அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Saturday, January 15, 2011

முன்மாதிரி முஸ்லிம் இல்லம்

கே.எம்அப்துந்நாசிர்
ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும்அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும்ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காககட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காதுஎலி வலையானாலும் தனி வலை வேண்டும்வீட்டை கட்டிப்பார்கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.
கொடும் வெப்பத்திலிருந்தும்ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது வீடு தான்அந்நியப் பார்வைகளை விட்டும் சுதந்திரமாக இருப்பதற்கும்மனைவியுடன் இன்பகரமான இல்வாழ்க்கை நடத்துவதற்கும் வசதியான இடம் வீடு தான்பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதற்குப் பாதுகாப்பான இடம் வீடு தான்ஒருவர் தன்னுடைய செல்வத்தினையும்பொருட்களையும் பாதுகாத்து வைப்பதற்குரிய சிறந்த இடம் தான் வீடுவெளி வாழ்க்கையில் இன்னலையும்சிரமங்களையும்கஷ்டங்களையும் தாங்கி வருவோர்க்கு நிம்மதி தரும் இடம் அவன் வசிக்கும் வீடு தான்.
வசிப்பதற்கு ஒரு வீடில்லாமல் தெரு ஓரங்களிலும்சாலை ஓரங்களிலும்பிளாட்பாரங்களிலும்மூலை முடுக்குகளிலும்குப்பை மேடுகளிலும்சாக்கடைகளுக்கு அருகிலும்ஆடுமாடுகளுடனும்தெரு நாய்களுடனும் தங்களுடைய வாழ்நாளைக் கழிக்கின்ற எத்தனையோ இலட்சம் மக்களை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம். இவர்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு இறைவன் செய்திருக்கும் அருளை உணர முடியும்.
இதோ வீடு எனும் அருளைப் பற்றி இறைவன் கூறுவதைப் பாருங்கள்:

உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான்கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான்உங்கள் பிரயாணத்தின் போதும்ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள்செம்மறி ஆட்டு ரோமங்கள்வெள்ளாட்டின் ரோமங்கள்ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும்குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்வசதிகளையும் ஏற்படுத்தினான்.
அல் குர்ஆன் 16:80

வாழ்வதற்கு வீடில்லாமல் தட்டழிந்து திரிவது இறைவனுடைய சோதனையாகும்.

யூதர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக இறைவன் அவர்களை வாழ்வதற்கு வீடில்லாமல் அவர்களை வீட்டை விட்டும் வெளியேற்றி தண்டனை வழங்கினான்.

அவனே வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனைமறுப்போரை அவர்களது இல்லங்களிலிருந்து முதல் வெளியேற்றமாக வெளியேற்றினான்அவர்கள் வெளியேறுவார்கள் என நீங்கள் எண்ணவில்லைதமது கோட்டைகள் அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காக்கும் என அவர்கள் நினைத்தனர்அவர்கள் எண்ணிப் பார்த்திராத வழியில் அவர்களை அல்லாஹ் அணுகினான்அவர்களது உள்ளங்களில் அச்சத்தை விதைத்தான்தமது கைகளாலும்,நம்பிக்கை கொண்டோரின் கைகளாலும் தமது வீடுகளை நாசமாக்கினார்கள்அறிவுடையோரே படிப்பினை பெறுங்கள்அவர்கள் வெளியேறுவதை அல்லாஹ் விதித்திருக்காவிட்டால் அவர்களை இவ்வுலகில் தண்டித்திருப்பான்மறுமையில் அவர்களுக்கு நரகின் வேதனை இருக்கிறதுஅவர்கள் அல்லாஹ்வையும்அவனது தூதரையும் பகைப்போராக இருந்ததே இதற்குக் காரணம்யார் அல்லாஹ்வைப் பகைக்கிறாரோ அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
 அல்குர்ஆன் 59:2-4

வீடில்லாமல் வாழ்வது மிகப் பெரும் சோதனை என்பதால் தான் அதனை அநியாயம் செய்த யூதர்களுக்கு இறைவன் தண்டனையாக விதித்தான்இதிலிருந்து ஒருவன் வாழ்வதற்குரிய வீட்டைப் பெற்றிருப்பது இறைவன் அவனுக்குச் செய்த மிகப் பெரும் பேரருள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இவ்வளவு சிறப்பு மிக்க வீடு என்னும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் அவ்வீட்டை சொர்க்கத்திற்கு வழிகாட்டும் வீடாக ஆக்க வேண்டாமா?
ஆம்நம்முடைய வீடு இறைத்தூதர் காட்டித் தந்த அடிப்படையில் அமைந்திருக்குமென்றால் அது நமக்கு சொர்க்க வீட்டைப் பெற்றுத் தரும்.
நம்முடைய வீட்டில் இறைத்தூதர் தடுத்த அம்சங்கள் நிறைந்திருக்கும் என்றால் அது நமக்கு நரக வீட்டைப் பெற்றுத் தரும்.
ஒரு முன்மாதிரி முஸ்லிம் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குரிய வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.
இறை நினைவில் இனிய இல்லம்

ஒரு முஃமினுடைய வீடு இறைவனை நினைவு கூரும் இல்லமாக இருக்க வேண்டும்அங்கு இறை வசனங்கள் ஓதப்பட வேண்டும்மார்க்கம் போதிக்கப்பட வேண்டும்.
உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும்ஞானத்தையும் நினையுங்கள்அல்லாஹ் நுணுக்கமானவனாகவும்,  நன்கறிந்தவனாகவும்இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:34

இறைவன் நினைவு கூரப்படும் இல்லத்திற்கும் இறை நினைவை இழந்த இல்லத்திற்கும் இறைத்தூதர் காட்டும் உவமையைப் பாருங்கள்.

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும்அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்அபூ மூசா (ரலி)
நூல்முஸ்லிம் 1429

இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் மையவாடியில் தொழுகை நடைபெறாதுஅங்கு குர்ஆன் ஓதப்படாதுமார்க்க ஞானங்கள் பேசப்படாதுஏனென்றால் அங்கு இருப்பவர்கள் இறந்தவர்கள்மண்ணோடு மண்ணாகி மக்கிப் போனவர்கள்.
நாம் உயிரோடு இருந்தும் நம்முடைய வீட்டில் இறைவன் நினைவு கூரப்படவில்லையென்றால்அங்கு மார்க்க ஞானங்கள் போதிக்கப்படவில்லை என்றால் நம்முடைய வீடும்கப்ருஸ்தானும் ஒன்று தான்ஒரு சிறிய வித்தியாசம் அங்கு உயிரிழந்தவர்கள் உள்ளார்கள்இங்கு உள்ளம் செத்தவர்கள் உள்ளார்கள்.
இன்று நம்முடைய வீடுகள் இறைவனை நினைவு கூரும் இல்லங்களாக உள்ளதாஅல்லது நரகத்திற்கு வழிகாட்டும் இல்லங்களாக உள்ளதாநாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நம்முடைய வீடுகளில் மார்க்கம் தடுத்த இசைப்பாடல்கள் தான் ஆடியோவீடியோக்களிலும்தொலைக்காட்சிகளிலும் எல்லா நேரங்களிலும் ஓங்கி ஒலிக்கின்றனஆபாசங்கள் நிறைந்த சினிமாக்களும்மூடநம்பிக்கைகளை போதிக்கும் தொடர்களும் தான் நம்முடைய வீட்டுத் தொலைக்காட்சிகளில் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கின்றனஇந்நிலையில் நம்முடைய வீடு இருந்தால் அது இறை நினைவை ஏற்படுத்துமாநம்முடைய பிள்ளைகள் இறையச்சமுடைய பிள்ளைகளாக உருவாவார்களா?
இன்றைக்கு அதிகமான பெண் குழந்தைகளும்ஆண் குழந்தைகளும் பருவ வயதை அடைவதற்கு முன்பாகவே காதல் என்ற போதையில் மூழ்குவதற்குக் காரணம் நம்முடைய வீட்டுச் சூழல் தான்அது இறை நினைவை மறக்கச் செய்து இறை மறுப்பின் வாசல்களை திறந்து விடக்கூடியதாக உள்ளது.

