27.06.12 அன்று கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளது இந்த ‎அயோக்கியக் கூட்டம்.‎

முன்னதாக ஜனாஸா அடக்கத்தின் போது கொலைவெறி பிடித்த மாமா ‎கட்சி வெறியர்கள் அக்பர் அலி என்ற இந்தச் சகோதரருடைய இரண்டு சக்கர ‎வாகனத்தை அடித்து சுக்கு நூறாக உடைத்து தூள்தூளாக்கியுள்ளனர். அந்த ‎அளவிற்கு இவர்களுக்கு கொலைவெறி தலைக்கேறி முத்திப் போய் உள்ளது.‎

நம்முடைய சகோதரரைக் கைது செய்த இந்த துரோகத்தைச் செய்ததில் ‎காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன், துணை ஆய்வாளர் லட்சுமி ‎பிரபா,விசித்திர மேரி ஆகியோர் முக்கிய பங்காற்றி தங்களது சேவையை(?) ‎செய்துள்ளனர்.‎
காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!:‎

இவ்வளவு அயோக்கியத்தனத்தையும் செய்துவிட்டு, அனைத்துப் ‎பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருந்த காவல்துறையினரைக் ‎கண்டித்தும், கொலைவெறித் தாக்குதல் நடத்திய மாமா கட்சி குண்டர்களை ‎உடனடியாகக் கைது செய்யக்கோரியும், அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கக் ‎கோரியும் மாபெரும் காவல்நிலைய முற்றுகையை டிஎன்டிஜே ‎அறிவித்தவுடன் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் ‎காவல்நிலயத்தை முற்றுகையிட்டனர். ‎

முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட 28.06.12 வியாழக்கிழமை காலை ‎முதலே நூற்றுக்கணக்கான போலீசாரை காவல்துறை பொறையாரில் ‎இறக்கியது. அதற்கு முந்தைய தினம்தான் இந்தப் போரட்ட அறிவிப்பு ‎செய்யப்பட்டது. போராட்டம் அறிவிக்கப்பட்டு வெறும் 24மணிநேர ‎அவகாசத்தில் சுவரொட்டிகளோ, துண்டு பிரசுரமோ இல்லாமல் வெறும் ‎குறுஞ்செய்திகள்வாயிலாக மட்டுமே திரண்ட மக்கள் 28.06.12 அன்று பிற்பகல் ‎‎3 மணி முதலே பொறையார் டிஎன்டிஜேமர்கஸில் குவிய ஆரம்பித்தார்கள். ‎அஸர் தொழுகைக்கு பின் மாவட்டத் தலைவர் முஹமது நாசர் ‎தலைமையிலும் மற்ற நிர்வாகிகள் முன்னிலையிலும் மர்கசிலிருந்து ‎ஊர்வலமாகப் புறப்பட்ட டிஎன்டிஜேவினர் பழைய பேருந்து நிலையம், முக்கிய ‎வீதிகள் வழியாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் ‎கண்டித்து,‎

“இறந்தவரை அடக்கம் செய்ய
தடை போடும் கூட்டத்திற்கு
துணை போகும் காவல்துறையை,‎
ஆர்.டி.ஓ.வை வன்மையாகக் கண்டிக்கிறோம்”,‎
இறந்தவரை அடக்க மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக சட்டம் இருக்கு ‎தெரியாதா?‎
சட்டம் பேசும் காவல்துறையே!‎
நீதி பேசும் ஆர்.டி.ஓ.வே
நடவடிக்கை எடுக்கத் துணிவில்லையா?‎
இறந்தவரை அடக்கம் செய்ய முயற்சித்த காரணத்தால் தாக்கப்பட்டோம்; ‎காயப்பட்டோம் – காயம் பட்ட எங்கள் மீதே பொய் வழக்குப் போடாதே”‎
என்றும் இன்னும் பல கண்டனக் கோஷங்கள் எழுப்பியவாறு ‎காவல்நிலையம் வந்தடைந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.‎

இந்த முற்றுகையின் போது மாநில நிர்வாகத்தின் சார்பாக அனுப்பப்பட்ட ‎பேச்சாளர் தாவூத் கைசர் மற்றும், முன்னால் மாநில நிர்வாகி ‎ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் ‎ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ‎ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினார்கள்.‎

முன்னரே முற்றுகைக்கு வரும் மக்களைக் கைது செய்து அடைக்க ‎ஸ்ரீனிவாசா மண்டபத்தை பதிவு செய்திருந்த காவல்துறை, மக்கள் ‎வெள்ளத்தைக் கண்டு, நடுநடுங்கியது. இத்தனை மக்களுக்கு மண்டபம் ‎போதாது என்பதால் விழிபிதுங்கிய அவர்கள் முற்றுகை முடிந்த பிறகு, ‎‎“நாங்கள் உங்களைக் கைது செய்யவில்லை. நீங்களே அமைதியாகக் ‎கலைந்து சென்றுவிடுங்கள்” என்று வேண்டுகோள் விடுக்க, மாவட்டப் ‎பொருளாளர் ராஜா முஹம்மத் அவர்களின் நன்றி உரைக்குப் பின்பு துஆ ஓதி ‎அமைதியாக கலைந்து சென்றனர்.‎
அயோக்கியத்தனத்திலும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

