அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, July 16, 2012

உடனடி தேவை இஸ்லாமிய குற்றவியல் சட்டமே!

செய்தி  : ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற திருடனை காட்டிக்கொடுத்த அப்பாவி ஆட்டோ டிரைவர் ஜாமீனில் வெளிவந்த அந்த திருடனால் நடுரோட்டில் வைத்து கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

செய்தி  : அண்ணியை கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்தவன் பல ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை அவனை தொடர்ந்து சிறையில் வைக்க எந்த முகாந்திரமும் இல்லை மேலும் தொடர்ந்து  சிறையில் வைக்க சட்டத்தில் இடமில்லை என நீதிபதிகள் அறிவிப்பு ஏனென்றால் கற்பழித்த போது  அந்த கயவனுக்கு வயது 17 நான்கு மாதமாம் அதனால் அவன் சிறுவன் என  நீதிபதிகள் தெரிவித்து விடுதலை செய்து தீர்பளித்தனர்.

மேலே குறிப்பிட்ட செய்திகள் இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து நிகழ்த்து வருகிறது அவைகள் சில உதாரணங்கள் மட்டுமே இதுபோன்ற அத்துமீறும் செயல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கு இதற்க்கெல்லாம் ஒரே காரணம் இந்திய குற்றவியல் சட்டம் மிகவும் பலகீனமாக இருப்பதே இந்திய குற்றவியல் சட்டத்தை இயற்றிய அறிவு ஜீவிகள் மனிதர்கள் என்கிற வகையில் தங்களால் முடிந்த அளவு சட்டத்தை இயற்றி உள்ளனர்.

இவர்கள் இயற்றிய சட்டம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கு சாதகாமாகவே உள்ளது சட்டத்தை இயற்றிய இவர்கள் பாதிக்கப்பட்டவர்களை குறித்து கவனத்தில் கொள்ள மறந்துவிட்டனர் என்றே சொல்லலாம் காரணம் சாதாரண திருட்டிலிருந்து  கடுமையான குற்றச் செயலான கொலை கொள்ளை கற்பழிப்பு வரை செய்தவன் இன்று சர்வசாதரணமாக வெளியில் நடமாடுவதை நாம் கண்முன்னே காண்கிறோம்.

இன்று நமது நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் எவ்வாறு இருக்கு என்று  சொல்லி தெரியவேண்டியதில்லை அதற்காக நாம் அங்கே போய் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை காரணம் தினமும் நாம் நாளிதழ்களிலும் காட்சிஊடகங்களிலும் பார்த்தாலே விளங்கும் பத்துமுறை  திருடியவன் பதினோராவது முறையாக கைது ஐந்து முறை பெண்களிடம் சில்மிஷம் செய்தவன் மீண்டும் கைது என்று தினமும் படிக்கிறோம் அதற்கு காரணம் நமது நாட்டிலுள்ள சிறைச்சாலைகள்தான் மணி அடிச்சா சோறு மாமியாரு வீடு என்று குற்றவாளிகளால் செல்லமாக அழைக்கப்படும் நிலையில்தான் இன்று நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் உள்ளன. 

உண்மையில் எந்த ஒரு மாமியார் வீட்டிலும் நேரத்திற்கு சாப்பாடு கிடைப்பதில்லை வேண்டுமென்றால் திருமணமான சில நாட்கள் அவ்வாறு இருந்திருக்கும் ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அந்த சில நாட்களும் பல நாட்க்களாக மாறிப்போகும் ஆனால் இன்று நாட்டிலுள்ள சிறச்சாலைகளின் நிலை அவ்வாராக இல்லை சிறைச்சாலையா அல்லது உல்லாச விடுதியா என்று கேட்க்கும் அளவிற்கு வாரத்தில் மூன்று நாள் கோழி இறைச்சி பலமுறை சினிமா தலைக்கு என்னை சோப்பு சீப்பு இப்படி ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்தையும் அரசு செய்து கொடுக்கிறது.

