அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, May 10, 2012

மதுரையில் குண்டு வைத்தது யார்?


மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு தனியார் டிரஸ்ட்டுக்கு சொந்தமான ராமர் கோவில் உள்ளது .இந்த கோவிலின் கம்பி வேலியில் 4 நாட்களாக ஒரு சைக்கிள் கட்டப்பட்டு இருந்ததாகவும் ,அந்த சைக்கிளில் வைக்கப்பட்ட டைம்பாம் வகை குண்டு வெடித்ததாகவும் போலிஸும் ஊடகங்களும் செய்தி பரப்பி பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டனர் .

கோவில் கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்த சைக்கிள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு தந்த இலவச சைக்கிளாகும் இந்த சைக்கிள் குறிக்கப்பட்டுள்ள என்னை வைத்து எந்தப் பள்ளிக்கு இந்த சைக்கிள் வழங்கப்பட்டது ? அதை பெற்ற மாணவன் அல்லது மாணவி யார் ?என்று துப்பறிந்து குற்றவாளியை நெருங்க முடியும் .பிறகு ஏன் போலீஸ்
இன்னும் குற்றவாளியை பிடிக்கவில்லை என்பது மர்மமாக இருக்கிறது .
வெடித்தது குண்டு என்று சொல்கிறார்கள் .குண்டு வெடித்திருந்தால் 
சைக்கிள் சின்னாபின்னமாகியிருக்கும் .ஆனால் சேதத்தை பார்க்கும்போது 
அப்படி தெரியவில்லை .சைக்கிளின் சில போக்ஸ் கம்பிகள் மட்டுமே சேதம் 
அடைந்துள்ளன .சைக்கிள் கேரியரில் குண்டு வைக்கப்பட்டது என்கிறார்கள் .
பிளாஸ்ட்டிகினால் ஆன சைக்கிள் சீட் உட்பட கேரியர் வரை எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது ஒரு பிளாஸ்டிக் சீட்டைக் கூட எரிக்காத குண்டு என்ன குண்டோ ?நமக்குத் தெரியவில்லை. ஒரு சக்தி வாய்ந்த பட்டாசு வெடித்தாலே போக்ஸ் கம்பிகள் உடைந்துவிடும் அந்த மாதிரி பட்டாசு வெடிக்கப்பட்டதா ?என்ற சந்தேகம் நிறைய இருக்கிறது .சிவப்பு பாஸ்பரஸ் தீப்பெட்டி தயாரிப்பிலும் பட்டாசு தயாரிப்பிலும் சாதரணமாக பயன்படுத்தப்படும் .இந்த சிவப்பு பாஸ்பரஸ்தான் மதுரை குண்டுக்குள் இருந்தது என்கிறார்கள் குண்டு வெடித்த தரையில் ஏதாவது குழி விழுந்துள்ளதா ?என்று பார்த்தால் அதுவும் இல்லை .சின்ன பேட்டரிகள் ஒரு வயர் டைம்பாம் பாக்ஸ் செட்டு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

பட்டாசு வைத்து வெடித்துவிட்டு குண்டு என்ற பீதியை கிளப்புவதற்காக இதை போட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது .தீவிரவாதிகள் வைத்த குண்டாக இருந்தால் சாதாரண சேதம் இருக்காது .கடும் சேதம் ஏற்பட்டிருக்கும் .பெரிய சேதம் எதுவும் இல்லை எனும் போது இது தீவிரவாதிகளின் செயல் அல்ல .மாறாக யார் மீதோ பழி போட அல்லது எதற்கோ விளம்பரம் தேட செய்யப்பட்டுள்ளது எனத் தெரிகிறது .இந்த குண்டு வெடித்த போது மதுரை சித்திரைத் திருவிழா நடந்து கொண்டிருந்தது .மீனாட்சி கல்யாணம் தேரோட்டம் ,அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவம் என மதுரை மக்கள் திரளால் திணறிக் கொண்டிருந்தது .இந்த மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குண்டு வெடித்ததின் மூலம் மக்களை அச்சுறுத்தலாம் .குண்டு பழியை அப்பாவிகளின் மீது தூக்கிப்போடலாம் என்ற சதி அம்பலமாகிறது . 

இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்  
குண்டு வெடித்தது .அது இப்போது வெடித்ததை விட சக்தி வாய்ந்த குண்டாகும் .
இந்த குண்டு வெடிப்புக்காக முதலில் சில முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர் .
விசாரணையின் முடிவில் அவர்கள் அனைவரும் அப்பாவிகள் .இவர்களுக்கும்,
குண்டு வெடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விடுவிக்கப்பட்டு 
வெங்கடேஸ் என்பவர்தான் இந்த சூத்திரதாரி என கண்டுபிடிக்கப்பட்டு அவர் 
மீது சட்ட நடவடிக்கை எடுத்தனர் .இதுவும் அதுமாதிரியான குண்டு வெடிப்பாகியிருக்குமோ 
என்று எல்லோரும் ஐயப்படுகின்றனர் .
    
மதுரையில் பாஜக மாநாடு நடக்க உள்ளது .இதற்க்கு விளம்பரம் தேட பாஜககாரர்கள் குண்டு நாடகம் போட்டார்களோ என்ற விதத்திலும் போலீசார் விசாரிக்க வேண்டும் .ஏனெனில் தென்காசி ஆர் .எஸ் .எஸ் .அலுவலகத்தில் இவர்களே குண்டு வைத்துவிட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மீது தூக்கிப்போட்டு கடைசியில் போலீசில் மாட்டிக்கொண்ட புண்ணியவான்கள் ஆயிற்றே! இவர்கள்தான் குண்டு வைத்தார்கள் என்று முடிவு செய்து விட்டு போலீசார் துப்பு துலக்காமல் ,கிடைத்துள்ள தடயங்கள் ,சூழ்நிலைகள் ஆகியவற்றை வைத்து துப்பு துலக்கினால் உண்மையிலே குண்டு வைத்தவன் சிக்குவான் .அந்த உண்மை குற்றவாளியை மக்கள் முன் போலீசார் அடையளாம் காட்டுவார்களா? 

தினத்தந்தி ஆசிரியரையும் இது குறித்து விசாரிக்க வேண்டும் காரணம் என்னவெனில் கோவையில் வைத்தது போல் மதுரையிலும் முஸ்லிம்கள் குண்டு வைக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக மோடி ஆதித்தனின் தினத்தந்தி எழுதியுள்ளது இது குறித்து தினத்தந்தியையும் போலீசார் விசாரணை செய்ய வேண்டும் .

நன்றி:உணர்வு இதழ்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y