நம்முடைய வீடு இறை நினைவு நிறைந்த வீடாக இருக்க என்ன செய்யலாம்?
இதோ இறைத்தூதரின் வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.
வீட்டில் குர்ஆன் ஓதுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்உங்கள் இல்லங்களை (தொழுகைஓதல் நடைபெறாதசவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். "அல்பகராஎனும் (இரண்டாவதுஅத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)நூல்முஸ்லிம் 1430

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்உங்கள் வீடுகளிலே சூரத்துல் பகராவை ஓதுங்கள்எந்த வீட்டிலே சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அங்கே ஷைத்தான் நுழைய மாட்டான்.
அறிவிப்பவர்அப்துல்லாஹ் (ரலி)நூல்ஹாகிம் 2063

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஏட்டை எழுதினான்அந்த ஏட்டிலிருந்து இரண்டு வசனங்களை அருளினான்அந்த இரண்டைக் கொண்டு சூரத்துல் பகராவை முடித்தான்மூன்று இரவுகள் ஒரு வீட்டிலே அந்த இரண்டு வசனங்களும் ஓதப்படவில்லையென்றால் ஷைத்தான் அவ்வீட்டை நெருங்கியே தீருவான்.
அறிவிப்பவர்நுஃமான் பின் பஷீர் (ரலி)நூல்திர்மிதி 2807

மேற்கண்ட ஹதீஸ்கள் வீட்டில் குர்ஆன் ஓதுவதன் மூலம் நம்முடைய வீடுகளுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றனகுர்ஆன் ஓதப்படாத வீடுகள் சவக்குழிகளுக்குச் சமம் என்று நபி (ஸல்எச்சரிக்கை செய்துள்ளனர்மேலும் நம்முடைய வீடுகளில் குர்ஆன் ஓதுவதின் மூலம் ஷைத்தானுடைய வழிகேடுகளை விட்டும் நம்முடைய வீடுகளுக்கு இறைவன் பாதுகாப்பைத் தருகின்றான்நம்முடைய வீடு இறை நினைவு நிறைந்த வீடாக இருக்கும்.

சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறைவேற்றுதல்

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்உங்களது தொழுகைகüல் சிலவற்றை உங்களுடைய இல்லங்கüலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள்.
அறிவிப்பவர்இப்னு உமர் (ரலி)
நூல்புகாரி 432

நபி (ஸல்அவர்கள் "மக்களே! (உபரியான தொழுகைகளைஉங்கள் வீடுகüலேயே தொழுது கொள்ளுங்கள்ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும்ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்புகாரி 731

பெண்கள் கடமையான தொழுகைகளைப் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் சிறந்ததாகும் என நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்ஆண்கள் கடமையான தொழுகைகளைப் பள்ளியில் தான் தொழ வேண்டும்ஆனால் சுன்னத்தான தொழுகைகளைப் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது தான் மிகச் சிறந்ததாகும்.
மேலும் நம்முடைய வீட்டில் சுன்னத்தான தொழுகைகளைத் தொழுவதன் மூலம் நம்முடைய குழந்தைகள் அதனைப் பார்த்து அவர்களும் தொழுகை முறையை அறிந்து கொள்வதற்கும்தொழுகையின் பால் நாட்டம் கொள்தவற்கும் தோதுவானதாக அமையும்இதன் மூலம் நம்முடைய இல்லம் இறை நினைவு நிறைந்த வீடாக மாறும்.
வீட்டிலிருந்து ஷைத்தானை விரட்டும் இறை நினைவு

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால்ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கேதங்குமிடமும் இல்லைஉண்ண உணவுமில்லை'' என்று கூறுகிறான்ஒருவர் இல்லத்திற்குள்  நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது'' என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்து கொண்டீர்கள்'' என்று சொல்கிறான்.
அறிவிப்பவர்:  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்முஸ்லிம் 4106

வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்யார் தனது வீட்டிலிருந்து வெளியேறும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகின்றேன்அவனையே நான் சார்ந்திருக்கின்றேன்தீமையை விட்டு விலகுவதும்நன்மையைச் செய்ய ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வைக் கொண்டே தவிர வேறில்லைஎன்று கூறினால் அவனுக்கு "நீ போதுமாக்கப்பட்டு விட்டாய்,பாதுகாப்பு வழங்கப்பட்டு விட்டாய்'' என்று (இறைவன் புறத்திலிருந்துகூறப்படும்அவனை விட்டும் ஷைத்தான் விலகி விடுவான்.
அறிவிப்பவர்அனஸ் (ரலி)
நூல்திர்மிதி 3348

இரவு நேரங்களில் வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் அல்லது அந்திப் பொழுதாகி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெüயே திரியவிடாமல்தடுத்து விடுங்கள்ஏனெனில்ஷைத்தான்கள் அப்போது தான் (பூமியெங்கும்பரவுகின்றனஇரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்லவிட்டுவிடுங்கள்மேலும், (இரவு நேரத்தில்கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். (அப்போதுஅல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்ஏனெனில்ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லைஉங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள்உங்கள் விளக்குகளை அணைத்து விடுங்கள்.
அறிவிப்பவர்:  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (-)
நூல்புகாரி 5623

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்விட்டுவிடாதீர்கள்.
அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் உமர் (-)
நூல்புகாரி 6293

இன்று நம்முடைய வீடுகளில் நாம் தூங்கச் செல்லும் முன் கேஸ் அடுப்புகளை அணைத்துள்ளோமா,தேவையில்லாமல் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்துள்ளோமா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்இது நபிவழியும்நமக்குப் பாதுகாப்பும் ஆகும்.
வீட்டில் இசைக்கருவிகள் மற்றும் இசைப்பாடல்கள்
இன்றைக்குப் பெரும்பாலான வீடுகளில் இசைக்கருவிகளில் இசைப்பாடல்கள் ஓங்கி ஒலிக்கின்றனஇதில் இஸ்லாமியப் பாடல்கள்சினிமாப்பாடல்கள் என்ற வித்தியாசமில்லைஇசையுடன் கூடிய அனைத்துப் பாடல்களும் இசைப்பாடல்கள் தான்இவை மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்டவையாகும்.
இந்த இசைக்கருவிகள் நம்முடைய வீடுகளில் இருந்தால் இசைப்பாடல்கள் நம்முடைய வீடுகளில் ஒலித்துக் கொண்டிருந்தால் அங்கு இறைவனின் அருளைச் சுமந்து வரும் மலக்குமார்கள் வருகை தர மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்நாயும் மணியோசையும் உள்ள பயணிகளுடன் (அருள்வானவர்கள் வர மாட்டார்கள்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)
நூல்முஸ்லிம் 4294

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்ஒலியெழுப்பும் மணிஷைத்தானின் இசைக் கருவியாகும்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)
நூல்முஸ்லிம் 4295

இசைக்கருவி பயணக்கூட்டத்தாரிடம் இருக்கின்ற காரணத்தினால் தான் மலக்குமார்கள் அவர்களுடன் வருதில்லைஅதே இசைக்கருவி நம்முடைய வீடுகளில் இருந்தாலும் அங்கு மலக்குமார்கள் வரமாட்டார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

வீட்டில் உருவப்படங்கள் மற்றும் நாய்கள்
இன்றைக்குப் பெரும்பாலான முஸ்லிம் வீடுகளில் உருவப்படங்களை மாட்டி வைத்துள்ளனர்இறந்து விட்ட தாய்,தந்தையர்கள் மற்றும் முன்னோர்களின் உருவப்படங்களை மாட்டி வைப்பதைப் பெருமையாக நினைக்கின்றனர்அல்லது பரக்கத்திற்காக ஏதேனும் பெரியாரின் படத்தை வைத்துள்ளனர்மேலும் வீட்டின் அழகிற்கென விலங்கினங்களின் படங்களையும் மாட்டி வைத்துள்ளனர்.
மேலும் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை ஒருவர் முத்தமிடுவது போன்ற படங்களும் "புராக்வாகனம் என்ற பெயரில் பெண் முகவடிவத்தைக் கொண்ட இறக்கைகளை உடைய குதிரை உருவங்களையும் சில வீடுகளில் தொங்க விட்டுள்ளனர்.