இதுவரை ஒன்று மட்டமே இல்லாமல் இருந்தது ஆனால் இப்போது அந்த தேவையும் அரசின் பரிசீலனையில் உள்ளது சிறைக்கைதிகளுக்கு தங்களின் மனைவிமாருடன் தனித்திருக்க அனுமதியில்லை இப்போது அந்த தேவையும் பூர்த்திசெய்ய அரசு பரீசிலித்து வருகிறது மாதத்தில் இரண்டுமுறை அல்லது ஒருமுறை இந்த அனுமதி கூடிய விரைவில் சட்டம் இயற்றலாம் அவ்வாறு சட்டம் அமுலில் வந்தால் இனி சிறைச்சாலை நிஜமாகவே அணைத்து நிலையிலும் அது மாமியார் வீடாகிப்போகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி தண்டனை வழங்கக்கூடிய சிறைச்சாலை குற்றவாளிகளின் சொர்க்கமாகிப்போனது இதில் மிகவும் வேதனைப்பட வேண்டிய விசயம் என்ன தெரியுமா நமது விரலைக்கொண்டு நமது கண்ணையே குத்திக்கொல்வதுபோல நமது வரிப்பணத்தை வசூலித்து நமக்கு நட்டத்தை ஏற்ப்படுத்திய ஒருவனுக்கு சுகபோக வாழ்க்கை இதை பாதிக்கப்பட்ட ஒருவன் பார்த்தல் அவன் மனநிலை என்னவாக இருக்கும் என் குடும்பத்தை அழித்த இவனுக்கு நமது சிலவில் சுகபோக வாழ்க்கையா என்று மனம் வெறுத்து அவனையும் குற்றவாளியக்கியதுதான் இந்த அரசாங்கத்தின் சாதனை.

 உலகத்திலேயே குற்றச்செயல்கள் மிக குறைவாக நிகழ்வது அரபுநாடுகளில்தான் அதுவும் குறிப்பாக இஸ்லாமிய சட்டத்தை கடுமையாக கடைபிடிக்கும் சௌதி அரேபியாவில்தான் மிகமிக குறைவாக உள்ளது என்று சௌதி அரசாங்கம் சொல்லவில்லை ஐநாசபை புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது இப்படி உலகமே திரும்பிப்பார்க்கும் உன்னத சட்டத்தை இஸ்லாம் மக்களுக்கு வழங்கியிருந்தாலும் அது இஸ்லாமிய சட்டம் என்ற ஒரு காரணத்தால் இந்த அறிவாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் மூடர்கள் இத்தகைய அருமையான சட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் அப்படியே அரசியல்வாதிகள் இந்தியா குற்றவியல் சட்டத்தை மாற்றி அமைக்க முயன்றாலும் மனித உரிமை ஆர்வளர்கள் என்ற போர்வையில் நடமாடும் சில புல்லுருவிகளால் அது சாத்தியமில்லாமலே போகிறது இந்தியாவின் துணை பிரதமராக இருந்த போது எல்கே அத்வானி கற்பலிப்பவனுக்கு அரபுநாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் என்றார் ஷய்த்தான் வாயிலிருந்து வந்த ஆயத்துல் குர்ஷி போல.  

ஆனால் இந்த மனித உரிமை ஆர்வளர்கள் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்துவதர்க்கு  பொருந்தாத ஒரு காரணத்தையும் சொல்வார்கள் இஸ்லாமிய சட்டம் என்பது மிகவும் கொடூரமான சட்டம் அது மனித குலத்திற்கு நன்மையை தராது அதற்கு பதிலாக குற்றவாளிகளுக்கு திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று இவர்கள்தான் மனிதகுல காவலர்கள் போல உளறிக்கொட்டுகிறார்கள் இவர்கள் திருத்திய லச்சனத்தை நாம் நாள் தோறும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் இவர்கள் திருத்தியதனால்  நாட்டில் உள்ள குற்றங்கள் குறைந்துள்ளதா என்றால் இல்லை மாறாக வருடாவருடம் மத்திய அரசின் புள்ளிவிபர கணக்குப்படி குற்றங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கு.

