அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Friday, July 29, 2011

யான்புவில் ரமளான் தொடர் சொற்ப்பொழிவு குறித்து நோட்டிஸ்

யான்புவில் ரமளான் தொடர் சொற்ப்பொழிவு குறித்து நோட்டிஸ் மக்கள் புழக்கம்  உள்ள   பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது 




Thursday, July 28, 2011

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் ரமளான்

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றனஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்கள்: புகாரீ (1898)முஸ்லிம் (1956)


ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்கள்: புகாரீ (1899)முஸ்லிம் (1957)
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

Monday, July 25, 2011

கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டியவை!

கஞ்சத்தனம் 
இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்துநாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும். ஆனால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்பவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன.

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர்அது தங்களுக்குச் சிறந்தது என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 3:180)

மெகா டிவியில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி

படத்தை பெரிதாக்கிக்காண படத்தின் மீது சொடுக்கவும் 



Saturday, July 23, 2011

இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்வதைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாத் போராடாமல் இருப்பது ஏன்?



ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் மக்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப போலிப் போராட்டம் நடத்தும் அவசியம் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் நடத்தாத காரணத்தால் போலிப் போராட்டங்களை நடத்துவதில்லை. இது தான் காரணம்.

Thursday, July 21, 2011

உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள்தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்..
பொதுவாக மஹதிகளைப் பொருத்தவரை ஒரு குணம் உண்டு. இவர்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரில் உள்ள ஒரு தனிப்பள்ளிவாசலில் கட்டி வைத்து சித்ரவதை செய்வார்கள். முழுக்க முழுக்க இவர்கள் தங்களை ஒரு தனிப்பிரிவாகவே நினைத்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தராத ஒரு தனி வாழ்க்கையை வாழ்கின்றனர்,
இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் சிலருக்கு ஏகத்துவக் கொள்கை கொஞ்சமாக ஊற்றெடுக்கஅவர்களின் கொள்கை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்தைப் புரிந்து கொண்டு அங்குள்ள மஹதீகளுக்கு எதிராக அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யத் துவங்குகின்றனர்.
ஆனால் இந்த மக்கள் இதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் தான் இருந்து வந்தார்கள். அவர்களின் வழிமுறைகளைத் தான் பின்பற்றி வந்தார்கள்.
அவர்களுக்குள்ளேயே இந்த ஏகத்துவ தீபம் சுடர் விட்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால்அந்த மஹதீ வழிகேடர்களால் இவர்களை அடித்து உதைப்பதைத் தவிர வேறு வழியை அவர்களால் கையாள முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஏகத்துவ சகோதரர்களை இதனால் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும் இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்கள் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில் அங்கே ஆய்வாளர் மற்றும் துனைக்கண்காணிப்பாளர் முன்னிலையிலேயே இவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டனர் அந்த வழிகேடர்கள். காவல்துறையில் போதிய பலம் இல்லை என்று கூறி காவல்துறையினரும் கைவிரித்து விட்டனர். அதுமட்டுமின்றி இவர்களிடம்,
நீங்கள் எங்காவது தப்பித்து ஓடி விடுங்கள் இல்லாவிட்டால் அவர்கள் உங்களை கொலை செய்து விடுவார்கள் என இவர்களுக்கு அறிவுறையும்(?) வழங்கியுள்ளனர் காவல்துறையினர். இவர்களின் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஊர் சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி கையில் காசும் இன்றி உடுத்திய ஆடையுடன் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தஞ்சம் புகுந்தனர். மஹதிகளின் வெறியாட்டத்தால் அகதிகளாக வந்திருக்கும் கொள்கைச் சகோதரர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரவனைத்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.
அந்த மஹதி வழிகேடர்களின் அயோக்கியத்தனங்களை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இன்று(21/07/2011) பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.,
பத்திரிகையாளர்களைச் சந்தித்த அந்தச் சகோதரர்கள் தங்களின் துக்கம் தாங்காமல் அழுக ஆரம்பித்தனர். வந்திருந்த எல்லோருமே கண்ணீர் விட ஆரம்பித்தனர்.
எங்களுக்கு உடுத்துவதற்கு துணியில்லைஎங்கள் பிள்ளைகளை எங்களால் பார்க்க முடியவில்லைசொந்த ஊருக்குள்ளே நுழைய முடியவில்லைநாங்கள் ஏற்றுக்கொண்ட இந்தக் கொள்கைக்காக நாங்கள் இப்போது இந்த அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். என்ன ஆனாலும் எங்களின் கொள்கையிலோபிரச்சாரத்திலோ நாங்கள் பின்தங்கிட மாட்டோம். ஆனால் எங்களின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வழியின்றி எங்களைக் கொலை செய்யும் நோக்கத்தில் வெறியாட்டம் நடத்திய அத்தனை பேரையும் கைது செய்து எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நாங்கள் பிறந்த எங்கள் ஊருக்குள் நிம்மதியாக நடமாட எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்இந்த வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

