சென்னை, ஜன. 21-
அகில இந்திய அளவில் கூடுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் 23.1.2011 அன்றும், இரண்டாவது தவணை 27.2.2011 அன்றும் நடைபெறவுள்ளது.
சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 5 இலட்சம் குழந்தைகளுக்கு மேல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1126 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலியோ நோயை அடியோடு ஒழிக்க வேண்டுமானால் பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள சொட்டு மருந்து மையத்திற்குச் சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளப்பட வேண்டும். சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்தவுடன் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது. இதனால் எந்தவிதமான தீமையும் இல்லை.
ஆகவே, அனைத்துக் குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து ஒரே நாளில் போட்டுக் கொள்வதன் மூலம், சுற்றுச்சூழலிலிருந்து கொடிய போலியோ கிருமியை முற்றிலுமாக நீக்கி, போலியோ நோயை அறவே ஒழிக்க முடியும்.
குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முறையாக கொடுத்திருந்தாலும் 23.1.2011 அன்று நடைபெறும் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் அவசியம் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள வேண்டும்.
முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்து வழக்கமான தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்திற்கு மாற்று மருந்து அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும். முதல் தவணை போலியோ சொட்டு மருந்து 23.1.2011 அன்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், சொட்டு மருந்து மையங்கள், அரசு மருத் துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பொருட்காட்சி அரங்கம், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சொட்டு மருந்து மையங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, புறநகர் பேருந்து நிலையங்களில் 24 மணி நேரம் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம் காரணமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப் பவர்கள் இந்த நாளில் அதாவது 23.1.2011 அன்று தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அது மட்டுமின்றி 23.1.2011 அன்று சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம். போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி இடை வெளியின்றி மாலை 5.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.
சொட்டு மருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன் வாடி அலுவலர்கள், மாநக ராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 5000 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெற்றோர்களாகிய நீங்கள், 5 வயதிற்குட்பட்ட உங்கள் அனைத்து குழந்தை களுக்கும் தவறாமல் அவசியம் 23.1.2011 அன்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து, பொல்லாத போலியோவை இல்லாமல் செய்வதற்கு பாடுபடுவோம். தியாகராய நகர், மாநக ராட்சி நலவாழ்வு நிலையத்தில் மேயர் மா.சுப்பிரமணியன் முதல் தவணை போலியோ சொட்டு மருந்தினை குழந்தை களுக்கு வழங்குவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment