அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Tuesday, October 09, 2012

என்ன நியாயம் தமிழக முதல்வரே?

ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் முஸ்லிம்களின் உடன் பிறவா சகோதரியாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து பிறகு தேர்தலில் வெற்றிபெற்றதும் முஸ்லிம்களை முற்றிலுமாக மறந்து விடுவதும் உங்களின் தொடர் வாடிக்கையாகிவிட்டது.


இந்த முறையும் தேர்தலை சந்தித்தபோது நீங்கள் கொடுத்த வாக்குறுதியில் மிகவும் முக்கிய வாக்குறுதியான முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தற்போதிறுக்கும் முஸ்லிம்களுக்கான கல்வி வேலை வாய்ப்பில்  3.5 சதவீத இடஒதுக்கீட்டை ஐந்து சதவீதமாக உயர்த்தி வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்தீர்கள் ஆனால் இன்றுவரை அதற்காக எந்த முயற்சியும் நீங்கள் செய்யவில்லை அமைச்சரவையிலும் இதுபற்றி விவாதிக்க வில்லை சட்டமன்றத்தில் கவர்னரை பேச சொல்லவில்லை யாராவது ஒரு அமைச்சரை விட்டாவது பேச வைத்ததுண்டா ஏன் குறைந்தது ஏதாவது விழாவில் அல்லது பொதுமேடையில் வைத்தாவது நான் கொடுத்த இடஒதுக்கீட்டு வாக்குறிதியை நேரம் வரும்போது நிறைவேற்றுவேன் என்றாவது கூறியதுண்டா நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று உங்களின் கடந்தகால செயல்பாடுகள் முஸ்லிம்களுக்கு நன்றாக தெரியும்  சென்னை சீரணி அரங்கில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு மத்தியில் நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை வழங்குவேன் என்றும் மேலும் இனிமேல் பாஜகவுடன் என்றுமே கூட்டணி கிடையாது என்றும் சொன்னீர்கள் ஆனால் அதை நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அப்பட்டமாக மீறினீர்கள் பாஜகவுடன் நட்பு பாராட்டினீர்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்தமுறை நீங்கள் தேர்தலை சந்தித்தபோது திருச்சியில் இன்னும் பல ஊர்களில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 3.5 இலிருந்து ஐந்தாக உயர்த்தி தருவதாக வாக்குறுதியளிதீர்கள் ஆனால் நூறாண்டு சாதனையை ஓராண்டில் சாதித்த பின்பும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு விசயத்தில் மட்டும் பாராமுகமாக இருப்பது முஸ்லிம்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது ஒருவேளை உங்களின் வேலைப்பளுவின் காரணமாக நீங்கள் மறந்து விட்டிருப்பீர்கள் என்ற எண்ணத்தில் உங்களுக்கு நினைவுட்டுவதர்க்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு வழியில் இவிசயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் இப்படி மௌனம் காப்பதின் அர்த்தம்தான் என்ன என்பது முஸ்லிம்களுக்கு விளங்காமல் இல்லை நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இணையும் நோக்கம்தானே அன்றி வேறில்லை.

சரி இடஒதுக்கீட்டு விஷயத்தில்தான் நீங்கள் பாராமுகமாக உள்ளீர்கள் என்று முஸ்லிம்கள் எண்ணியிருந்த நிலையில் முஸ்லிம்களின் உயிரான மனிதருள் மாணிக்கம் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களை மோசமாக சித்தரித்து அமெரிக்காவை சேர்ந்த அய்யோக்கிய யூதன் படம்  ஒன்று எடுத்து அதை யுடுப் என்னும் இனையதளத்தில் வெளியிட்டு முஸ்லிம்களின் உள்ளதை காயப்படுத்தினான் அவனை கண்டித்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பொங்கி எழுந்தபோது நீங்கள் மட்டும் சிறிதும் சலனம் காட்டாமல் மௌனம்காத்தீர்கள் உங்களை தவிர அணைத்து தமிழக அரசியல் கட்சிகளும் கண்டித்தார்கள் அதிகம் கண்டிக்க  கடமைப்பட்டவரான நீங்கள் பெயரளவில்கூட ஒரு கண்டன அறிக்கையை வெளியிடவில்லை ஏனென்றால் சென்ற சட்டமன்ற தேர்தலில் மற்ற கட்சிகளை விட உங்களுக்கு முஸ்லிம்கள் வாக்களித்தனர் அதன்மூலம் நீங்கள் அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தீர்கள் அறிக்கைவிடாதது ஒருபுறமென்றால் வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்சுவதுபோல முஸ்லிம்கள சென்னையில் கண்டன போராட்டம் நடத்த அனுமதி அளித்தார் என்ற ஒரே காரணத்திற்காக சென்னை மாநகர காவல்துறை கண்காணிப்பாளரை அவசரகதியில் மாற்றி அடக்குமுறைக்கு பெயர்போன ஜார்ஜ் என்னும் கிருத்தவ மதத்தை சேர்ந்தவரை சென்னை மாநகர காவல்துறை கண்காணிப்பாளராக நியமத்திதன் நோக்கம்தான் என்ன அவரை வைத்து சட்டம் ஒழுங்கை யார் சீர்கெடுக்க முனைந்தலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என அறிக்கை வெளியிட வைத்தேன் முஸ்லிம்களை மறைமுகமாக அச்சுறுத்தி அவர்களின் போராட்டங்களை முனை மழுங்கச்செய்யும் முயற்சிதானே அன்றி வேறில்லை என்று முஸ்லிம்கள் விளங்காமல் இல்லை.

