அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, May 27, 2012

மற்றவர்களுக்கு விரிவடையும் இட ஒதிக்கீடு முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன்?


மத்திய அரசின் கல்வி ,வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27சதவீத இட ஒதிக்கீடு உள்ளது .இந்த இட ஒதிகீட்டை அன்றைய பிரதமர் வி .பி சிங் சட்டமாக்கினார் ஆனால் ஐ ஐ டி..ஐஐஎம் .உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இந்த ஒதிக்கீடு அமுல் செய்யப்படாமல் இருந்தது எனவே மத்திய அரசு 2006 ம்ஆண்டில் ஒரு சட்டத்தை கொண்டு வந்து ,மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதிக்கீடு வழங்க வகை செய்தது ஆனால் இந்த சட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தன இதைகளையும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு இந்த சட்டத்திருத்தத்திற்கு பாராளுமன்றமக்களவை மே16ம்தேதி ஒப்புதல் வழங்கியது இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய மந்திரி கபில்சிபல் தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் மற்றும் இதரபிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டுக்கு பாடுபட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்றார் .

இதுபோல் தாழ்த்தப்பட்ட ,பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதிக்கீடை அமுல் செய்யக்கூடாது என்று உ .பி .உயர்நீதி மன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது இந்த உத்தரவின்படி பதவி உயர்வில் மேற்க்கண்ட பிரிவினருக்கு இட ஒதிக்கீடு அமுல்படுத்தப்பட முடியாது ஏற்கனவே இருந்த இட ஒதிக்கீடு அமுல்படுத்தப்பட வேண்டுமெனில் இதற்காக பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் .இந்த சட்டத்தை இயற்றக் கோரி மேற்கண்ட பிரிவைச் சேர்ந்த எம் .பி .க்கள் பாராளுமன்றத்தில் வலியுறித்தினார் .இது குறித்து விவாதிக்க மே 23 தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமர் விவாதித்துள்ளார் .

இந்த கூட்டத்திற்கு பிறகு பதவி உயர்வில் எஸ் சி எஸ். டி ஒ .பி .சி யினருக்கு இட ஒதிக்கீடு வழங்க பராளும்மன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு ,நிறைவேற்றப்படும் .இந்த சட்டம் நிறைவேறிய பிறகு மேற்க்கண்ட பிரிவினருக்கு இடஒதிக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும் இப்படி மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களிலும் பதவி உயர்விலும் எஸ் .சி எஸ் .டி ., ஒ .பி .சி பிரினருக்கு இட ஒதிக்கீடு கிடைக்கும் போது முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு மட்டும் கனவாகவே இருக்கிறது .தனி இடஒதிக்கீடு பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் முஸ்லிம்களுக்கு உள்ளன கமிஷன் அமைத்து அறிக்கை பெறுதல் உள்ளிட்ட சடங்குகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டன .

சென்ற இரு மக்களவைத் தேர்தல் முதற்கொண்டு சமீபத்தில் நடந்த உ .பி .சட்டமன்ற தேர்தல் வரை நடந்த எல்லாத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இடஒதிக்கீடு குறித்து வாக்குறுதி அளித்தது .ஆனால் இன்று வரை சட்டம் மட்டும் கொண்டு வரவில்லை .இதற்கு காரணம் ஒட்டு வங்கி அரசியல் .எஸ் சி எஸ் .டி
ஒ பி சி .பிரிவினருக்கு சாதகமாக சட்டம் கொண்டுவரப்படாவிட்டால் இம்மக்களின் ஓட்டுகளை அரசியல் கட்சிகள் இழக்க நேரிடும் .இதற்க்கு எந்த அரசியல் கட்சியும் தயார் இல்லை .அதே சமயம் இந்த சமூகத்தின் எம் .பி .க்கள் இட ஒதிக்கீடு உரிமைக்காக பாராளுமன்றத்தை ரணகளம் பண்ணிவிடுவார்கள் .இதற்குபயந்து கொண்டு ஆளும் கட்சியும் ,பிற கட்சிகளும் இடஓதிக்கீடுக்கு ஆதரவான சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற முயலுகிறது .

முஸ்லிம்களுக்கு இவர்களைப் போன்ற வீரமோ வீரியமோ கிடையாது தனி இடஒதுக்கீட்டுக்காக பாராளுமன்றத்தில் முஸ்லிம் எம் .பி .க்கள் எவரும் ரகளை பன்ன மாட்டார்கள் .இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்தால் போதும் .அதை நம்பி முஸ்லிம்கள் கும்பல் கும்பலாகச் சென்று ஒட்டு போட்டுவிடுவார்கள் .இடஒதிக்கீடு தராமல் ஏமாற்றினாலும் பா.ம.க.வின் ராமதாஸைப் போன்று அல்லது ராஜஸ்தானின் குஜ்ஜார்களைப் போன்று கடுமையான போராட்டங்களை நடத்த இவர்களுக்கு தெரியாது அதனால் தான் முஸ்லிம்களுக்கான தனி இடஒதிக்கீடு தள்ளிப் போயிக் கொண்டே இருக்கிறது .

முஸ்லிம்கள்சொரனையற்றவர்கள்என்றஎண்ணம்எல்லாஅரசியல்வாதி உள்ளத்திலும் ஆழப் பதிந்துள்ளது இந்த எண்ணம் மாறாதவரை அல்லது மாற்றாதவரை முஸ்லிம்களுக்கான தனி இடஒதிக்கீடு என்பது கானல் நீர்தான் .உயர்கல்வியிலும்,பதவி உயர்விலும் அனைவருக்கும் இடஒதிக்கீடு கிடைக்கிறது.அதை விரிவு படுத்துவதற்கான சட்டங்களும் விரைந்து கொண்டு வரப்படுகின்றன.ஆனால் முஸ்லிம்கள் விஷயத்தில் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.இந்த அறிவு முஸ்லிம்களுக்கு வரவேண்டும்.இந்த அறிவுச் சுடர் நாலா திக்குகளிலும் பரவி போராட்டங்கள் கிளர்ந்து எழ வேண்டும். கடைசியில் அது ஓட்டு வங்கியாக மாறி ,முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு தரும் கட்சிக்கு மட்டுமே ஓட்டு.இட ஒதிக்கீடு தராத கட்சிக்கு வேட்டு என்ற முடிவுக்கு முஸ்லிம் சமூகம் வரவேண்டும்.

இந்தச் சூழல் ஏற்படும் போது முஸ்லிம்களின் தனி இடஒதிக்கீடு உரிமை தானே கனியும். அந்தச் சூழல் ஏற்ப்படுவதும், ஏற்படாமல் இருப்பதும் அவர்களின் கையிலேயே இருக்கிறது. இதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து செயல் திட்டங்களை வகுக்குமா?

நன்றி : உணர்வு இதழ்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y