போலி ஒற்றுமை பேசியோரின் முகத்திரை கிழிந்தது !!
திருவிடைச்சேரி கிராமத்தில் சுன்னத் ஜமாத்தைச சோ்ந்த ஹஜ் முஹம்மத் என்பவர் சுன்னத் ஜமாத்தைச் சேர்ந்தவர்களைச் சுட்டுக் கொன்ற செய்தி தமிழக முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மையாக இருந்தபோதும் 19 இயக்கங்கள் ஒன்று கூடி இந்தப் பழியை தவ்ஹீத் ஜமாஅத்மீது சுமத்தி அறிக்கைகள் வி்ட்டனர்.
நாடெங்கும் ஆளுயர சுவரொட்டிகள் ஒட்டிவர்கள் தாஙக்ள கூறுவது பொய் என்று தெரிந்து கொண்டே இந்த சந்தர்ப்பவாதிகள் அணி திரண்டார்கள்.
ஜீலை நாலாம் தேதியன்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பை ஏற்று சென்னனையைக் குலுக்கியதும் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்ததும் தான் இவர்கள் வெறி கொண்டு அலைவதற்குக் காரணம் என்பதை முஸ்லிம் சமுதாயம் உணர்ந்து கொண்டது.
தவ்ஹீத் ஜமாஅத்க்கு எதிராக கொலைப் பழியைச் சுமத்தினால் முஸ்லிம் சமுதாயம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக வன்முறையில் இறங்கும் அதோடு தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழித்து விடலாம் என்று இவரகள் கனவு கண்டனர் ஆனால் கடுகின் முனையளவு கூட இவர்களால் மக்களை திசை திருப்ப முடியவில்லை.
தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கைகளை எதிர்க்க கூடிய மக்ளும் தவ்ஹீத் ஜமாத்தை ஏன்நம்புகிறார்கள் என்ற காரணத்தை இவர்கள் உணர்ந்து கொண்டால் இது போன்ற கீழ்தரமான நடவடிக்கைகளில் இறங்க மாட்டார்கள்.
- தவ்ஹிதுத் ஜமாத்தில் தேர்தல் அரசியலுக்கு இடமில்லை.
- எந்தப் பதிவிகளையும் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்காது.
- கட்டப் பஞ்சாயத்து செய்யாது.
- மார்க்க நெறியை மீறி தனது செயல் திட்டங்களை அமைத்து கொள்ளாது.
- ஒழுக்கம்கெட்டவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி அவர்களை துக்கி எறியத் தயங்காது.
- கூழைக் கும்பிடு போடாது.
- எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சந்தர்ப்பவாதம் கிடையாது.
- தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறது.
- எந்த அரசியல் கட்சியிடனும் கூட்டனி கிடையாது.
- அரசியல்வாதிகளின் உறவை தேர்தலோடு முடித்துக் கொள்வது.
- இரண்டு தடவைக்கு மேல் தொடர்ந்து இருக்க கூடாது என்ற சட்ட விதி.
- மார்க்த்தின் சுன்னத்துப் பணிகளையும் ஆர்வத்துடன் செய்வது.
- முன் வைத்த காலைப்பின் வைக்காத உறுதிப்பாடு.
- தியாகத்துக்கு தயக்கம் காட்டாத அர்பணிப்பு.
- அறிவுப்புர்வமான வாதங்கள்.
- அனைத்துப் பிரச்சனையிலும் துர நோக்குப்பார்வை.
என எண்ணற்ற நல்ல தன்மைகள் காரணமாகவே மாற்றுக் கருத்துடையவர்களும் தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப் பணிகளை ஆதரிக்கின்றனர் பெண்கள் இந்த ஜமாத்தை மட்டுமே நம்புவதற்க்கும் இந்த தனித்தன்மையே காரணம்.
இந்த தன்மையை தவ்ஹீத் ஜமாஅத் கட்டிக் காக்கும் வரை 19 ஆயிரம் இயக்கங்கள் ஒன்று சேர்ந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அசைக்க முடியாது.
மேற்கண்ட தன்மைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தை மிஞ்சும் வகையில் தங்கள் தரத்தை உயர்த்திக் கொண்டால் மட்டுமே இவர்கள் மக்களின் நம்பிக்கையை பெறமுடியும்
இதைச் செய்வதை விட்டு விட்டு இவர்கள் ஒன்றுபடுவார்களேயானால் அதுபோலி ஒற்றுமை என்பது சீக்கிரமே வெளுத்து விடும் மேலும் மக்களால் வெறுக்கப்படுவார்கள் என்பதை இவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை
ஒற்றுமை என்ற வேஷம் போட்டு நாடகமாடிய இநத சந்தர்ப்பவாத 19 க்கள் 17ம் தேதி ஹஜ்ஜீப் பொருநாளை மக்களுடன் சேர்ந்து கொண்டாடுவதாக கூறிக் கொண்டார்கள் ஆனால் மக்களுடன் சேர்ந்து கொண்டோம் என்று கூறக் கூடியவர்களில் பலர் தனித்தியாக தங்கள் அடையாளத்தைக காப்பாற்றும் வகையில் பெருநாள் கொண்டாடியது ஏன்?
