அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, January 31, 2011

மார்க்கத்திற்கு எதிரான மவ்லிதுகள்


மவ்லித் என்பதின் பொருள் என்ன?
மவ்­து எனும் அரபிச் சொல்­ன் அகராதிப் பொருள் 'பிறந்த நேரம்அல்லது'பிறந்த இடம்என்பதாகும். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்,பக்கம்: 8)
ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான,அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கேடு கெட்ட கவிதைகளுக்கு மவ்­து எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.
சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?
அல்லாஹ் மவ்லூத் ஓதியதாக பொய்யர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்­தை எழுதியவர் யார் என்பது தெரியாது. இதோ அவர்களின் நூலிலேயே கூறப்பட்டிருப்பதைப் பாருங்க்.
மகுடமாய்த் திகழும் சுப்ஹான மவ்­தை கல்விக் கடல் கஸ்ஸா­ இமாம் (ரஹ்) அவர்களோஅல் இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றி யிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 'இயற்றியவர் யார்?' என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்பக்கம்: 5)

PFI , SDPI காட்டுமிராண்டி கும்பலின் ஈனச் செயல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் குறித்து ஒட்டப்பட்ட போஸ்டரின் மீது PFI , SDPI யின் காட்டுமிராண்டி கும்பல் அவர்களது போஸ்டரை ஒட்டிச் சென்றுள்ளனனர்.
இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் இவர்களை சமூதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
மேலும் செய்துங்கநல்லூர் மர்கசில் ஆபாசமாக எழுதி அதை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்டிவிட்டு சென்றுள்ளது இந்த ரவுடி கும்பல்.



11 வது பொதுக்குழு: பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள்


தினமலர்:

கோரிக்கை ஏற்காவிட்டால் தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை
சேலம்: “தமிழகத்தில், 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை தி.மு.க. ஏற்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு கிடையாது’ என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின், 11வது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. பொதுக்குழுவில், அமைப்பின் மாநில தலைவராக ஜெயிலூல்ஆபிதீன், பொது செயலாளர் ரகமத்துல்லா, பொருளாளராக அன்வர்பாய், துணைத் தலைவராக அப்துல் ரகீம், துணை பொதுச் செயலாளராக சையத் இப்ராஹீம் மற்றும் 7 செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பொதுக்குழு முடிந்தவுடன், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில தலைவர் ஜெயிலூல் ஆபிதின் கூறியதாவது:தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது.
இந்த பிரச்னைகளை களைய கண்காணிப்பு குழுஅமைப்பதாக, அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதோடு, இட ஒதுக்கீட்டை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தி, தனி ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.கடந்த எம்.பி. தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றிக்கு நாங்களும் காரணம். அதனால், வரும் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்குத்தான் ஆதரவு தெரிவிப்போம். கோரிக்கையை ஏற்காவிட்டால், தி.மு.க.,வுக்கு கண்டிப்பாக ஆதரவு அளிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினதந்தி

தினகரன்

காலைக்கதிர்



Sunday, January 30, 2011

சேலத்தில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு ! தீர்மானங்கள், புதிய நிர்வாகிகளின் பட்டியல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில்சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.
இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றதுமுதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
புதிய மாநில நிர்வாகிகள்
தலைவர் பி.ஜே
து. தலைவர் அப்துர் ரஹீம்
பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ்
து. பொதுச் செயலாளர் சைய்யத் இப்ராஹீம்
பொருளாளர் அன்வர் பாஷா
மாநிலச் செயலாளர்கள்
அப்துல் ஹமீது
சாதிக்
அப்துல் ஜப்பார்
யூசுப் (திருவள்ளூர்)
அஷ்ரஃப்தீன் பிர்தௌசி
மாலிக் (ராம்நாடு)
சாதிக் ( கோபிசெட்டிபாளையம்)

மமக நெல்லை மாவட்டச் செயலாளர் tntj வில் இணைந்தார் தினகரன் செய்தி


சோம்பல் இஸ்லாத்தின் பார்வையில்...


சுறுசுறுப்பின் எதிரிதான் சோம்பல்!

முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்!
முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!

சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றி, சோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போது, இந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் ‘நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.

Saturday, January 29, 2011

முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை கண்காணிக்க தனி குழு – முதல்வர் உத்தரவு – தினமலர் செய்தி


சென்னை : முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்கு சரியாக போய் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க, தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29-1-11 -தினமலர்
தவ்ஹீத் ஜமாஅத் வைத்த கோரிக்கை
உரை
முதல்வர் கடிதம்

ஜனவரி 27 சென்னை மற்றும் மதுரையில் நடந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் பல்வேறு தொலைக்காட்சியில்


Friday, January 28, 2011

ஜனவரி 27 சென்னை மற்றும் மதுரை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் பத்திரிகை செய்தி


பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்






Thursday, January 27, 2011

நபிவழியும், கிப்லா மாற்றமும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தொழுகையின் போது ஒரு கிப்லாவை முன்னோக்கித் தொழுதனர். பின்னர் அந்தக் கிப்லா மாற்றப்பட்டு வேறு கிப்லாவை நோக்குமாறு கட்டளையிடப்பட்டது. இது பற்றித் திருக்குர்ஆன் 2:142-145 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அதன் பின்னர் இது மாற்றப்பட்டு கஃபாவை நோக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதைத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றன.


இம்மூன்று வசனங்களில் முதல் வசனத்தை அதாவது 142வது வசனத்தை எடுத்துக் கொள்வோம்.


ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் முஸ்லிம்கள் ஏன் திரும்பி விட்டனர்?' என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள்' என்று இந்த வசனம் கூறுகின்றது.


முஸ்லிம்கள் முன்னர் ஒரு கிப்லாவை நோக்கித் தொழுது வந்தனர் என்பதும், இப்போது அந்தக் கிப்லாவை விட்டு விட்டு வேறு கிப்லாவுக்கு மாறி விட்டனர் என்பதும், அவ்வாறு மாறியதை அன்றைய அறிவிலிகள் விமர்சித்தனர் என்பதும் இவ்வசனத்தில் இருந்து தெரிகிறது.
இவ்வசனத்தில் இருந்து பெறப்படும் இக்கருத்தை மனதில் பதிவு செய்து கொண்டு 144வது வசனத்தைப் பார்ப்போம்.

மதுரை புகைப்படங்கள்:- ஸ்தம்பித்து போன மதுரை மாநகரம் – அல்ஹம்துலில்லாஹ்

புகைப்படங்கள்:- ஸ்தம்பித்து போன சென்னை- அழைகடலென திரண்ட மக்கள் கூட்டம் – அல்ஹ்ம்துலில்லாஹ்!

ஸ்தம்பித்து போன சென்னை- அழைகடலென திரண்ட மக்கள் கூட்டம்! அல்ஹ்ம்துலில்லாஹ்!
ஜனவரி 27 பாபர் மஸ்ஜித் வழக்கின் அநியாயத்தீர்ப்பை கண்டித்து நடைபெற்ற போராட்டப் புகைப்படங்கள்
மேலும்படங்கள் மற்றும் களப்பதிவு காண இங்கே சொடுக்கவும் 

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y