அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, April 02, 2011

தவறுகளை ஒப்புக் கொள்வோம் பாகம் 2


தவறை ஒப்புக் கொள்ளத் தயங்காத தோழர்கள்

நம்மில் யாரும் பிறரை பாதிக்கும் வண்ணம் சிறியதொரு தவறை செய்தா லும் அதையும் ஒப்புக் கொள்ள தயாராக இருப்பதில்லை. எங்கே ஒப்புக் கொண்டு விட்டால்மக்கள் நம்மை கேவலமாக பார்ப்பார்களோ என்று இவ்வு லகிற்கு அஞ்சுகின்றோம். நாம் செய்த குற்றத்தை மறைக்கபூசி மொழுக பல பொய்களை கட்டவிழ்த்து விடுவோம். ஆனால் நபிகளாரின் பயிற்சி பட்டறை யில் பாடம் பயின்றவர்கள் எத்தனை பாரதூரமான தவறை செய்திருந்தாலும் அதனை கொஞ்சமும் தயங்காமல் ஒப்புக் கொண்டார்கள் என்று சரித்திரம் சான்றளிக்கின்றது.

மாஇஸ் பின் மாக் அவர்கள் நபி (ஸல்) அவர்கடம் வந்(து தாம் விபசாரம் புரிந்து விட்டதாக வாக்குமூலம் அத்)தபோது,அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண் ணாலோ கையாலோ) சைகை செய்திருக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!'' என்று சொன்னார்கள். அவர், "(அவ்வாறெல்லாம்) இல்லை;அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்சாடைமாடையாகக் கேட்காமல் "அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?'' என்று (வெப்படையாகவே) கேட்டார்கள். அவர்ஆம்என்று கூறி னார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர)புகாரி (6824)


மாஇஸ் பின் மாக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது அவர்களை நான் பார்த்தேன். அவர் உயரம் குறைந்த மனிதராகவும் கட்டுடல் கொண்டவராகவும் இருந்தார். அவரது உடல் மேல் துண்டு இருக்கவில்லை. அவர்தாம் விபசாரம் செய்து விட்டதாகத் தமக்கெதிராகத் தாமே நான்கு முறை சாட்சியம் (ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள்நீர் இப்படிச் செய்திருக்கலாம் (முத்த மிட்டிருக்கலாம்அணைத்திருக்கலாம்)என்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள், "இல்லைஅல்லாஹ்வின் மீதாணையாக! இந்த அற்பன் விபசாரம் செய்துவிட்டான்'' என்று கூறினார். ஆகவேஅவருக்குக் கல் லெறி தண்டனை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார் கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா (ரலி)நூல்: முஸ்லிம் (3494)
(ஹதீஸின் தொடர்ச்சி) பிறகு அஸ்த்குலத்தின் ஒரு கிளையான ஃகாமித்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவாயாக'' என்று கூறினார்கள்.

அதற்கு அப்பெண், "மாஇஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்றேநான் கருதுகிறேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "என்ன அது?'' என்று கேட்டார்கள். அப்பெண், "நான் விபசாரத்தால் கர்ப்பமுற்றவள்'' என்றார்.

நபி (ஸல்) அவர்கள், "நீயா (அது)?'' என்று கேட்டார்கள். அப்பெண் ஆம்என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமது வயிற்றிலுள்ள மகவைப் பெற்றெடுக்கும்வரை (பொறுமையாக இருபிறகு வா!)'' என்றார்கள். பிரசவிக்கும்வரை அவளைப் பராமரிக்கும் பொறுப்பை அன்சாரிகளில் ஒருவர் ஏற்றுக்கொண்டார். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஃகாமிதிய்யா குலத்தாளுக்குக் குழந்தை பிறந்துவிட்டதுஎன்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "நாம் இப்போது அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்போவதில்லை. பாலூட்டும் அன்னையின்றி நிற்கும் சிறு வயதுக் குழந்தையாக அவளது பிள்ளையை விட்டுவிடவும் நாம் விரும்பவில்லை'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்துஅவனுக்குப் பாலூட்டும் பொறுப்பு என்னைச் சேர்ந்ததுஅல்லாஹ்வின் தூதரே!''என்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட் டார்கள். அறிவிப்பவர் : புரைதா பின் அல்ஹசீப் (ரலி)நூல்: முஸ்லிம் (3499)

இந்த ஹதீஸ்கள் நம்முடைய இறையச்சத்தை உரசிப்பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளதை காணலாம். நம்மில் பலரும் எந்த காரியத்தை செய்ய பெரி தும் தயங்குவோமோ அதை இவர்கள் செய்கின்றனர். ஒரு பெண்ணை ஓரக் கண்ணால் பார்த்ததைக்கூட நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம். அதற்கும் ஏதா வது சாக்குபோக்குகளை கூறி வகையாக சமாளிப்போம். நமது நிலை இவ்வாறிருக்கும்போது அருமை ஸஹாபாக்கள் தாம் விபச் சாரம் செய்து விட்டதாக அனைவர் முன்னிலையிலும் ஒப்புக் கொள்கின்றனர். இவ்வுலகில் கேவலப்படுவோம் என்பதை கொஞ்சமும் நினைவில் நிறுத்த வில்லை. மறுமையில் இறைவன் முன்னிலையில் கேவலப்பட்டு விடக்கூடாது என்பதிலேயே குறியாய்,கொள்கையாய் இருந்துள்ளார்கள். இக்கால கட்டத் தில் இஸ்லாமிய ஆட்சி இல்லை என்பதால் யாரிடத்திலும் நாம் செய்தஇது போன்ற குற்றங்களை ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது உண்மையே. ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வருமேயானால் அதற்கு நாம் தயாராஎன்று ஒவ்வொருவரும் நம் மனதை தொட்டு பதிலளி யுங்கள். மீண்டும் ஆழ்ந்த யோசனை நம்மிடையே ஒட்டி உறவாடுகின்றது.

இதன் மூலம் நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு பாவங்களையும் ஊர் ஊராய் மேடை அமைத்துமைக்கில் விளம்பரபடுத்த வேண்டும் என்று கூற முனைய வில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. நபிகளாரின் அருமையான தோழர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டால் தங்களது உயிரே காலி என்பதை அறிந்தும்அதையே ஒப்புக் கொள்ள முன்வந்தார்கள் எனும்போதுநமக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் செய்கின்ற தவறுகளை ஒப்புக் கொள்ள சற்றும் தயங்காமல் முன் வர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். இந்த மனப்பான்மையை மட்டும் நாம் பெற்றுவிட்டால்நம்மையும் அறியா மல் பல்வேறு நன்மைகளில் நாட்டம் அதிகரிப்பதோடுதீமைகளின் மீது ஒரு வித வெறுப்புணர்வும் உண்டாகும். இறைவனின் நெருக்கத்தையும் எளிதாக பெற்றுவிடலாம். ஏனெனில் ஏற்கனவே குறிப்பிட்டதை போல தவறுகள் செய்து அதை ஒப்புக் கொள்ளும் அடியானை இறைவன் விரும்பவே செய்கின்றான். 



தொடரும் இன்ஷா அல்லாஹ்.. 

நன்றி ஏகத்துவம் இதழ் 
அப்துல் கரீம்மேலப்பாளையம்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y