அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, May 14, 2012

மதுவில் தள்ளாடும் தமிழக அரசு


கடந்த 2011 முதல் 2012 வரை தமிழகத்தில் மதுபான விற்பனை மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி கிடைத்திருப்பதாகவும், இன்னும் இந்த வருமானத்தை பெருக்கிட எலைட் என்ற உயர் ரக மதுவகைகள் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனை கடந்த வருடங்களுடன் ஒப்பீடும் பொழுது அதீத வளர்ச்சி அடைந்திருப்பதை தெரிந்துகொள்ளலாம். அதன் விபரம் வருமாறு:-

2003-2004ம் வருடம் ரூ.3 ஆயிரத்து 639.93 கோடி, 2004-2005ம் வருடம் ரூ.4ஆயிரத்து 872.03 கோடி, 2005-2006ம் வருடம் ரூ.6 ஆயிரத்து 030.77 கோடி, 2006-2007ம் வருடம் ரூ.7ஆயிரத்து 473.61 கோடி, 2007-2008 ம் வருடம் ரூ.8 ஆயிரத்து 821.16 கோடி, 2008-2009ம் வருடம் ரூ.10 ஆயிரத்து 601.50 கோடி, 2009-2010ம் வருடம் ரூ.12 ஆயிரத்து 498.22 கோடி, 2010-2011ம் வருடம் ரூ.14 ஆயிரத்து 965.42 கோடி, 2011-2012ம் வருடம் ரூ.18 ஆயிரத்து 081.16 கோடி மொத்த வருவாய் கிடைத்துள்ளது.
பொது மக்களின் அபரீத ஒத்துழைப்போடு இந்த விற்பனையை உயர்த்த அரசு பகீரத முயற்ச்சி எடுத்துள்ளதை இனி பார்ப்போம், தமிழகம் முழுவதும், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கடந்த வருடம் அக்டோபர் 15ம் தேதி மாலை முதல் 19ம் தேதி மாலை வரையிலும், 21ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. விடுமுறை காரணமாக, தேர்தலுக்கு முன், டாஸ்மாக் கடைகளில் சரக்கு விற்பனை மூன்று மடங்கு உயர்ந்தது. அக்டோபர் 13 முதல் 15ம் தேதி மாலை 5 மணி வரை, மூன்று நாட்களில் மட்டும், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை, 500 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. இதனை அறிந்த தமிழக அரசு தீபாவளிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்க முடிவெடுத்தது. அதன் படி கடந்த வருட தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே தமிழகம் முழுவது உள்ள கடைகளுக்கு 1000 கோடி மதிப்புள்ள சரக்குகளை குடோன்களுக்கு அனுப்பி வைத்தது. மேலும், தீபாவளி அன்று 100 கோடி, அதன் முந்தைய இரு நாட்களுக்கும் தலா ஒரு நாளைக்கு 75 கோடி என ஆக மொத்தம் 250 கோடி 3 நாட்களில் விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இலக்கை அடைந்தது. இந்த இடத்தில் நாம் மாற்று மத சகோதர்களுக்கு ஒரு விஷயத்தை வலியுறுத்த வேண்டி உள்ளது. பண்டிகை என்பது கொண்டாடத்தான், இப்படி உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள அல்ல. இதேபோல் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மோர் குடிப்பது போல் பீர் குடிப்பதை சம்பிரதாயமாக்கி கொண்டுள்ளவர்களும் தங்கள் தவறை உணர்ந்து திருந்த வேண்டும்,

