அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, November 29, 2012

துப்பாக்கி படமும் சறுக்கும் சமுதாய தலைவர்களும்?

சென்ற தீபாவளியன்று வெளியான துப்பாக்கி என்ற திரைப்படம் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது அதில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் அப்பட்டமாக முஸ்லிம்களுக்கு எதிராகவும் சமூக ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாகவும் முஸ்லிம் அனைவரையும் தீவிரவாதிகளாகவும் காட்ட வேண்டுமென்றே திட்டமிட்டே திரைப்படம் எடுத்துள்ளனர் . 

இந்த ஈனச்செயலை தமிழக முஸ்லிம் சமுதாய இயக்ககங்கள்  அனைத்தும் ஒட்டுமொத்தமாக கண்டித்தன இந்த படத்தை மக்கள் பார்ப்பதற்கு முன்பே அந்த திரைப்படத்தை தடுத்து நிறுத்திவிடவேண்டும் என அணைத்து இயக்கங்களும் எண்ணின இதனை அடுத்து பத்தொன்பது தமிழக முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழக காவல்துறை அதிகாரியிடமும் அதனைத் தொடர்ந்து தமிழக அரசிடமும்  இத்திரைப்படம் முஸ்லிம்களின் உண்மையான கொள்கைக்கு  எதிரானது இதை திரையிடுவதை தடுக்கவேண்டும் என்று மனுக்கொடுதனர்.



இந்நிலையில் இந்த திரைப்படத்தை எடுத்த அய்யோக்கியர்கள் நடிகன் விஜய் அவனுடைய தந்தை டைரக்டர் சந்திரசேகர் மற்றும் அந்த திரைப்படத்தை இயக்கிய பொறம்போக்கு முருகதாஸ் உள்ளிட்டோர்  பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்  அதில் இந்த மூவரும் சில வாக்குறுதியையும் அளித்தனர் தாங்கள் தவறிளைதுவிட்டோம் அதை நாங்களே சரி செய்கிறோம் அந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள விஷமத்தனமான காட்சிகளை உடனே நீக்கிவிடுகின்றோம் என்றும் நடந்த சம்பவத்திற்கு முஸ்லிம்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அறிவித்தனர்.

அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அய்யோகியன் விஜயின் அப்பன் சந்திரசேகர் ஒருபடி மேலே போய் தான் இதை சரிசெய்ய மீண்டும் ஒரு திரைப்படமெடுத்து தன்னுடைய மகனை அதில் முஸ்லிம்களின் நண்பனாக நடிக்க வைக்கிறேன் என்றும் அறிவித்தான் இந்த அய்யோகியன் இனியொரு படமெடுத்து கூத்தாடி மகனை முஸ்லிம்களின் நண்பனாக நடிக்க வைக்க வேண்டிய ஒரு அவசியம் இல்லை ஆனால் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படத்தில் விஷமத்தனமான கட்சிகளை நீக்கினாலே போதும் என்று தமிழக முஸ்லிம்களும் சமுதாய இயக்கங்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஆனால் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்து பல நாட்கள் ஆனபிறகும் படம் வசூல் வேட்டையை முடித்த பிறகும் சம்பந்தப்பட்ட காட்சிகளை இந்த அய்யோக்கிய கூட்டம் நீக்கவில்லை அது எப்படி நீக்குவார்கள் மூன்று பேரும்  திட்டமிட்டே இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர் ஏனென்றால் இந்த மூவரும் கிருத்துவர்கள் இவர்கள் மதத்தை சார்ந்த பாதிரியார் ஒருவன் இன்னொசென்ஸ் ஒப் முஸ்லிம் என்ற படத்தை கிருத்துவ மிஷனரிகளின் ஆதரவுடன் தயாரித்து வெளியிட்டு அதனால் முஸ்லிம்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டான் பல நாடுகளில் அந்த படம் ஒளிபரப்ப தடை செய்யப்பட்டது அதில் ஏற்ப்பட்ட தோல்வியை மனதில் கொண்டு மீண்டும் கிருத்துவ மிஷனரிகள் இதுபோன்ற இரெண்டாம் தர வேலையை கையில் எடுத்துள்ளது.

ஒரே மொழியில் எடுத்தால்தானே ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் எதிர்க்கும் அதை வேறே வழியில் எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்று ஆலோசித்து அவர்கள் கண்ட குறுக்கு வழிதான் இது  பிராந்திய  மொழிப்படங்களை அந்தந்த மொழிகளில் எடுத்தால் அதில் முஸ்லிம் மக்களின் கவனம் அதிகம் இருக்காது குறிப்பாக தமிழ்நாட்டை தவிர வேரூ எந்த மொழியில் இதுபோன்ற திரைப்படம் எடுத்தால்  மக்கள் அதிகம் எதிர்க்க மாட்டார்கள் அதனால் தானோ என்னமோ முதலில் தமிழில் எடுத்து அதன் எதிர்வினையை வைத்து மற்ற மாநில மொழிகளில்  எடுக்கலாம் என்று எண்ணியிருக்கலாம் காரணம் தமிழகத்திலேயே இதுபோன்ற திரைப்படத்திற்கு எதிர்ப்பு இல்லையென்றால் மற்ற மாநில மொழிகளில் எடுத்து வெளியிடுவது கடினமாக இருக்காது என்று இந்த மிஷனரிகள் கருதியிருக்கலாம்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே எதிர்ப்பும் வந்தது முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து ஆனால் அவர்கள் வகையாக பத்திரிக்கையாளர் சந்திப்பு என்று ஒரு நாடகத்தை நடத்தி சரியாக முஸ்லிம் சமுதாய தலைவர்களை  நன்றாக  ஏமாற்றிவிட்டனர் இதுவரை அவர்கள் கொடுத்த அந்த  வாக்குறுதியை  அந்த திரைப்படம் ஓடும் அணைத்து திரையரங்கிலும்  நிறைவேற்றப்படவில்லை ஏதோ சில மாநகரங்களில் மட்டும் சில காட்சிகளில் சத்தத்தை மட்டும் நீக்கியுள்ளனர் இது ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் ஏமாற்றும் செயல் ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் தமிழக முஸ்லிம் சமுதாய தலைவர்கள் பெரிதாக சதித்துவிட்டது போலவும் அதற்க்கு காரணம் தமிழக முதல்வர்தான் என்றும் நேற்று 28.11.2012 தமிழக முதல்வரை சந்தித்து நன்றி சொல்லிவிட்டு வந்துள்ளனர்.

