அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, January 12, 2014

தேர்தல் கூட்டணி முடிவில் மமக அவசரம் காட்டியது ஏன் ?

சென்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் கைகோர்த்து களமிறங்கி இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற மமக தொடர்ந்து அந்த அணியில் சென்ற உள்ளாட்சித் தேர்தல்வரை ஒன்றாகவே இணைந்து செயல்பட்டது இன்னும் சொல்லபோனால் அதிமுகவின் சிறுபான்மைப்பிரிவாகவே மாறிப்போனது என்றே சொல்லலாம்.

டிசம்பர் 25 அன்று தமிழகத்தில் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தானேபுயல் கடும் சேதத்தை ஏற்ப்படுத்தியது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அணைத்து அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தங்களாலான உதவியை செய்தனர்.

இதில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து பதிக்கப் பட்ட அந்த மக்களை ஓரளவு மீட்டனர் தொடர்ந்து வந்த ஜனவரி 18ம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட்டிர்க்கான விவாதத்தின் போது பேசிய மமக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கடலூர் மாவட்டம் சுனாமிக்குப் பிறகு மாவட்டம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துள்ளது ஆனால் மாநில அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையின் விளைவு அந்த மாவட்ட மக்கள் மணம் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர் எந்த அளவிற்க்கென்றால் அரசின் இந்த நிவாரண உதவியைப் பார்த்து அண்டை மாவட்ட மக்கள் இதுபோல ஒரு புயல் நமது மாவட்டத்திற்கு வராதா அதனால் நமக்கும் இம்மாதிரியான நிவாரண உதவிகள் கிடைக்குமே என்று ஏங்குகிறார்கள் என்று பேசினார்.


மமகவினர் இதுமாதிரியான தொடர் செயலால் தமிழக முதல்வர் உச்சி குளிர்ந்து தங்களின் கோரிக்கையிகள் அனைதையும் பெற்றுவிடலாம் என்று எண்ணினார் ஆனால் தமிழக முதல்வரிடம் எதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை உள்ளாட்சித்தேர்தலில் மமகவினருக்கு முதல்வர் இடங்கள் ஒதுக்கவில்லை மேலும் இவர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த வக்ப் வாரிய தலைவர் பதவிக்கு இவர்களின் கட்சியில் சார்பில் ஒருவரை நியமிப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

ஜெயலலிதாவோ அவரது கட்சியை சேர்ந்த தமிழ்மகன் உசேன் என்பவரை வக்ப் வாரிய தலைவராக நியமித்து இவர்களின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டார் அதுதான் இவர்கள் ஜெயலலிதாவை எதிர்க்க மிக முக்கிய காரணம் அதேநேரம் இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது.

விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் இவர்கள் உட்பட 23 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து போராட்டங்களை நடத்தியபோது அதை தமுமுகவினர்தான் முன்னின்று நடத்தியதுபோல் இவர்கள் காட்டிக் கொள்ள முயன்றாலும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் அவர்கள் உளவுத்துறை கொடுத்த தகவலை வைத்து 23 இயக்கத்தில் சேராத இயக்கம் ஒன்று இருக்கிறது அந்த இயக்கத்திற்கு உறுப்பினர்கள் மட்டும் 7.5 லட்சம் பேர் உள்ளனர் என்று பேட்டி கொடுத்தார் இதுவும் இவர்களின் கோபத்தை அதிகரிக்க இன்னொரு காரணம்.

இந்த நிலையில்தான் சமுதாய மக்களின் வாழ்வாதார கோரிக்கையான சிறை செல்லும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்து அதற்க்கான வேலைகளை முடக்கி விட்டு ஆளும் அரசு அதிரும் அளவிற்கு மக்களை திரட்டி இடஒதுக்கீட்டை வென்று விடுவோம் என்ற சூழலில் அப்படி ஆளும் அதிமுக அரசும் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்கிவிட்டால் அதற்கான நன்றிக்கடனாக தமிழக முஸ்லிம்கள் அதிமுகவிற்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆதரவளிக்கும் ஒரு நிலை வந்தால் மமகவின் எம்பி கனவு தவிடு பொடியாகிப்போகும்.

இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்த நற்ப்பெயர் டிஎண்டிஜெயிக்கும் அதன் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் சென்றுவிடும் என்று எண்ணி முன்னர் பிப்ரவரி 8ம்தேதி நடத்தவிருந்த இவர்கள் கட்சியின் மாநில மாநாட்டை ரத்து செய்துவிட்டு இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் வீரியம் அடைந்துள்ள இந்த நேரத்தில் எங்கே இடஒதுக்கீட்டை ஜெயலலிதா அவர்கள் உயர்த்தி வழங்கி விட்டால் வேறு வழியில்லாம் அதிமுக அரசை மற்ற முஸ்லிம்களைப் போல தங்கள் கட்சியும் ஆதரிக்க நேரிடும் அதனால் இவர்கள் எம்பிகனவு கனவாகவே ஆகிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக அவசர அவசரமாக ஜனவரி 28க்கு முன்பாக இவர்களின் செயற்குழுவைக் கூட்டி வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி முஸ்லிம்களும் ததஜவினரும் அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் பட்ச்சத்தில் இவர்கள் வகிக்கும் கூட்டணிக்கு ஆதரவாக மக்களிடம் சென்று பொய்ப் பிரச்சாரங்களை ஒற்றுமைக் கோஷங்களை அள்ளிவிட்டு அவர்களை திசை திருப்ப முயல்வார்கள் கூடவே இவர்களுக்கு ஒத்து ஊதா இன்னும் சில இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகளையும் தங்களுக்கு ஆதரவாக திரட்டிக்கொண்டு பார்த்தீர்களா முஸ்லிம் இயக்கங்கள் கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரண்டுவிட்டோம் ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் பிரிவினைவாதிகள் மட்டும் முஸ்லிம் கட்சிகளுக்கு எதிரான அணியில் இருந்துகொண்டு முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடிக்க உங்களை அழைகின்றனர் என்று அவதூறு பிரச்சாரம் செய்வார்கள் அதையும் கேட்டுக்கொண்டு சிலர் ததஜவினரை பாருங்கள் இவர்கள் பிரிவினைவாதிகள் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்பார்கள்.

இவர்களின் இந்த வெட்டி கோஷத்தை சாதாரண முஸ்லிம் நம்பப்போவதில்லை அவர்கள் மிக தெளிவாக உள்ளனர் அவர்களுக்கு இவர்களைப் பற்றி மிக நன்றாக தெரியும் அவர்கள் ஏமாற மாட்டார்கள் நாம் சொல்லவேண்டியது மமகவின் அப்பாவித் தொண்டனுக்கும் அவர்களின் கிளை நிர்வாகிகள் மற்றும் அனுதாபிகளுக்குத்தான்.

மமக இருக்கும் அணிதான் சிறுபான்மை நலன் விரும்பும் அணி அதில்தான் முஸ்லிம்கள் அதிகம் இருப்பதுபோல ஒரு பொய்ப் பிரச்சாரத்தை செய்வார்கள் தமுமுக கிளை நிர்வாகிகளே உங்களில் தலைமை தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவித்தார்களே அந்த கூட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டீர்களா அல்லது உங்களிடம் கருத்து ஏதனும் முன்னரே கேட்கப்பட்டதா ஏன் செயற்குழு என்ற பெயரில் தங்களுக்கு ஆதரவான 100பேரை மட்டும் அழைத்து அதில் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த ஒன்றை உங்களின் தலைமை அறிவித்தால் இது என்ன நியாயம் என்று உங்களின் தலைமையிடம் நீங்கள் கேள்வி கேட்க்கமாட்டீர்களா ஏன் பொதுக்குழுவைக் கூட்டி ஓட்டெடுப்பு நடத்தவில்லை என்றும் உங்களின் தலைமையிடம் கேட்பிர்களா.

ஏதாவது ஒரு இடத்தில ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டால் அதைவைத்து அரசியல் செய்து தாங்கள்தான் முஸ்லிம்களின் காவலர்கள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கும் மமக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரே இதை நாம் தவறென்று சொல்லவில்லை அதேநேரத்தில் ஒட்டு மொத்த சமுதாயத்தின் வாழ்வாதரக்கோரிக்கையான இடஒதுக்கீட்டை ஆதரிக்க நீங்கள் முன்வராதது ஏன்.

மமக மற்றும் எஸ்டிபிஐ கொள்கை மற்றும் குறிக்கோள்தான் என்ன நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் உங்கள் தலைவர்கள் மட்டும் எம்பி எம்எல்ஏவாக ஆகவேண்டும் அப்பாவி மக்கள் எக்கேடு கெட்டுத் தொலைந்தாலும் பரவாயில்லை அப்படித்தானே அப்பாவி மமக முஸ்லீம்லீக் மற்றும் எஸ்டிபிஐ தொண்டர்களே சிந்திக்கமாட்டீர்களா

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y