இப்படி தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று இதற்க்கு எடுக்கும் அக்கறையை எந்த அரசும் ரேஷன் கடிகளில் அத்யாவசிய பொருட்களை கிடைக்க செய்ய முயற்ச்சி இதுவரை எடுத்தது இல்லை. அனைத்து ரேஷன் கடைகளைலும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொருள்கள் வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கவில்லை. இவர்களுக்கு மக்களுக்கு உழைக்க வேண்டும், அவர்களுக்கான உரிமைகளை சரியாக அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை விட கேவலமான இந்த வருமானம்தான் கண்ணுக்கு தெரிகிறது. இதன் மூலம் தங்களுக்கும் வருமானம் கிடைக்கின்றது என்பதோடு, தான் உழைத்த பணத்தை இந்த வகையில் இழந்து தன் உடல் நலத்தையும் இழந்து அரசு கொடுக்கும் அற்ப இலவசங்களுக்கு பிச்சைகாரர்களை போல் இவர்களிடன் எப்பொழுதும் கையேந்தி நின்றால்தான் தங்களை அரசியல் பிழைப்பு நடக்கும் என்பதில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளது. மக்கள் ரத்தத்தை அட்டை பூச்சி போல் உறிஞ்சும் அரசு எப்படி மக்கள் அரசாக இருக்க முடியும். அரசை கேட்டால் மதுவிலக்கு கொண்டு வந்தால் குடிமக்கள் கள்ள சாராயத்தை குடித்து பார்வை இழப்பு மட்டுமின்றி உயிரை இழக்கவும் செய்கின்றார்கள் அதனால்தான் நாங்களே நல்ல சரக்கை விற்று அவர்கள் உயிரை காப்பதோடு அரசுக்கும் வருவாயை ஈட்டி வருகின்றோம் என்று கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்கின்றார்கள். ஒரு சில மாநிலங்கள் மற்றும் நாடுகள் விபச்சாரத்தை அனுமதித்து விட்டு, கற்பழிப்பை தடுக்கவும், பெண்கள் பாதுகாப்பிற்க்காகவும்தான் நாங்கள் இதனை அனுமதிக்கின்றோம் என்று சாக்கு சொல்லி மாமா வேலை பார்க்கின்றன. தமிழக அரசு வருவாய்க்காக அதே காரணத்தை சொல்லி இனி அந்த வேலையையும் செய்யுமா?

ஐரோப்பாவிலே ஒரு ஆய்வு நடந்தது, அதில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது, நாட்டு மக்கள் குடிப்பதால் அரசாங்கத்திற்கு வரும் வருமானத்தை விட, அந்த மக்களுக்கு (மறைமுகமாக ஒட்டுமொத்த சமுதாயத்திகும்/அரசுக்கும் ) ஏற்படும் வருமான இழப்பு அதிகம். (எப்படியெனில், குடியால் ஏற்படும் மனம்/உடல் பிரச்சனைகளுக்கான செலவு, குடியால் ஏற்படும் குடும்ப வாழ்க்கை சீரழிவு, குழந்தைகளின் படிப்பு பாழ் ஆவதால் வரும் செலவு, குடித்துவிட்டு வேலைக்கு போகாததால் ஏற்படும் நஷ்டம் அல்லது குடித்துவிட்டு வேலை பார்ப்பதால் ஏற்படும் தவறுகள் / விபத்துகள் மூலம் ஏற்படும் நஷ்டம் - என லாபத்தை விட நஷ்டமே மேலோங்கி நிற்கிறது. இது அந்த நாடுகளை விட நம் நாட்டில் இன்னும் அதிகம் அல்லவா? அதனால் அரசுக்கு என்ன கவலை, வரி செலுத்துவோர்களிடம் மேலும் மேலும் வரிச்சுமைய அதிகரித்து அவனையும் குடிகாரனாக்கி விட வேண்டும் என்று மல்லுக்கு அல்லவா நிற்கிறது.

இனியாவது அரசு இது போன்ற இழிவான செயல்களில் வருமானத்தை ஈட்ட முயற்ச்சிக்காமல் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றாமல், அத்யாவசிய பொருள்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி சீராக அனைவருக்கும் கிடைக்க செய்வதோடு, ஆலைகளை அதிகமாக்கி, வேலை வாய்ப்புகளை வளர்த்து நாட்டை வளமாகுவதோடு மக்களையும் உழைக்க கூடியவர்களாக ஆக்கி, அவர்கள் தனக்கு வேண்டியவைகளை தானே வாங்கி தன் தேவைகளை தீர்த்துக்கொள்ளும் தன்மானம் உடையவர்களாக உருவாக்க வழிவகுக்க வேண்டும்.

கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவது, அறியாமை நிலைத்து விடுவதும், மது அருந்தப்படுவதும், வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பது மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும் என்று இறைதூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்-அனஸ்(ரலி) நூல் புகாரி அத்தியாயம் 1:80


நன்றி:நௌஷாத் அலி ஜித்தா

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y