நம்முடைய வீடுகளில் இந்த உருவப்படங்கள் மற்றும் நாய்கள் இருப்பதன் மூலம் நம்முடைய வீட்டிற்கு இறைவனுடைய அருளைச் சுமந்து வரும் மலக்குமார்கள் வருகை தர மாட்டார்கள்மேலும் இதற்காக மறுமையில் மிகப் பெரும் தண்டனைகளும் உள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்நாயும் (உயிரினங்கüன் சிலைகள் அல்லதுஉருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர்அபூ தல்ஹா (ரலி),
நூல்புகாரி 3225

ஆயிஷா (ரலிஅவர்கள் கூறியதாவதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோதுஎனது வீட்டு வாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்க விட்டிருந்தேன்அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தனஉடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் அதை (அகற்றுமாறுஉத்தரவிடஅவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன்.
நூல்முஸ்லிம் 4281

வீட்டில் உருவப்படங்களும் நாய்களும் இருப்பது எவ்வளவு பயங்கரமான பாவம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்
ஆயிஷா (ரலிஅவர்கள் கூறியதாவது: (வானவர்ஜிப்ரீல் (அலைஅவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களிடம் ஒரு (குறிப்பிட்டநேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள்ஆனால்அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களது கையில் குச்சியொன்று இருந்ததுஅதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, "அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான்அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்குமாறு செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்பின்னர் திரும்பிப் பார்த்தபோதுதமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.
உடனே "ஆயிஷாஇந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள்நான், "அல்லாஹ்வின் மீதாணையாகஎனக்குத் தெரியவில்லை'' என்றேன்உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள்அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலைஅவர்கள் வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள், "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள்உங்களுக்காக நான் (எதிர்பார்த்துஅமர்ந்திருந்தேன்ஆனால்நீங்கள் வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்டார்கள்.
அதற்கு ஜிப்ரீல் (அலைஅவர்கள், "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகியநாங்கள்நாயும் உருவப் படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்'' என்று சொன்னார்கள்.
நூல்முஸ்லிம் 4272

அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரஹ்அவர்கள் அறிவிக்கிறார்கள்நான் அபூஹுரைரா (ரலிஅவர்களுடன் (மதீனாவின் ஆளுநர்மர்வான் பின் அல்ஹகமின் வீட்டுக்குச் சென்றேன்அங்கு அபூஹுரைரா (ரலிஅவர்கள் உருவப் படங்கள் சிலவற்றைக் கண்டார்கள்.
அப்போது "எனது படைப்பைப் போன்று படைக்கத் தயாராகி விட்டவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்அவ்வாறாயின் அவர்கள் ஓர் உயிரணுவைப் படைத்துக் காட்டட்டும்அல்லது ஒரு தானிய வித்தைப் படைத்துக் காட்டட்டும்அல்லது கோதுமை வித்தைப் படைத்துக் காட்டட்டும் என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்'' என்றார்கள்
நூல்முஸ்லிம் 4292

ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக்கொண்டுஎன்னிடம் வந்தார்கள்அப்போது நான் (வீட்டு வாசலைஉருவப் படம் உள்ள திரைச் சீலையால் மறைத்திருந்தேன்அதைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களது முகம் நிறம் மாறிவிட்டதுஅந்தத் திரைச் சீலையை எடுத்துக் கிழித்து விட்டார்கள்.
பிறகு "மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோரில்அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைக்( நினைக்)கின்றவர்களும் அடங்குவர்'' என்று சொன்னார்கள்.
நூல்முஸ்லிம் 4282

வீட்டில் உருவப்படங்கள் பொறித்த திரைச்சீலைகளைத் தொங்க விடுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்அதே நேரத்தில் மதிப்பில்லாத வகையில் பயன்படுத்தும் வகையில் அந்த உருவங்கள் வீட்டில் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது.

