அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, October 31, 2011

ஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது


இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்லவிருக்கும் முஸ்லிம்கள் மஷாயிர் ரெயில்வேயின் முழுஅளவு பயனையும் பெறலாம் என்று மக்கா நகர ஆளுநர் இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்துள்ளார். மஷாயிர் ரெயில்வே திட்டமானது ஹஜ் கிரியைகளுக்கான புனித இடங்களாக அறியப்படும் மினா, அரஃபாத், முஜ்தலிஃபா, பகுதிகளை இணைக்கும் புதிய ரெயில்வே திட்டமாகும். சவூதி அரேபியாவின் மஷாயிர் ரெயில்வே  குறித்து மக்கா ஆளுநரும், சவூதி அரேபிய மத்திய ஹஜ் கமிட்டியின் தலைவருமான இளவரசர் காலித் அல்ஃபைசல் செய்தியாளர்களிடம் விளக்கினார். அரஃபாத்திலிருந்து மினா வரை இத்திட்டம் பூர்த்தியடைந்துவிட்டது. மேலும், வெகுவிரைவில்ஹரமிலிருந்து அல்ஹரமைன் தொடர் வண்டி நிலையம் வரையிலான இணைப்பும் பூர்த்தி செய்யப்படும். இந்த வருடம் ஹஜ் யாத்ரிகர்கள் முழுவீச்சில் இதன் பயனைப் பெறலாம்மேலும், “மினாவில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் யோசனையும்  ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுஎன்றார் ஆளுநர் காலித்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முஸ்லிம் பொறிஞர் பால் ஆண்டர்சன், ரியாத்-தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறுகையில், “ஒருமணிநேரத்திற்கு 72,000 பயணிகளைச் சுமந்து செல்லும் இந்தத் தொடர்வண்டி, உலக அளவில் பிரயாண வசதிகளில் முதன்மையானதுஎன்றார். ஜப்பான், சைனாவில் மேம்படுத்தப்பட்ட தொடர்வண்டிகள் 56,000 பேர் வரை சுமந்துசெல்கின்றன”.

மஷாயிர் ரெயில்வே திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றும் பால் ஆண்டர்சன், “இது ஹஜ் புனிதப் பயணியருக்கு மிகுந்த உதவிகரமானது மட்டுமின்றி காற்று மாசுபடுவதை பெருமளவு குறைக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், ஹஜ்ஜுக் காலத்தில்,சுமார் 120,000 பேருந்துகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் 30டன் கெடுதியான வாயுக்களிலிருந்து பாதிப்படைவதினின்றும் சுற்றுப்புற சூழல் இனி பாதுகாக்கப்படும் என்றும், இதனால் யாத்ரிகர்களுக்கு இதயப் பிரச்னைகள், ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

ஹஜ்ஜுக் காலங்களில் இதுவரை பேருந்துகள் ஒருமணிநேரத்துக்கு ஐந்து கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் தான் சென்றுவந்துகொண்டிருக்கின்றன, இதனால் குறிப்பிட்ட இடங்களை அடைய நான்கு(அ) ஐந்து மணி நேரங்கள் தேவைப்பட்டன.  ஒருமணிநேரத்துக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்தத் தொடர்வண்டிகள் அந்தத் தூரத்தை இனி எட்டே நிமிடங்களில் அடைந்துவிடும். மேலும் சாலைப் போக்குவரத்தால் ஏற்படும் நிறுத்துமிடப் பிரச்னைகளையும் இந்தத் தொடர்வண்டிகளைக் கொண்டு தீர்த்துவிட முடியும்என்றார் ஆண்டர்சன்.

நன்றி:இந்நேரம்.காம்

Friday, October 28, 2011

குடி கெடுக்கும் நவீன கலாச்சாரம்...!

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குடிகொண்ட நவீன கலாச்சாரம் இன்றைக்கு அவளின் உயிரையும் அவளது கணவனின் உயிரையும் மாய்ப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது. 

கடந்த சில வாரங்களுக்கு முன் மீடியாக்களில் பரபரப்பாக அலசப்பட்ட ஒரு விசயம் மூணாறில் கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணை பற்றியதாகும் மூனாறு பகுதிக்கு தன மனைவியை அழைத்து சென்று அவளை கொலை செய்துவிட்டு தன சொந்த ஊருக்கு திரும்பி வந்த அந்த பெண்ணின் கணவன் தற்கொலை செய்து கொண்டார். 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடைசியாய் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் மூலம் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் அரங்கேறிய புயல்களும் பூகம்பங்களும் வெளியுலகிற்கு தெரிய வந்தன அவருடைய கடிதத்தில் அவர் எழுதிய மிக முக்கியமான வார்த்தை படித்த பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கிறார்கள் அவர்கள் தங்களை முழுமையாக வெளிநாட்டு கலாச்சாரத்திற்கு மாற்றிக்கொள்கிறார்கள் என்பதாகும். 

சவுதியில் நவம்பர் 6 ஞாயிறு அன்று தியாகத் திருநாள்

சவூதி அரேபியாவில் வியாழன் இரவு பிறை பார்த்ததன் அடிப்படையில், 28.10.2011 வெள்ளி அன்று சவூதியில் துல்ஹஜ் பிறை 1 ஆகும். நவம்பர் 5 ஆம் தேதி சனிக்கிழமை அரஃபா தினம். நவம்பர் 6 ஞாயிறு அன்று தியாகத் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. சவூதி உச்ச நீதி மன்றம் அறிவிப்பு.



