அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, December 25, 2010

ஜித்தாவில் நடந்த இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜெத்தா மண்டலத்தில் உள்ள ஷரபியா பகுதில் 24-12-2010 வெள்ளி அன்று மாலை  இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. இதில் 260 கலந்து கொண்டனர். இதில் சுமார் 30 பெண்களும், 60 குழந்தைகளும் அடங்குவர். சகோதரர் சௌகத் ஹுசைன் வரவேற்ப்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை துவங்க, நிகழ்ச்சிகளை சகோதரர் பிர்னாஸ் மௌலவி தொகுத்து வழங்கினார்கள்.மாலை 5 மணிக்கு சகோதரர் பி. ஜெ அவர்கள் ஜனவரி போராட்டத்தின் அவசியத்தை தெளிவாக விளக்கிய பின் 5 , 30 மணிக்கு கேள்வி பதில்கள் நிகழ்ச்சியை தொடங்கினார்கள். சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு ஆழமாகவும்விளக்கமாகவும் பதில் அளித்து சகோதரர் பி. ஜெ தெளிவை தந்தார்கள்.  சுமார் இரவு 8 மணி வரை கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் கண்டு பயனுறும் வகையில் ஆன்லைன் பி. ஜெ இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அதன் பின்பு சகோதரர் பிர்னாஸ் மௌலவி குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கேள்வி பதில் போட்டியை நடத்தினார்கள். இதில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பின்பு இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் சிறந்த கேள்வி கேட்டவர்கள், மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிறப்பாக பதில் அளித்தவர்களுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டது. இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. சுமார் 9 .30 மணிக்கு மண்டல தலைவர் சகோதரர் நௌஷாத் அலி நன்றி உரைக்கு பின்  துவாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

கலந்து கொண்டவர்கள் நிகழ்ச்சி நடந்த ஹால் சிறிதாக இருந்தது சிரமமாக இருந்தாலும், இது போன்ற நிகழ்ச்சியை மேலும் அதிகமாக நடத்துமாறு கருத்து படிவத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


 
 
  

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y