அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, September 05, 2012

நகைகள் வெளியே தெரியாமல் மறைக்க இந்திய பெண்களுக்கு இங்கிலாந்து போலீசார் அறிவுரை (இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்பு )


லண்டன்: இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்கள் வெளியே செல்லும்போது ஸ்கார்ப் அல்லது துப்பட்டாவால் தங்க நகைகளை மறைத்துக் கொண்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தில் லெஸ்டரில் உள்ள கிழக்கு மிட்லேண்ட்ஸ் நகரில் இந்திய வம்சாவழியினர் அதிகம் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள பெல்கிரேவ் ரோட்டில் ஏராளமான இந்திய வம்சாவழியினர் நகைக்கடைகள் வைத்துள்ளனர். அந்த கடைகளுக்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து நகைகள் செல்கின்றன.

தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டுள்ளதையடுத்து இந்திய வம்சாவழியினரின் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் தெருக்களில் செல்லும் இந்திய பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்களும் அதிக அளவில் நடக்கின்றன. இதையடுத்து தங்க நகைகள் அணிந்து வெளியே செல்லும் ஆசியர்கள் குறிப்பாக இந்திய பெண்கள் ஸ்கார்ப் அல்லது துணியால் தங்கள் நகைகளை மறைத்துக் கொண்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். தெருவில் நடந்து செல்பவர்கள் அதிலும் குறிப்பாக பெண்களிடம் இருந்து தங்க செயின், பிரேஸ்லெட் மற்றும் சில நகைகள் பறித்துச் செல்லப்படுகிறது.
கடந்த மே மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை கோல்டன் மைல், பெல்கிரேவ் ரோடு மற்றும் மெல்டன் ரோடு பகுதிகளில் 17 நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதைதான் இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறது இஸ்லாம் கூறும் ஆடையை அணிந்துகொண்டு கை மற்றும் முகம் தெரியும் ஆடைகள் அணிந்து வெளியில் வந்தால் ஒரு கல்லில் இரெண்டு மாங்காய் அடித்ததுபோல் பொன்னையும் பெண்மையையும் காத்துக்கொள்ளலாம்.

அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன்)



No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y