அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, October 06, 2013

தமிழகத்தில் துல் ஹஜ் மாதம் ஆரம்பம்!

தமிழகத்தில் துல் ஹஜ் மாதம் ஆரம்பம்!

பிறைதேட வேண்டிய நாளான இன்று 06.10.13 ஞாயிற்றுக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் காரைக்கால், உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக பிறை தென்பட்டதையடுத்து இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 16.10.13 புதன் கிழமை தமிழகத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.


துல் ஹஜ் பிறை 9ஆம் நாள் அரஃபா நோன்பு நோற்பது நபி வழி என்ற அடிப்படையில் வரக்கூடிய 15.10.13 செவ்வாய்க்கிழமை அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்


குர்பானி குடுக்க நாடியுள்ளோர் பேணவேண்டியது
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலாமா (ரலி), ஆதார நூல்கள்: முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா (3149), பைஹகீ (19043).

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y