நம்முடைய வீடுகளில் செய்தித்தாள்கள் கிடக்கின்றனஅவற்றில் உருவப்படங்கள் இருக்கத்தான் செய்யும்ஆனால் நாம் அதிலுள்ள செய்திகளைப் படித்தவுடன் அதிலுள்ள உருவப்படங்களை மாட்டி வைப்பதோ கண்ணியப்படுத்துவதோ கிடையாதுஅந்த செய்தித்தாள்களை மதிப்பற்ற முறையில் தான் பயன்படுத்துகின்றோம்நாம் சாப்பிடும் போது அவற்றை விரிப்பாக பயன்படுத்துகின்றோம்பல்வேறு விஷயங்களுக்காக அந்த செய்தி பேப்பர்களை கிழித்து விடுகின்றோம்ஒரு செய்திப் பேப்பரை பத்திரப்படுத்தினால் கூட அந்தச் செய்திக்காகத் தானே தவிர அதிலுள்ள உருவப்படத்தை கண்ணியப்படுத்துவதற்காக அல்லஇது போன்று மதிப்பில்லாத வகையில் பயன்படுத்தும் வண்ணம் உருவங்கள் நம்முடைய வீடுகளில் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாதுஇதனை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நான் எனது அலமாரி (நிலைப் பேழைஒன்றின் மீது (மிருகங்கüன்உருவங்கள் (வரையப்பட்டுஇருந்த ஒரு திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன்அதை நபி (ஸல்அவர்கள் கிழித்து விட்டார்கள்.  ஆகவேஅதி-ருந்து நான் இரு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன்.  அவை வீட்டில் இருந்தன.  அவற்றின் மீது நபி (ஸல்அவர்கள் அமர்வார்கள்.
நூல்புகாரி 2479

அந்த மெத்தை இருக்கைகளில் அந்த உருவப்படங்கள் இருந்ததாக பின்வரும் ஹதீஸில் வந்துள்ளது.

ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நபி (ஸல்அவர்கள் பயணத்திலிருந்து திரும்பினார்கள்நான் உருவப்படமுள்ள ஒரு திரைச் சீலையை விலைக்கு வாங்கி எனது வீட்டிலுள்ள அலமாரி ஒன்றின் மீது திரையாக தொங்கவிட்டிருந்தேன்நபியவர்கள் (வீட்டிற்குள்நுழைந்த போது நான் செய்திருந்ததை வெறுத்தார்கள். "ஆயிஷாவே,சுவர்களை நீ மறைக்கின்றாயா?'' என்று கேட்டார்கள்உடனே நான் அதைக் கழற்றி விட்டேன்அதனைக் கிழித்து நபியவர்கள் கைவைத்து சாய்ந்திருப்பதற்குரிய இரண்டு தலையணைகளாக ஆக்கினேன்அதில் உருவங்கள் இருக்கும் நிலையிலேயே அந்த இரண்டு தலையணைகளில் ஒன்றிலே நபியவர்கள் சாய்ந்து இருந்ததை நான் பார்த்திருக்கின்றேன்.
நூல்அஹ்மத் 24908

மேலும் வீடுகளில் தொங்க விடப்படும் திரைச்சீலைகளில் மிகச் சிறிய அளவில் உருவப்படங்கள் இருந்தாலும் மார்க்கத்தில் குற்றமாகாதுஇதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

