அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, May 07, 2012

கண்டுகொள்ளப்படாத காவலர்கள்?

சென்ற ஏப்ரல் 21 தேதி சத்திஸ்கரில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டர் நெல்லையை சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டார் பின்பு 13 நாட்களுக்கு பிறகு அரசு மாவோயிஸ்ட்களுடன் செய்துகொண்ட பல்வேறு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுவிக்கப்பட்டு இன்று பணிக்கும் திரும்பிவிட்டார் ஆனால் நடந்த அந்த சம்பவத்தில் கண்டுகொள்ளப்படாத நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இரண்டு காவலர்களை அதிகம் பேர் அறிந்திருக்கவில்லை 

அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்ட அன்று அவரில் மெய்காவலர்கள் இருண்டுபேர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் அப்படி சுட்டுக்கொள்ளப்பட்டவர்களை இதுவரை அதிகமானோருக்கு தெரியவில்லை அதற்கு காரணம் அங்கு உள்ள பாஜக அரசு இந்த செய்தியை அதிகம் வெளிவராமல் மிகவும் கவனுத்துடன் பார்த்துகொண்டது.

இறந்த இரண்டு காவலர்கலுமே சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்பதாலோ என்னமோ பாஜக அரசு திட்டமிட்டே மறைத்துள்ளது என்றே என்ன தோன்றுகிறது இன்னும் சிலர் மாவோயிஸ்டுகளுக்கும் பாஜக அரசுக்கும் கள்ள தொடர்பு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள் கலெக்டர் கடத்தல் நாடகத்தில் பாஜக அரசுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே சிலர் எண்ணுகிறார்கள் இறந்த அந்த காவலர்களின் செய்தி வெளிவராமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது அவர்களின் கூற்று உண்மையாக இருக்குமோ என்றே என்ன தொடருகிறது. 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அரசு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது ஆனால் தேர்தலுக்கு முந்தய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிதான் அங்கே ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் எப்படி பாஜக அங்கே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்று இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அந்த இருவரில் ஒருவர் முஹம்மது அம்ஜத் கான் இவர் ஒரு மெக்கானிகல் என்ஜினியர் ஆவார் ஆனால் காவல் துறையில் சேர்ந்து நாட்டிக்காக சேவை செய்வதே இவரின் லட்சியமாக இருந்தது மேலும் இவரை பற்றி கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கூறுகையில் அம்ஜத் கான் ஒரு சிறந்த மனிதர் நாட்டின் மீது தணியாத காதல் கொண்டவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் அப்படிப்பட்ட ஒருவரின் மரணத்திற்கு பின் அரசு அவரது குடும்பத்திற்கு எந்த வித உதவியும் செய்யாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

சகோதரர் அம்ஜத் கானை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு அல்லாஹ் சாந்தியையும் சமாதானத்தையும் வழங்கிட நாம் துஆ செய்வோம்.

நன்றி:முஹம்மது உபைஸ்

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y