தப்பித்தோம் பிழைத்தோம் என சென்னை வந்த சகோதரர்கள் பத்திரிக்கையாளர் முன்பு கண்ணீர் மழ்க பேட்டியளிக்கும் வீடியோ காட்சி




அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான் அல்குர்ஆன் 61:8 


தலைமை செய்தி : http://www.tntj.net/

எஞ்சிய பொருளுக்குத்தான் ஜகாத் கொடுக்கவேண்டுமா?


வருமானத்தில் 2.5 ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது செலவு போக மீதமுள்ளதில் 2.5 கொடுக்க வேண்டுமா.

திருக்குர்ஆன் 9:103, 51:19, 70:24 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்படவில்லை.

செலவு போக மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்ற கருத்தைச் சில அறிஞர்கள் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல.

Monday, July 18, 2011

அருள்மிகு ரமளானும் அறிய வேண்டிய படிப்பினைகளும்

இன்னும் சில நாட்களில் நம்மிடம் ஒரு சிறப்பு மிக்க சங்கை மிக்க மாதம் வரவிருக்கிறது அதுதான் ரமலான் மாதம் இந்த மாதத்தின் சிறப்பிற்கு முக்கிய காரணம் இந்த மாதத்தில் தான் மனித குலத்தின் நேர்வழியான திருக்கு குர்ஆன் அருளப்பட்டது 

 ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;.  [2:185]

Friday, July 15, 2011

ரமலானை முழுமையாக பயன்படுத்துவோம்

Ø  தபூக் நேயர்களுக்காக ஆன்லைன் பிஜேயின் நேரடி உரை 

Ø  உரை நிகழ்த்துபவர் சகோதரர் பி.ஜெய்னுல் ஆபிதீன் உலவி 

Ø  நாள் : 22.07.2011 வெள்ளி 

Ø  நேரம் : சவுதி நேரம் பிற்பகல் 01.30 முதல் 02.30 வரை 

நித்தியானந்தாவுக்கு பட்டுக்கம்பளமா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்


போலிச்சாமியார் நித்தியானந்தாவுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கும் தமிழக காவல்துறையைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் வெளியிடும் கண்டன அறிக்கை:
இந்து மக்களால் இளைய விவேகானந்தராகக் கருதப்பட்ட நித்தியானந்தா எனும் போலிச் சாமியார் தனது காமக்களியாட்டத்தினால் இந்துக்களின் கடும் கோபத்துக்கு உள்ளானார். இத்தகைய கேவலமான போலிச்சாமியாருக்கு தமிழகக் காவல்துறை பட்டுக் கம்பளம் விரித்ததன் மூலம் தன்மீது தானே காரித்துப்பிக் கொண்டது.

Wednesday, July 13, 2011

பராஅத்தும் மத்ஹபுகளும்


நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)

Tuesday, July 12, 2011

தமிழகம் கண்ட தவ்ஹீத் புரட்சி!


