அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, October 24, 2012

அரஃபா நாள் நோன்பு


துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள்அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள்என்று குறிப்பிடுவர்.

அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளதுஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்கநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின்தூதர் (ஸல்கூறினார்கள்அறிவிப்பவர்அபூகதாதா (ரலிநூல்முஸ்லிம் 1977.

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தடை செய்தார்கள்.அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலிநூல்இப்னுமாஜா 172

அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப் படுத்தினார்களோ அவ்வாறு தான்நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள்அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்புநோற்றார்கள்மக்காவில் பிறை காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.
எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள்நாம் பிறை பார்த்த கணக்குப் படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம்அதைப்பின்பற்றத் தேவையில்லைஅதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லைநாம் பிறை பார்த்த கணக்குப் படி ஒன்பதாம் நாளில்நோன்பு நோற்க வேண்டும்.

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y