Arafat Day on Nov. 5

By ARAB NEWS
Published: Oct 28, 2011 01:53 Updated: Oct 28, 2011 01:53
JEDDAH: The Arafat Day, when pilgrims stand in prayer in the plain of Arafat during Haj, will be on Saturday, Nov. 5, while Eid Al-Adha will be celebrated in the Kingdom on Sunday, the Supreme Court announced.
“It has been confirmed that the first day of Dul Hijjah is on Friday, Oct. 28 as the new crescent was sighted by a number of people on Thursday evening,” the court said.

Wednesday, October 12, 2011

சட்டமன்றத்தில் ஒரு ஜனாஸா


தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் மொத்த வருவாய் 85,685 கோடி ரூபாய்! இதில் ஐந்தில் ஒரு பகுதி மது விற்பனை மற்றும் அதற்காக விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கின்றது.
இப்படி ஒரு வருவாயை ஈட்டுகின்ற மாநில அரசு மதுக்கடைகளை மூடுகின்ற அளவுக்கு முன்வருமா? ஒருபோதும் வராது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமலாகுமா?’ என்ற கேள்விக்கு சட்டமன்றத்தில் ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில் வருமாறு:
டாஸ்மாக் மூலம் அரசின் கருவூலத்திற்கு 14 ஆயிரம் கோடி வருகின்றது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் இந்த வருவாய் சமூக விரோதிகளுக்கும் தனியார் சாராய சாம்ராஜ்யத்திற்கும் சென்று விடும்.
இந்தச் சில்லறை மதுக்கடைகள் ஈட்டுகின்ற வருவாய்க்கு ஈடுகட்டுகின்ற வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார்.
சுற்றியிருக்கும் அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாத போது தமிழகத்தில் மட்டும் அதை அமல்படுத்துவது அசாத்தியம்.
ஆனால் மதுவின் தீமைகளை விளக்கும் முகாம்களையும் மறுவாழ்வு மையங்களையும் அமைத்து மக்களை மதுவின் பிடியிலிருந்து காப்பாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்கின்றது.

Wednesday, October 05, 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூடு காரணம் தீண்டாமையே!


கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியன்று, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பச்சேரி (பள்ளர் சேரி என்பது தான் பச்சேரி என்று அழைக்கப்படுகின்றது) என்ற ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் பழனி குமார் (வயது 16) கொலை செய்யப்படுகின்றான்.
தேவர் சமுதாயம் அதிகமாக வாழ்கின்ற முத்துராமலிங்கபுரத்திலும், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமாக வாழ்கின்ற பச்சேரியிலும் முத்துராமலிங்கத் தேவரை தரக்குறைவாகத் தாக்கி சுவர்களில் எழுதப்பட்டிருந்தது. அதை இந்தப் பள்ளி மாணவன் தான் எழுதினான் என்பதால் அவன் கொலை செய்யப்பட்டுள்ளான். இதனைத் தொடர்ந்து தான் 6 பேர் பலியாகக் காரணமான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இது தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் சாரம்சமாகும்.
தற்போது துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக முதல்வரின் இந்தக் கருத்தை தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வன்மையாக மறுக்கின்றார்.
செப்டம்பர் 9ஆம் தேதியன்று நடந்த பதினாறு வயதுச் சிறுவனின் படுகொலைச் சம்பவத்திற்கும் கலவரத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிடுகின்றார். தன்னைக் கைது செய்தது தான் கலவரத்திற்குக் காரணம் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினமான செப்டம்பர் 11ஆம் தேதியன்று அவரது நினைவிடத்தில் ஜான் பாண்டியன் மரியாதை செலுத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்திருந்தது. மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

Monday, October 03, 2011

இராமநாதபுரத்தில் நடந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

நேற்று ௦௦02.10.2011 அன்று இராமநாதபுரம் தாஜ் மண்டபத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சிறப்பாக நடந்தது இதில் பல்வேறு கேள்விகளுக்கு சகோ.பிஜே அவர்கள் பதில் அளித்தார்கள் மாற்றுக்கொள்கையில் உள்ளவர்கள் பலர் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்து தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றனர் முன்னதாக வலம்புரி மஹாலில் மாவட்ட பொதுகுழு கூடியது அதில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, October 01, 2011

குஜராத் முஸ்லிம்கள் படுகொலை: மோடிக்கு எதிராக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்து உள்ளே தள்ளிய மோடி!,

குஜராத் முஸ்லிம்களை படுகொலை செய்த மோடிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை, உள்ளூர் நீதிமன்றே விசாரித்துக் கொள்ளலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவித்தை தொடர்ந்து நரபலி மோடி ஹிட்லரை மிஞ்சம் தனது அராஜக போக்கை ஆரம்பிக்க துவங்கி விட்டான்.
குஜராத் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சமீபத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் தத் மோடிக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
”மோடி தான் கலவரத்தை கண்டு கொள்ளாமல் இருக்க சொன்னார்” என பகிரங்கமாக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் தத் அவர்களை நேற்று மோடி அரசு கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.
”ஏய் நான் யாரு தெரியுமா எனக்கு எதிரா சாட்சி சொன்ன, உன்ன ஃபொர்ஜரி கேஸ்ல உள்ள போட்ருவேன்” என்ற வில்லன்களின் டயலாக்கை வில்லனுக்கேல்லாம் வில்லனான மோடி தற்போது நடைமுறை படுத்தியுள்ளான்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y