சென்னை மாநகர காவல்துறை கண்காணிப்பாளரை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அவரை அமெரிக்க தூதரக அதிகாரிகளையும் சந்திக்க வைத்தான் மூலம் ஈட்டியை மட்டும் பாய்ச்சவில்லை கூடவே விஷத்தையும் சேர்த்தே பாய்சியதாக தமிழக முஸ்லிம்கள் எண்ணுகிறார்கள்  இது எந்த வகையில் நியாயம் தமிழக முதல்வர் அவர்களே ஓட்டுவாங்க மட்டும் முஸ்லிம்களுடன்  நட்பு பாராட்டுவது  பிறகு முஸ்லிம்களின் எதிரிகளுடன் இணைந்து கொண்டு முஸ்லிம்களை கறிவேப்பிலையாக பயன்படுத்திக்கொள்ளும் உங்களின் இந்த செயல் இன்று நேற்று உள்ளதல்ல எப்பவுமே நீங்கள் இதைதான் செய்துகொண்டு இருக்கின்றீர்கள் என்பதை முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள் ஆனால் நீங்களோ முஸ்லிம்களை ஏமாளிகளாக எண்ணிக்கொண்டு அவர்களின் மறதியை பயன்படுத்தி ஒட்டு பெற்று மீண்டும் அரியணையில் ஏறிவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறிர்கள் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வென்றுவிடலாம் என சிந்திக்கின்றீர்கள்

எதிர்க்கட்சியினர் மீது வழக்கு தொடுப்பதிலும் அவர்களை கைது செய்வதிலும் நீங்கள் கட்டும் அக்கரையில் சிறிதளவேனும் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் காட்டியதுண்டா சரி இடஒதுக்கீட்டை விடுங்கள் அதை உங்களால் வழங்க முடியாது ஏனென்றால் உங்களின் ஆஸ்தான குருமார்கள் உங்களின் கைகளை கட்டிப்போட்டுள்ளதாக நாங்கள் நினைத்துக்கொள்கிறோம் ஆனால் இன்று நாட்டில் என்ன நிலை இதுவரை தமிழகம் கண்டிராத மின்வெட்டு குழந்தைகளும் முதியவர்களும் நோயாளிகளும் தவிக்கின்றார்கள் மாநிலம் முழுவதும் மக்கள் இரவு நேரங்களில் தெருக்களில் இறங்கி போராடுகிறார்கள ஆனால் நீங்களோ நீரோ மன்னனைப்போல தமிழகத்தில் எதுவுமே நடக்காததுபோல இருக்கிறீர்கள் எதிர்க்கட்சியினரை கைது செய்வதில் காட்டும் அக்கறையை மின்வெட்டை சரிசெய்வதில் காட்டலாமே அதிவிடுத்து சென்ற ஆட்சியையே குறை சொல்லித்திறிவதில் எந்த நன்மையையும் நிகழப்போவதில்லை. 

இறுதியாக பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கு சில மாதங்களுக்கு  முன்பு முற்றிலும் மின்வெட்டை இல்லாமலாக்கி அதன் மூலம் ஓட்டைப்பெற்று வென்றுவிடலாம் என நீங்கள் எண்ணினால் நிச்சயம் ஏமாந்துதான்போவீர்கள் காரணம் இந்த விளையாட்டையெல்லாம் சென்ற சட்டமன்ற தேர்தலிலேயே திமுக செய்து தோல்வியையும் தழுவியுள்ளது எனபதை நினைவூட்டிக்கொள்கிறோம் ஆனால் முஸ்லிம்கள் நாங்கள் அனைத்தையும் மறந்துவிடுவோம் எங்களின் ஒற்றைக் கோரிக்கையான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி உடனே வழங்கினால் முஸ்லிம்கள் யார் தடுத்தாலும் உங்களுக்கே முப்பத்தி ஒன்பது நாடாளுமன்ற தொகுதியிலும் வாக்களிப்பார்கள் வெற்றியடயை செய்வார்கள் என்பதயும் இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவுட்டிக்கொள்கின்றோம்.

முஹம்மது உபைஸ் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y