கடந்த  சில நாட்களுக்கு முன்பு அணைத்து ஊடகங்களுக்கும் வெரும் வாய்க்கு அவலாகிப்போன செய்தி ஆப்கானில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தால் இந்தியாவிலுள்ள அணைத்து அறிவு ஜீவிகளின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது ஒரு பெண் தனது கணவனுக்கு மாறு செய்துள்ளாள் வேறொருவனோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்தால் அவளை ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டு அவளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு அது பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது இதைதான் இவர்கள் விமர்சிக்கிறார்கள் கொடூர தண்டனை என்கிறார்கள்.

இதற்குப்போய் இப்படி ஒரு கொடூர தண்டனை தேவையா என்று ஓலமிடுகிறார்கள் அதற்கு காரணம் இதுபோன்ற படுபாதக செயலை இந்தியா போன்ற நாடுகளில் பார்த்துப்பார்த்து பழகிப்போய் விட்டது கொலை கொள்ளை கற்பழிப்பு ஆள்க்கடத்தல் பேங்க் ராப்ரி போன்ற சமூக விரோதச் செயல் இவர்களுக்கு சர்வசாதாரணமாகிவிட்டது அதனால்தான் குற்றத்திற்கான தண்டனை வழங்கும்போதும் அதை நிறைவேற்றும்போதும் பொங்கி எழுகிறார்கள் இந்த சமூக ஆர்வளர்கள்! ஆனால் இதுபோன்ற தண்டனை ஒவ்வெரு நாளும் தனி நபர்களால் கொடுக்கப் பட்டுக்கொண்டே வருகிறது என்பதை நாட்டில் நடக்கும் செயல்கள் மூலம் சாதாரண அறிவுள்ள ஒருவன் கூட விளங்கிக் கொள்ளலாம் ஒவ்வொரு நாளும் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் மூலமாக.

இரவில் நன்றாகத்தான் படுக்கைக்கு சென்றார் ஆனால் காலையில் எழும்பவில்லை பினமாகிப்போனார் என்பார்கள் அல்லது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்வாள் அதேமாதிரி அவனும் யாருடனாவது கள்ளத்தொடர்பு வைத்திருப்பான் அதை மனைவி பார்த்து கண்டிப்பால் உடனே அவளை கொலை செய்துவிட்டு ஸ்டவ் வெடித்து தனது மனைவி செத்துவிட்டால் என்று நாடகம் ஆடுவான் இப்படி தனி ஒருவனை கொலைகாரனாக அவளை கொலைகாரியாக மாற்றாமல் இஸ்லாம் ஒரு அரசாங்கம் அதை செய்யச் சொல்கிறது அப்படி சிலருக்கு மரணதண்டனை கொடுத்து அதை மீடியாக்கள் மூலம் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினால் பிறகு எப்படி இன்னொருவன் மீண்டும் அதே தவறை செய்யத் துணிவான் 

உயிர் மேல் ஆசை இல்லாத ஒரு மனிதனை பார்க்க முடியாது இதுபோன்ற தண்டனைகளை மற்றவர்கள் பார்த்தல் தாமும்  இதுபோல் செய்தால் தமக்கும் இதே தண்டனைதான் நமது உயிரையும் அரசாங்கம் எடுத்துவிடும் என்று அஞ்சினால் எப்படி ஒருவன் திருடுவான் கொள்ளையடிப்பான் கொலை செய்வான் திருடிய இரண்டுபேரைப் பிடித்து கையை மணிக்கட்டு வரை எடுத்துவிட்டால் அதை அனைவரிடமும் காட்டினால் எவனும் அதற்குப் பிறகு கனவிலாவது திருட நினைப்பானா ஆகா  திருடினால் இனிமேல் நமக்கு அரசாங்கம் இலவசமாக சோறுபோடாது நமது கையை எடுத்து நம்மை ஊனமாக்கிவிடும் அப்படி ஊனமாகிப்போனால் அதன்பிறகு நமது நிலை என்ன என்று ஒருவன் எண்ணினால் பிறகு எப்படி திருடுவான் அப்படி திருடர்களும் கொள்ளைக்காரர்களும் பொறுக்கிகளும் பயந்து திருந்தினால் அது நிச்சயம் ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்மை பயக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். புகாரி6943

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள், அல்குர்ஆன் 5.45

அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. அல்குர்ஆன் 2.179
முஹம்மது உபைஸ்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y