அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, July 08, 2012

பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த மதுரை ஆதினம்! வீடியோ இணைப்பு

ஒரு நாட்டின் இறையாண்மைக்கு மிக முக்கிய தூண்களாக விளங்கி வருவது மூன்று துறைகள் காவல்துறை நீதித்துறை பத்திரிக்கைத்துறை இவை மூன்றும் செம்மையாக செயல்பட்டால் மாத்திரமே நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படும் இல்லாவிட்டால் ஒட்டு மொத்த சமூக கட்டமைப்பும் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும் ஆனால் இந்த மூன்று தூண்களாக வர்ணிக்கப்படும் இவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து செயல்படுகிறார்களா என்றால் யோசிக்காமல் இல்லை என்று சொல்லிவிடலாம்.

நாடே எதிர்பாத்து காத்திருந்த ஒரு மிக முக்கிய தீர்ப்பான பாபர் பள்ளிவாசல் தீர்ப்பு எவ்வாறு வெளியானது என்று இந்த அனைவருக்கும் தெரியும் உலகமே இந்தியா நீதித்துறையை பார்த்து காரி உமிழும் அளவிற்கு இருந்தது ஒரு சமுதாயத்திற்கு மிகப்பெரிய அநீதி சங்க்பரிவார தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது அதை இந்த உலகமே அதிர்ச்சியுடன் நேரடியாக பார்த்தது அதுமட்டுமில்லை அந்த இடம் சம்பந்தப்பட்ட அணைத்து ஆவணங்களும் முஸ்லிம்களிடமே இருந்தது இடிக்கும் அந்த நொடி வரை பொசிசனும் முஸ்லிம்களிடம்தான் இருந்தது ஆனால் இவற்றை எதையும் பார்க்காமல் என்ன தீர்ப்பு வழங்கினார்கள் இந்த மிக முக்கிய தூண்களில் ஒன்றான நீதித்துறை பறிகொடுத்தவனுக்கு ஒரு பங்கு அநியாயமாக அபகரித்தவனுக்கு இரண்டு பங்கு என்று மகா கேடுகெட்ட தீர்ப்பை அளித்து.

தீர்ப்பு வெளியான அடுத்த சில மணிநேரத்திலேயே சமுதாயத்தின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்னும் சமுதாய பேரியக்கத்தின் தலைவர் சகோதரர் பிஜே அதிரடியாக ஒரு அறிக்கையை  வெளியிட்டார் இது தீர்ப்பே இல்லை இது ஒரு கட்டப்பஞ்சாயத்து இவர்கள் நீதிபதிகளே இல்லை மரத்தடியிலிருந்து கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கும் கட்டப்பஞ்சாயத்காரர்கள் இவர்களின் தீர்ப்பை கேட்டு உலகமே கை கொட்டி சிரிக்கிறது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஆனால் சில சமுதாய தலைவர்கள் தங்கள் கூட்டணி வைத்திருக்கும் தலைவர்களின் மனம் புண்பட்டு விடக்க கூடாதென்ற ஒரே காரணத்திற்காக நாங்கள் இந்த தீர்ப்பை ஆதரிக்கின்றோம் என்று முதலில் அறிவித்தார்கள் பின்பு சமுதாய மக்களின் கொந்தளிப்பைக் கண்ட அவர்களும் பிறகு தங்களின் நிலையை மாற்றிக்கொண்டார்கள் எனபது வேறு விஷயம் இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் நீதிமன்றங்களை யாருமே விமர்சிக்கக் கூடாதென்ற ஒரு எழுதப்படாத சட்டம் நாட்டில் இருந்தபோது அப்படி விமர்சித்தால் அது நீதிமன்றத்தை அவமதித்ததாக ஆகும் என்று பலராலும் நம்பப்பட்ட நிலையில் என் சமுதாயத்திற்கு அநியாய தீர்ப்பு வழங்கினால் அதை எதிர்ப்போம் என்று  அந்த மூன்று நீதிபதிகளும் நீதிக்கே களங்கம் விளைவித்து விட்டார்கள் என்று முதன் முதலில் ஒரு ஆண்மைத்தனமான அறிக்கையை வெளியிட்டார் சகோதரர் பிஜே.

இதிலும் தெளிவாக தெரிகின்றது நீதிமன்றங்களும் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு உண்மைக்கு மாறாக தவறான தீர்ப்பு அளிப்பார்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பானாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பானாலும் அது திருத்தப்பட வேண்டியவே அவற்றிலும் கருப்பு ஆடுகள் இருப்பார்கள் என்று அவர்களும் எப்படி வேண்டுமென்றாலும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொண்டு தீர்ப்பளிப்பார்கள்.

அடுத்து காவல்துறை இதைப்பற்றி சொல்லவே வேண்டாம் பெரிய பெரிய பணமுதலைகளின் சட்டைப் பாக்கெட்டில்தான் இவர்கள் இருக்கிறார்கள் நாட்டில் நடக்கும் கொலை கொள்ளைக்கு இவர்களின் பங்கு மிக அதிகம் என்றால் அது அதிகப்படியான வார்த்தையாகாது லஞ்சத்தை பெற்றுக்கொண்டு வளியவனை வாழ்த்துவதும் எளியவனை காலில் போட்டு மிதிப்பதும் அவர்களின் அட்டகாசம் சொல்லி தெரியவேண்டிய ஒன்றில்லை.

மூன்றாவது தூணான மிக முக்கிய தூணான சாமானிய மக்களுக்கும் கை கொடுக்ககூடிய ஒன்றாக இந்த ஊடகத் துறையை மக்கள் நம்பி வந்தார்கள் ஆனால் சிலகாலமாக இவர்களின் செயல் அந்த நம்பிக்கையை சிறிது சிறிதாக இழந்து வருகிறது என்றே சொல்லலாம் தினத்தந்தி என்ற நாளிதழ் தமிழர்களின் தந்தை என்று இந்துக்களால் போற்றப்படும்  சிவந்தி ஆதித்தனாரால் எளிய தமிழில் நடுநிலையுடன் நடத்தப்பட்ட நாளிதழ் இன்று அதன் நிலை என்ன சங்க்பரிவா கூட்டத்தால் நடத்தப்படும் பதிரிக்கையைவிட மிகமோசமான பத்திரிக்கையாக மாறிவிட்டது இவர்களின் அந்த பழைய நம்பத்தன்மை இன்று முற்றிலும் இழந்துவிட்டது . 

 அதேபோல நக்கீரன் என்று மஞ்சள் பத்திரிக்கை நடத்தும் கோபாலும் காமராஜும் பெற வேண்டியதை பெற்றுக்கொண்டு தங்களின் சர்க்குலேசனை அதிகப்படுத்த வேன்டி தன் மனம் போன போக்கில் ஏசி அறையில் உட்க்கார்ந்துகொண்டு மாட்டுக்கறி சமைக்கும் மாமி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் குண்டு வைக்க தூண்டினாரா பிஜே என்று பல  லட்ச முஸ்லிம்களால் நேசிக்கக்கூடிய ஒருவரை அபாண்டமாக எழுதி பிறகு செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டான். 

அதேபோல இன்று  தொலைக்காட்சியை பார்த்த அனைவருக்கும் காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி அது மதுரை ஆதினம் பத்திக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் நிகழ்ச்சியின் முடிவில் கத்தை கத்தையாக கரன்சி நோட்டை எடுத்து எந்த வித அச்சமும் இல்லாமல் ஒவ்வொரு பத்திரிக்கையாளராக அழைத்து லஞ்சம் என்னும் கைமடக்கு கொடுத்து கவுரவித்தார் அதுமட்டுமில்லை நீங்கள் மற்ற இடங்களில் வாங்குவதற்கும் தன்னிடம் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று ஒரு போட்டையும் போட்டார் அப்படியானால் இவர்கள் எல்ல இடங்களிலும் இப்படிதானோ என்று என்ன தோன்றுகிறது அந்த பணத்தை சமுதாயத்தின் தூண்களின் ஒன்றான பத்திரிக்கையாளர்கள் கைநீட்டி பெற்றுக்கொண்டனர். 

அரசியல்வாதிகளை நம்பியே ஏமாந்த அப்பாவி மக்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை இந்த மூன்று தூண்களும்தான் ஆனால் அந்த நம்பிக்கையை யெல்லாம் குழிதோண்டி புதைக்கும் விதமாக இந்த செயல் நடந்துள்ளது இதைப்பார்த்தால் மக்கள் இனிமேல் இவர்களின் மேலுள்ள நம்பிக்கையை முழுவதும் இழந்து விடுவார்கள் என்பது மட்டும் உறுதி.

முஹம்மது உபைஸ்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y