பொதுவாக நன்றி எதற்காக செல்வார்கள் ஒருவருடன் ஒரு கோரிக்கையோ அல்லது உதிவியையோ நாடினால் அவர் அதை செய்து முடித்தால் நாம் நன்றி சொல்வோம் அல்லது கோரிக்கையை வைக்கும்போதே அட்வான்சாக நன்றி என்று சொல்லி வைப்பார்கள் ஆனால் நடக்காத ஒன்றை நடந்துவிட்டதாக கூறி ஒருவருக்கு நன்றி சொன்னதை நாம் எங்கேயும் பார்த்ததில்லை அப்படிதான் இதுவும் எந்த கட்சியையும் அந்த அய்யோகியர்கள் கொடுத்த வாக்குப்படி நீக்கவில்லை பிறகு எதற்கு முதல்வருக்கு நன்றி எந்த காட்சியும் நீக்கப்படவில்லை என்று நாம் சொல்லவில்லை அந்த பத்தொன்பது கூட்டமைப்பில் ஒருவரான தேசிய லீகைச் சேர்ந்த தடா அப்துல் ரஹீம் என்பவர் சில நாட்க்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து நடிகன் விஜய்யும் டைரக்டர் ஏஆர்முருகதாசும் தங்களை நன்றாக ஏமாற்றி விட்டனர் தங்களிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்ற வில்லை இன்னும் அந்த விஷமத்தனமான காட்சிகள் நீக்கப்படவில்லை என்று மனுகொடுத்தார் என்றால்  இதிலிருந்து நாம் என்ன விளங்கிக்கொள்ள முடிகிறது இன்னும் அந்தக் கட்சிகள் அப்படியேதான் உள்ளது  எதையுமே அவர்கள் நீக்கவில்லை என்று யாரும் புரிந்துகொள்ளலாம் பிறகு எதற்கு நன்றி அறிவிப்பு சந்திப்பு என்று நமக்கு விளங்கவில்லை.

சரி இந்த துப்பாக்கி திரைப்படத்தில்தான் இவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்றால் இன்னொரு கூத்தாடி கமல்ஹாசன் என்பவன் விஸ்வரூபம் என்ற ஒரு திரைப்படத்தை எடுத்து எதிர்வரும் பொங்கல் தினத்தன்று திரையிட ஆயத்தமாகி வருகிறான் துப்பாக்கி படம் பற்றிய விஷயம் தமிழ்நாடு தவ்ஹீத்தின் கவனத்திற்கு தாமதமாக வந்ததால் அதில் அவர்களால் தலையிட முடியவில்லை ஆனால் இனி வரும் காலங்களில் எவனாவது இதுபோன்ற படம் எடுத்தால் அவனது பொருளாதரத்தை நட்டமாக்குவது அதாவது சம்பத்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையெல்லாம் கிடையாது நேரடியாக திரையிடும் அரங்குகளை முற்றுகையிடுவது தான் தீர்வு என்று டிஎன்டிஜே தலைவர் ஏற்கனவே அறிவித்துள்ளர் அதிலும் குறிப்பாக வரவிருக்கும் கூத்தாடி கமலின் விஸ்வரூபம் திரைபடத்தை ஓட விடமாட்டோம் என்று பத்திரிக்கையாளரை கூட்டி  சகோ.பிஜே அறிவித்துள்ள  நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமுமுகவின பொதுச்செயலாளர் அப்துல் சமது என்பவர் பதிரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தை தங்களுக்கு முதலில் போட்டுக்காட்ட வேண்டும் பிறகுதான்  வெளியிட வேண்டும் என்கிறார் அப்பட்டமாக தெரிகிறது அவனின் டிரைலரில் முஸ்லிம்களைத்தான் குறிவைத்து எடுத்ததாக கண்பிக்கிறார்கள் இருந்தும் மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை என்று  காத்துக் கொண்டிருக் கிரார்களோ  என்று என்ன தோன்றுகிறது  துப்பாக்கி திரைப்டத்தைப்போல இந்த விசயத்தையும் நீர்த்துப்போக வைக்கும் செயலாகத்தான் என்ன முடிகிறது.

இறுதியாக நாம் இந்த பத்தொன்பது கூட்டத்தினருக்கு வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான் வெளிவரவிருக்கும் இந்த விஸ்வரூபம் திரைப்பட விசயத்திலாவது பேச்சு வார்த்தை என்று போகாமல் மக்களிடம் விட்டுவிட்டு விலகியிருங்கள் இந்த விசயத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் மக்களும் கைய்யாளும் விதமாக கையாண்டு கொள்வார்கள் என்பதை வேண்டுகோளாக வைக்கின்றோம் இனிஒரு கூத்தாடியும் இதுபோன்று படங்கள் எடுக்க தைரியம் வரக்கூடாது என்பதற்க்காக!

நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்: உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்( அல்குர்ஆன் 2:42)



முஹம்மது உபைஸ்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y