டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு ஏஜென்சி
அதிகாரிகள் கைது செய்தனர். இவர் குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களில்
முக்கியமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோகர் சிங், மத்தியப் பிரதேச மாநிலம்
இந்தூர் மாவட்டம், குர்தகேடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச்
சேர்ந்தவர்.
நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்கள் கைது!
காவல்துறை அராஜகம்!! –
டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!!
டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் அழியப்போவதாக மக்கள்
மத்தியில் பரப்பப்பட்ட புரளி குறித்து தெளிவுபடுத்துவதற்காக தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் – தென்சென்னை மாவட்ட ஜாம்பஜார் கிளை சார்பாக துண்டு
பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
கடந்த உணர்வு 17 : 17 இதழில் 18ஆம் பக்கத்தில் வெளியியான,
“டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? – கலவர பீதி கிளப்பி காசு
பார்க்கும் ஊடகங்கள்! அறியாமையில் மக்கள்!!” என்ற செய்தியை துண்டுபிரசுரமாக
அந்தக் கிளையினர் விநியோகம் செய்துள்ளனர்.
மாயன் நாட்காட்டியின்
அடிப்படையில் கடந்த 21-12-2012 அன்று
உலகம் அழியும் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது. ஊடகங்களிலும் இது குறித்து
தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த மூடநம்பிக்கையை அகற்றும் விதமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகமெங்கும் விழிப்புணர்வு பரப்புரைகளை
துண்டு பிரசுரங்கள் விநியோகம் – சுவரொட்டிகள்
மூலம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத், சென்னை ஜாம்பஜார்
கிளை நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் இந்து
மதத்தை இழிவாக குறிப்பிட்டுள்ளதாக கூறி, துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து
இந்து முன்னணி, விஷ்வ
ஹிந்து பரிஷத், விநாயகர்
சதுர்த்தி விழாக்குழு உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்கள், சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நிர்வாகிகளை கைது செய்யவேண்டும்
என பிரசுரம்
வெளியிட்டனர்.
 |
பெரிதாக்கி காண படத்தின் மீது க்ளிக் செய்யவும் |
வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா?
என்ற கேள்விக்குறியோடு
பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி
செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்த
பரபரப்பு செய்தி.
டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியும் என்று
சொல்கின்றார்களே! இவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதை உண்மையில் சாத்தியமா?
அவ்வாறு எதிர்காலத்தில்
நடக்கவிருக்கும் செய்திகளை யாராவது சொல்ல இயலுமா என்ற சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்ததுதான்
இத்தகைய செய்திகளை இவர்கள் வெளியிடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இன்ஷா அல்லாஹ்...
நாளை டிசம்பர் 6 வியாழன் அன்று சௌதி நேரம் பிற்பகல் 01.30 முதல் 02.30 மணி வரை சகோ. பி.ஜே அவர்கள் விஹெச்பி தலைவர்களுடன் நேரடி விவாதம் !
கேப்டன் நியுஸ் சேனலில்
பாபர் மஸ்ஜித் சம்பந்தமான நேரடி விவாதம் நடைபெறவிருக்கின்றது.
பாருங்கள், பார்க்கத் தூண்டுங்கள்....
அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை SDPI சேர்ந்தவர் வெறிச்செயல்!!
அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவர்களின் மகன் ஹாஜா [வயது 20], என்ற சகோதரனை கத்தியால் குத்தி படுகொலை செய்த SDPI சேர்ந்த சமுதாய துரோகி!!
23-11-2012 மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனியாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின்னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான்.
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த SDPI சேர்ந்த கொலை குற்றவாளியை குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரி மற்றும் இந்த அமைப்பை தடை செய்ய கோரியும் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் கடந்த 1-12-2012 அன்று நடைப்பெற்றது
இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர்.பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்…!