நண்பர்களுக்கிடையில்...
ஒரு சிலர், நல்ல நண்பர்களாய் இருப்பார்கள். திடீரென இருவரும் எதிரும் புதிருமாக மாறிவிடுவார்கள். ஒருவர் கிழக்கே சென்றால் இன்னொருவர் மேற்கே செல்வார் எனுமளவுக்கு பகைமைத்தீ பற்றி எரியும். நேற்று வரையி லும் நல்ல நண்பர்களாய், ஒரே தட்டில் சாப்பிடுபவர்களாய், ஒரு சட்டையை மாற்றி மாற்றி போடுபவர்களாய்... இவ்வாறு தங்கள் நட்பை ரம்மியமாய் பரிமா றிக் கொண்டவர்கள் ஏன் இப்படி..? என்று சிந்தித்து பார்த்தால் அதில் ஒருவர் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள முன்வராததே காரணம் என்பதை சந் தேகமற கூறிவிடலாம். செய்த தவறை ஒப்புக் கொள்ள தயங்கினால் இரு நண்பர்கள் மட்டுமல்ல, நட்பை பரிமாறும் நாடுகள் கூட தமக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டு, பிரிந்து சென்று விடும். நல்ல நண்பர்களை நாம் தக்க வைக்க வேண்டுமெனில் நாம் செய்த தவறை சிறிதும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ள முன்வர வேண்டும். இதோ அருமையான இரு நல்ல நண்பர்களின் சம்பவத்தை கவனியுங்கள்
நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாம் விட்டேன்." என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை. நூல் : புகாரி 3661
அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும், உமர் (ரலி) அவர்களுக்கும் சிறிது பிரச்சினை ஏற்படுகின்றது. உடனே அபூபக்கர் (ரலி),உமர் ரலி அவர்களிடம், தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு, தன்னை மன்னிக்கும்படி கேட்கின்றார். அந்நேரத்தில் உமர் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. பின்பு, தான் செய்த இந்த தவறுக்காக வருந்தி, இதை ஒப்புக் கொள்ள அபூபக்கரின் வீட் டிற்கே சென்று விடுகின்றார். என்ன அருமையான நண்பர்கள்! ஒருவருக்கொருவர் தாம் செய்த தவறை ஒப்புக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு வருகின்றார்கள் என்பதை பார்க் கும்போது இதுபோன்ற ஒரு தாராளமான, பரந்து விரிந்த மனப்பான்மையை நாமும் வளர்த்துக் கொள்ள ஆசை கொள்ள வேண்டும். நாம் செய்த தவறை தயங்காமல் ஒப்புக் கொள்ள பழகிட வேண்டும்.
கணவன் மனைவி டிஷ்யூம்...டிஷ்யூம்...
தொடரும் இன்ஷா அல்லாஹ்..
நன்றி ஏகத்துவம் இதழ்
அப்துல் கரீம், மேலப்பாளையம்
No comments:
Post a Comment