புஸ்ர் பின் சயீத் (ரஹ்அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறைஸைத் பின் கா-த் (ரலிஅவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள்அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம்அப்போது நாங்கள் அவர்களுடைய வீட்டில் ஒரு திரைக்கு அருகே அமர்ந்திருந்தோம்அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப் பட்டுஇருந்தனஆகவேநான் (என்னுடன் இருந்தஉபைதுல்லாஹ் அல் கவ்லானீ அவர்கüடம், "இவர்கள் (ஸைத் (-) அவர்கள்நமக்கு உருவங்களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்கவில்லையா?'' என்று கேட்டேன்அதற்கு அவர்கள், "ஆம்ஆனால்ஸைத் (-) அவர்கள் (அதை அறிவிக்கும் போது)  துணியில் பொறிக்கப் பட்டதைத் தவிர என்று நபி (ஸல்அவர்கள் கூறியதாகச் சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?'' என்று கேட்டார்கள்நான், "கேட்கவில்லை''என்றேன்அதற்கு அவர்கள், "ஆம்அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்'' என்று கூறினார்கள்.
நூல்புகாரி 3226

துணியில் பொறிக்கப்பட்டது என்ற வார்த்தைதுணியில் வரையப்பட்ட மிகச் சிறிய அளவிலான உருவப்படங்களைக் குறிப்பதாகும்.
மேலும் குழந்தைகள் விளையாடுவதற்குரிய பொம்மை உருவங்களை வீடுகளில் வைத்திருப்பதும் மார்க்கத்தில் குற்றமாகாதுஇதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்தபூக் அல்லது கைபர் யுத்தத்திலிருந்து (வீட்டிற்குமுன்னோக்கினார்கள். (ஆயிஷா (ரலி)) அவர்களின் அலமாரியின் மீது ஒரு திரைச் சீலையிருந்தது. (அதில் ஆயிஷாவிற்குரிய பெண் குழந்தைகளின் உருவம் கொண்ட விளையாட்டுப் பொம்மைகள் இருந்தன.) அப்போது காற்றடித்து ஆயிஷாவின் விளையாட்டுப் பெண் குழந்தை பொம்மைகளை விட்டும் திரைச்சீலையின் ஒரு ஓரத்தை விலக்கியதுஅப்போது நபியவர்கள், "ஆயிஷாவே இது என்ன?'' என்று கேட்டார்கள்என்னுடைய பெண் குழந்தைகள் என்று அவர் கூறினார்அவைகளுக்கு மத்தியில் இலை அல்லது தோலால் ஆன இரு இறக்கைகளைக் கொண்ட ஒரு குதிரையை நபியவர்கள் பார்த்தார்கள்உடனே நபியவர்கள், "அவைகளுக்கு மத்தியில் நான் காண்கின்றேனேஅது என்ன?'' என்று கேட்டார்கள்அதற்கவர்குதிரை என்று கூறினார். "அதன் மீது என்ன?'' என்று நபியவர்கள் கேட்டார்கள். "இரண்டு இறக்கைகள்'' என்று ஆயிஷா (ரலிபதில் கூறினார்கள். "குதிரைக்கு இரண்டு இறக்கைகளா?'' என்று நபியவர்கள் கேட்டார்கள்அதற்கு ஆயிஷா (ரலிஅவர்கள், "சுலைமான் நபிக்கு குதிரை இருந்ததாகவும் அதற்கு இறக்கைகள் இருந்ததாகவும் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?'' என்று கேட்டார்கள்உடனே நபியவர்கள் தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்அபூதாவூத் 4284

நபியவர்களின் வீட்டிலேயே அலமாரியில் குழந்தைகள் விளையாடும் உருவப் பொம்மைகள் இருந்துள்ளனநபியவர்கள் அதனைக் கண்டிக்கவில்லைஎனவே நம்முடைய வீடுகளில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொம்மைகளை வைத்திருப்பதில் தவறு கிடையாது.
மேற்கண்ட மார்க்க நெறிமுறைகளைத் தெரிந்து நம்முடைய இல்லங்களை முன்மாதிரி முஸ்லிம் இல்லங்களாக மாற்றி மறுமையில் சுவன வீட்டை அடைவோமாக

கே.எம்அப்துந்நாசிர்
ஏகத்துவம் மாதஇதழ் 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y