நாம் வளர்த்த இயக்கம் சமுதாய, அரசியல் ரீதியான பிரச்சனைகளில் தலையிடாமல் தூரப் போனது.
வெளிவந்தவுடன் சமுதாய, அரசியல் ரீதியிலான பிரச்சனைகளையும் நாம் கையில் எடுத்தாக வேண்டும் என்ற நம்முடைய வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கானது. பற்பல ஊர்களில் பற்பல அமர்வுகள்!
சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பது காலத்தின் கட்டாயம், ஒட்டுமொத்த தமிழகத்தில் அரசியல் ரீதியிலான பிரச்சனைகளில் முஸ்லிம்களுக்கு ஒரு வெற்றிடம் உள்ளது; அதை நம்மைத் தவிர வேறு யாரும் நிரப்ப முடியாது என்று விளக்கி, அதற்குக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இன்னின்ன ஆதாரங்கள் என்று சமர்ப்பணம் செய்தோம்.
ஒவ்வொரு அமர்விலும் ஆமாம், ஆமாம் என்று தலையாட்டி விட்டு, அமர்விலிருந்து அப்பால் சென்றதும் சறுகி விடுவதே அந்த இயக்கத் தலைவரின் வாடிக்கையாக இருந்தது.
இவர்கள் அழைப்புப் பணி செய்வது அரபு நாட்டுச் சம்பளத்திற்கு செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்குத் தான்!
‘சமுதாயப் பிரச்சனைகளில் தலையிட்டால் உளவுத் துறையின் ஆந்தைப் பார்வைக்கு ஆளாக நேரிட்டு அபாயத்தில் சிக்கிக் கொள்ள வேண்டும்! அது நம்முடைய அரபக வருவாய்க்கு ஆப்பு வைத்து விடும். அதனால் நமக்கு ஏன் இந்த வம்பு?”
இது தான் இவர்களின் செயல்பாடுகளிலிருந்து முடிவாக நாம் கண்டதும், கவனித்ததும் ஆகும்.
அதனால் ஆன்மீகத்தை மட்டும் வைத்துக் காலத்தைத் தள்ளுவோம் என்பது தான் அவரது கணக்கு!

Monday, July 11, 2011

வாழ்நாள் நீட்டிக்கப்பட வேண்டுமா.

உறவைப் பேணி வாழுங்கள் என்றும் உறவுகளை அலச்சியம் செய்யும் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றும் சாதாரண உபதேசமாக அல்லாமல் எச்சரிக்கையாகவே விடுக்கிறது இஸ்லாம்.

உறவினர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களை நலம் விசாரிப்பதும், அவர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வதும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது மட்டும் தான் உறவைப் பேணுதல் என்று நினைத்து விடாமல் இறைவன் நமக்கு கொடுக்கின்ற பொருளாதாரத்திலிருந்தும் உறவினர்களில் நலிவடைந்தோருக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை  முன்னேற்றி விடச் சொல்கிறது இஸ்லாம்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள் தேர்வு

1 - நகர கிளைகளின் செயல்பாடு வாசிக்கப்பட்டது, அதன் பின் மேலும் அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று பொ.செ அறிவுற்த்தினார்கள்.

2 - மண்டல செயல்பாடுகள் மண்டல செயலாளர் அப்துல் பாரி, துணைத்தலைவர் முஸ்தஃபா இருவராலும் வாசிக்கப்பட்டது. அதனை பவர்பாய்ண்டிலும் திரையிடப்பட்டது. இதன் பின் மண்டல செயல்பாட்டிற்க்கு பொ.செ ஆலோசனைகள் வழங்கினார்கள்.

3 - மண்டல பொருளாளர் யூனுஸ் சென்ற வருட கணக்குகளை சமர்ப்பித்தார்கள், அதனை இத்துடன் இணைத்துள்ளோம். இதனையும் பவர்பாய்ண்டில் காண்பிக்கப்பட்டது.

4 - இதன் பின் மண்டல தலைவர் நவ்ஷாத் கடந்த நிர்வாகத்திற்க்கு ஒத்துழைத்த அனைவர்க்கும் நன்றி கூறி, செயல்பாட்டில் குறைகள் இருந்தால் அதற்க்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதன்பின் பழைய நிர்வாகத்தினை கலைத்து பொ.செ தேர்தலை அறிவித்தார்கள். அதில்

Friday, July 08, 2011

பாவியாக்கும் பராஅத் இரவு

சூரியன் பொழுதை அடைந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம்கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும்பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.
இது மாத்திரமாமாலை நேரத்தில் ரொட்டி சுட்டுவீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.

மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.
தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமாமூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y