அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, July 18, 2011

அருள்மிகு ரமளானும் அறிய வேண்டிய படிப்பினைகளும்

இன்னும் சில நாட்களில் நம்மிடம் ஒரு சிறப்பு மிக்க சங்கை மிக்க மாதம் வரவிருக்கிறது அதுதான் ரமலான் மாதம் இந்த மாதத்தின் சிறப்பிற்கு முக்கிய காரணம் இந்த மாதத்தில் தான் மனித குலத்தின் நேர்வழியான திருக்கு குர்ஆன் அருளப்பட்டது 

 ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;.  [2:185]
நபி[ ஸல் ]கூறினார்கள் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இந்த நோன்பை இறைவன் முஹம்மது நபி {ஸல்} அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை மாறாக முன் சென்ற சமுதாயங்களுக்கும் கடமையாக்கியுள்ளான் 

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்)  2:183,184

இந்த வசனத்தில் நாம் இறையச்சம் உடையவர்கள் ஆகவேண்டும் என்பதற்க்காக நோன்பு கடைமையக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகின்றான் 

 எத்தனையோ ரமலான் மதங்களை நாம் அடைந்துள்ளோம் அந்த ரமலான் மதங்களில் நாம் நோன்பு நோற்றுள்ளோம் ஆனால் அல்லாஹ் எதிபார்க்க கூடிய அந்த இறையச்சம் நம்மிடம் ஏற்ப்பட்டுள்ளதா எனபதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.   

இறையச்சம் என்பது இறை நம்பிக்கையாளர்களின் உயிர் நாடியாக இருக்கவேண்டும் அவனுடைய ஒவொவொரு செயலிலும் எல்ல நேரங்களிலும் இந்த இறையச்சம் வெளிப்படவேண்டும்.

ஒரு இறை நம்பிக்கையாளன் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும்போது தீமையான பேச்சுக்களை பேசாமல் மோசடி செய்யாமல் தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்கவேண்டும் என்று எண்ணி அனைத்து தீமைகளிலிருந்தும் விலகி இருக்கின்றான். 

அந்த ரமலான் மாதம் முடிந்துவிட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களை செய்யத் துவங்கிவிடுகின்றான் ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தவில்லை.

இறையச்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்றோ அம்மாதம் முடிந்துவிட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்றோ இறைவன் கூறவில்லை இறையச்சம் என்பது ரமலான் மாதத்திற்கும் மற்ற 11 மாதங்களுக்கும் பொதவானதுதான் எனவே எல்லா நாளிலும் ஒருவரிடம் இறையச்சம் பிரதிபலிக்கவேண்டும்.

ரமலான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கு அருகில் அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட அவனுக்கு பிடித்தமான உணவுகள் இருக்கும் அவனுடைய மனைவி இருப்பாள் தான் விரும்பியதை அவன் செய்யலாம் யாரும் கேட்க்க மாட்டார்கள் எனினும் நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம் எனவே இது நமக்கு தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போ நமக்கு தடுக்கப்பட்டுள்ளது என்று விளங்கி தவிர்த்து இருக்கின்றான் .

இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்துவிட்டன என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் தவிர்த்து இருக்கின்றோம் அப்படி என்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒருபோதும் ஹலால் ஆகாது எனவே நாம் யாரையும் ஏமாற்றக்கூடாது யாருக்கும் மோசடி செய்யக்கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வரவேண்டும் இந்த இறையச்சம் வருவதற்குத்தான் நோன்பு கடைமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகின்றான்.

ரமலான் மாதம் வந்துவிட்டால் பெரியவர் சிறியவர் ஆண்கள் பெண்கள் என அனைவருமே வணக்கசாலிகளாக ஆகிவிடுவதை பார்க்கின்றோம் பள்ளிவாசல் நிரம்பி வழியும் சிலநேரங்களில் ஐவேளை தொழுகைக்கு வாழக்கமாக வருபவர்களுக்கு கூட இடம் கிடையாது அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். 

ஏனெனில் ரமளானில் செய்யக்கூடிய காரியங்கள் அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று அனைவரும் விளங்கி வைத்துள்ளனர் எனவே ஐவேளை தொழுகையிலும் தவறாது கலந்துகொள்வார்கள் இரவில் நன்மையை எதிர்ப்பார்த்து தூக்கத்தை தியாகம் செய்து நின்று வணங்குவார்கள்.

'நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 37 

என்ற நபி [ஸல்] அவர்களின் ஹதீஸின் அடிப்படையில் ரமலான் மாதத்தில் ஐவேளையும் இரவிலும் தொழுகின்றனர்  

அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். அல்குர்ஆன் 51:17,18


தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; அவனுக்கே அஞ்சி நடங்கள்; அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.அல்குர்ஆன் 6:72 


ஸலாத்தைப் பரப்புங்கள் உணவு அளியுங்கள் உறவுகளை ஒட்டி வாழுங்கள் மக்கள் தூங்கும் போது தொழுங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள் என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் அப்துல்லாஹ் பின் ஸலாம் [ரலி] அஹ்மத் 24193 

ரமளானில் தொழச் சொன்ன அல்லாஹ்வும் அவனது தூதர் [ஸல்] அவர்களும் தான் ரமலான் அல்லாத காலங்களிலும் தொழ வேண்டும் என்று கூறுகின்றனர் எனவே ரமானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும் நாம் தொழுகைகளைப் பேணவேண்டும்.
    
அல்லாஹ்வின் அருள் மறையான திருக்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதினால் அவருக்கு ஒரு நன்மை உண்டு அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும் அலிஃப் லாம் மீம் எனபது ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன் மாறாக அலிஃப் ஒரு எழுத்து லாம் ஒரு எழுத்து மீம் ஒரு எழுத்து என்று நபி [ஸல்] கூறினார்கள் திர்மதி 2910 

மேலும் ரமலான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவைத் தயாரித்து ஏழை எளியவருக்குக் கொடுப்போம் ஆனால் ரமலான் முடிந்துவிட்டாலோ நம் அண்டை வீட்டார் உண்ண உணவில்லாமல் பசியோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் கூட அவர்களுக்கு உணவளிக்க நமக்கு மனம் வருவதில்லை ஏன் என்று நமக்கு நாமே கேட்டு ரமலான் அல்லாத நாட்களில் பசித்தவர்களுக்கு உணவளிக்கவேண்டும்.
நாம் எவ்வளவு வீண் வம்பு செய்பவர்களாக இருந்தாலும் ரமலான் வந்துவிட்டால் நம்மிடம் யார் வம்புக்கு வந்தாலும் கூட நான் நோன்பாளி என்று விலகிக் கொள்கிறோம் அதே போன்று ரமலான் முடிந்த பிறகும் செயல்பட நம்மை நாமே சீர்திருத்திக் கொளவேண்டும் 


இன்று டிவி இல்லாத வீடே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு எல்லா வீடுகளிலும் டிவி உள்ளது அதிகமான நேரத்தை நாம் அந்த டிவியின் முன்னால் தான் சிலவிடுகின்றோம் பள்ளியில் பாங்கு சொல்வதுகூட தெரியாமல் சீரியல் சினிமா ஆடல் பாடல்களில் மூழ்கி இருக்கின்றோம்.

ஆனால் ரமலான் மாதத்தில் நம்மில் பலபேர் சினிமா சீரியல் பார்ப்பதை விட்டுவிடுகின்றோம் ஏனெனில் நோன்பு நோற்றிருக்கோம் போது பொய்யான காரியங்களில் ஈடுபட்டால் எந்தப் பலனும் இல்லை என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" 
பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 1903


ரமலான் மாதம் முடிந்து விட்டால் மீண்டும் சினிமா சீரியல் ஆடல் பாடல் என்று சென்று விடுகின்றோமே இது சரிதானா நபி [ஸல்] ரமளானில் மட்டும் தான் பொய்யான காரியங்களை விட்டும் தடுத்தார்களா இல்லையே எல்லா நாட்களிலும் பொய்யான காரியங்கள் தடுக்கப்பட்டவை தான் என்பதைச் சிந்தித்து மற்ற நாட்களிலும் அவற்றை விட்டும் விலகியிருப்போம்.

இன்னும் எத்தனையோ நன்மையான காரியங்களை ரமளானில் மட்டும் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் செய்வோம் அதுபோல் அனைத்து தீமைகளை விட்டும் ரமலானின் மட்டுமல்லாது வாழ்நாள் முழுவதும் விலகியிருப்போம்.

சென்ற ரமளானில் இருந்தவர்கள் இன்று இல்லை எனவே வல்ல நாயன் இந்த ரமலான் மாதத்தை அடையும் பாக்கியத்தை நமக்கு தந்து அந்த ரமளானில் கடைபிடிக்கும் காரியங்களை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக! 

 நன்றி ஏகத்துவம் 

DOWNLOAD PDF FILE

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y