தவ்ஹீத் ஜமாஅத்தினரைத் தாக்கிய காவாலிகள் கூட்டத்திற்கு ஆதரவாக ‎ஜால்ரா தட்டிய காவல்துறை, தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீது 147, 148, 452, ‎‎427, 324 ஆகிய செக்சன்களின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது ‎அயோக்கியத்தனத்திலும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.‎
அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தவர் கலவரம் செய்தது ‎எப்படி?‎
கலவரம் செய்ததாகச் சொல்லியும், மாமா கட்சியினர் மீது தாக்குதல் ‎நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டும், கைது செய்யப்பட்டுள்ள பொறையார் ‎கிளையின் முன்னாள் தலைவர் அக்பர் அலி அவர்கள் சமாதானப் ‎பேச்சுவார்த்தையின் போது ஆர்.டி.ஓ. மற்றும் டி.எஸ்.பி. உடனான ‎பேச்சுவார்த்தையில் அவர்களுடன் இருந்துள்ளார். அவர் ‎பேச்சுவார்த்தையிலிருக்கும் போதுதான் இந்தக் கயவர்கள் கூட்டம் நம்மீது ‎கொலை வெறித்தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கிருந்தவர் இங்கிருந்து ‎கலவரம் செய்ததாக காவல்துறை பொய் வழக்கு போட்டதிலிருந்து இவர்கள் ‎எந்த அளவிற்கு வாங்கிய பணத்திற்கு விசுவாசமாக வேலை ‎பார்த்துள்ளார்கள் என்பது இதன் வாயிலாக தெளிவாக தெரிய வருகின்றது.‎
பொறுப்பேற்றவுடனேயே கடமையை சரிவர ஆற்றிய(?) ஆய்வாளர்
இதில் முதலில் நாகை பொறையார் தரங்கம்பாடியில் ஆய்வாளர் இடம் ‎காலியாக இருந்ததால் திருவெங்காடு இன்ஸ்பெக்டர் கார்த்திக் சாமிதான் ‎இதை கூடுதல் பொறுப்பாக எடுத்துப் பார்த்துள்ளார். அவரும் சுன்னத் வல் ‎ஜமாஅத்தார்களுக்கு ஜால்ரா தட்டியுள்ளார்.‎
அடுத்ததாக அந்த இடத்திற்கு பொறுப்புக்கு வந்த ஆய்வாளர் சுப்பிரமணியன் ‎தான் பொறுப்பேற்றதுமே வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு ஒருபக்க ‎சார்பாக நடந்து தனது கடமையைச் செவ்வனே(?) நிறைவேற்றியுள்ளார்.‎
பணம் படுத்தும் பாடு

தாக்குதல் நடத்திய மாமா கட்சியினர் ஒருவரைக் கூட இதுவரை கைது ‎செய்யவில்லை என்பதிலிருந்து பணம் எந்த அளவிற்குப் புகுந்து ‎விளையாடியுள்ளது என்பது தெளிவாகின்றது.‎
கண்டன உரை
கைசர் அவர்கள் தனது கண்டன உரையில், கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு ‎எதற்கு பீஸ் மீட்டிங் என்றும், திருடன் திருடிவிட்டான் என்று திருடியவன் ‎மீது குற்றச்சாட்டு சொன்னால், திருடியவனையும், திருட்டு கொடுத்தவனையும் ‎உட்கார வைத்து பீஸ் மீட்டிங்கா போட்டுக் கொண்டிருப்பீர்கள்?.‎
இறந்தவரது உடலை அடக்க மறுத்து அயோக்கியத்தனம் செய்யும் ‎அயோக்கியர்களுக்கு ஆதராவாக காவல்துறை நிற்பது விசித்திரம்.‎
இது சட்டமீறல் இல்லையா?‎
இ.பி.கோ 297 பிரிவின்படி ஈமச்சடங்கிற்கு தொந்தரவு செய்தல், மற்றும் ‎பிணத்தை அவமதித்தல் ஆகிய குற்றங்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் ‎தண்டனை என்ற சட்டம் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்று ‎காரசாரமாக கேள்வி எழுப்பினார்.‎
இது கடைசி எச்சரிக்கை. இனிமேல் இது போன்று தடுத்தால் 1000 பூட்டுக்கள் ‎நீங்கள் போட்டு வைத்தாலும், 1000 பூட்டுக்களையும் சுக்கு நூறாக ‎தகர்த்தெறிவோம் என்று கூறியதுடன், பெட்டைத்தனமாக ஒளிந்திருந்து ‎கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்திய மாமா ரவுடிகளுக்கு ‎உண்மையிலேயே ஆண்மையிருக்குமானால் நேருக்கு நேராக வந்து மோதிப் ‎பார்ப்பார்களா? என்றும் கேள்வியெழுப்பினார்.‎
இனிமேல் இப்படி ஒரு தடையில்லாத அளவுக்கு நாங்கள் களம் ‎கண்டுள்ளோம். அடுத்து இது போன்று ஒரு அடக்குமுறையைக் ‎கட்டவிழ்த்துவிட்டால் எங்களது உயிரே போனாலும் பரவாயில்லை. எங்களது ‎உரிமையை மீட்காமல் ஓய மாட்டோம் என்று எச்சரித்து முடித்தார்.‎

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y