தங்கள் பகுதியில் ஜமாஅத்தார்கள் மூலம் பொருநாள் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கம்போது அதில் போய் சேராமல் தங்கள் அடையாளத்தைக் காட்டுவதற்க்காக ஒரு ஏரியாவில் பலரும் பல பெருநாள் தொழுகை நடத்தியது ஏன்? போலி ஒற்றுமை என்பது பெருநாள் தினத்தில் சந்தி சிரித்துப் போனது.
தவ்ஹீத் ஜமாஅத் தனியாகப் பெருநாள் கொண்டாடுகிறது தனியாக தொழுகை நடத்ததுகிறது என்றால் அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாகும் அதறகான காரணங்களை தெளிவுபடுத்திவிட்டு வணக்க வழிபாடுகளை நபிவழியில் தனித்து நடத்துகிறது ஒற்றுமை வேஷமும் கோஷமும் போடவில்லை.
ஆனால் ஒற்றுமை வேஷம் போட்ட ஒவ்வொரு இயக்கமும் இயக்கத்தின் பெயரால் பொருநாள் தொழுகை நடத்தியது ஏன்? இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிக்க மட்டும் தான் ஒன்று சேர்வார்களே தவிர பொருநாளில் கூட ஒன்று சேரமாட்டார்கள் இவர்கள் போடுவது ஒற்றுமை வேஷம் தவிர வேறு இல்லை என்று மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டார்கள்.
டிசம்பர் 6 அன்று எந்தப் போராட்டமும் இனி இல்லை என்று தவ்ஹீத் ஜமாத் அறிவித்தது விட்டது மற்றவர்கள் டிசம்பர் 6 அன்று போராட்டம் தேவை என்று முடிவு செய்து போராட்ட அறிவிப்பு செய்தனர்.
இந்த போராட்டத்தை 19 களும் சேர்ந்து ஒன்றாக நடத்துவதாக அறிவிப்புச் செய்ய வேண்டியதுதானே தவ்ஹீத் ஜமாஅத்தான் ஒற்றுமைக்கு தடையாக உள்ளது என்றால் ஒற்றுமையின் காவலர்களான இவர்கள் டிசம்பர் 6 அன்று நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே போராட்டம் நடத்துகிறோம் என அறிவித்து நடத்த முடியவில்லை. அறிவித்தால் 19கள் 38 ஆக ஆகிவிடுவார்கள் என்பது தான் யதார்த்தம்.
தங்கள் இயக்கத்தையும் அதன் மூலம் தங்களையும் தனியாக அடையாளம் காட்டவும், பலம் காட்டவும் இவர்கள் தனியாக போராட்டம் நடத்திக் கொண்டு நம்மை எதிர்பதில் மட்டுமே ஒற்றுமை வேஷம் போட்டால் மக்கள் இவர்களை எப்படி நம்புவார்கள்?
அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த 19 களும் சேராமல் அவர்களின் நிலையை ஆதரிப்பவர்களும் ஓரணியில் நின்று தேர்தலைச் சந்தித்துக் காட்டுவார்களா? ஒருக்காலும் இவர்கள் ஒன்றுபட்டு தேர்தல் களத்தை சந்திக்க மாட்டார்கள்.
தனியாக பேரம் பேசுவதற்கு புறப்பட்டு விட்டார்கள் ஒருவர் காலை மற்றவர் வாரி விடுவார்கள் கடந்த காலத்தில் வாரியும் உள்ளனர்.
திருவிடைச்சேரியில் ஆடிய ஒற்றுமை நாடகம் ஹஜ்ஜீப் பெருநாள் பெருநாளிலும் டிசம்பர் 6 போராட்டத்திலும் முடிவுக்கு வந்து விட்டது.
வரும் தேர்தலில் ஒற்றுமை முகமூடி நார்நாராக கிழிந்து தொங்கப் போகிறது . இது போன்ற நாடகத்தை இனியும் அரங்கேற்றாமல் தவ்ஹீது ஜமாத் எப்படி நாணயம், நேர்மை, துணிவு, தெளிவு, தூய்மை, ஒழுக்கம் போன்ற விழுமிய பண்புகளில் மக்கள் மனதிலர் நீங்கா இடம் பெற்றுளளதோ அது போல் தாங்களும் தங்களின் நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு தங்களுக்கு எந்த சுயநலனும் கிடையாது என்று மக்கள் நம்பும் வகையில் தங்கள் நடவடிக்கைகளைத் திருத்திக் கொண்டால் அது தான் அவர்களுக்கு பயனளிக்கும் அதை விடுத்து தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பது மட்டுமே பொதுக் கொள்கை என்று செயல்பட்டால் இன்ஷா அல்லாஹ் சேதாரம் இன்னும் அதிகமாகும் என்பதை சொல்லிக்கொள்கின்றோம்
அவர்களே நேர்வழியை விற்று வழிகேட்டை வாங்கியவர்கள் எனவே அவர்களின் வியாபாரம் பயன் தாராது. அவர்கள் நேர்வழி பெற்றோரும் அல்லர் (அல்குர்ஆன் 2-16)
நன்றி உணர்வு - டிசம்பர் 10
மீள்பதிப்பு நாஷித் அஹமத்
No comments:
Post a Comment