புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதையடுத்து, பெட்ரோல் விலையை பாரத் பெட்ரோலிய பொதுத்துறை நிறுவனம் லிட்டருக்கு ரூ.2.95 உயர்த்தியது. இந்த விலை உயர்வு 14.12.2010 நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 59.92 ஆகா இருக்கும்
அடுத்த இரு நாளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனமும் விலை உயர்வை முறைப்படி அறிவிக்கும்.
சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு தகுந்தாற்போல், எண்ணெய் நிறுவனங்களே, பெட்ரோல் விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால், கடந்த ஜூன் மாதம் முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலை பேரலுக்கு 90 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதனால், இந்த வாரத்தில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்படலாம் என்ற பேச்சு நேற்று காலையில் அடிபட்டது.
அதை உறுதி செய்யும் வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில் ,"பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. இதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.90 முதல் ரூ.1.95 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.' என்றார். ஆனால் அவர் எப்போது அமலுக்கு வரும் என்று கூறவில்லை.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4.17 வரை இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டது.
இதனிடையே பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான, பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நேற்றிரவு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.95 உயர்த்தியது. இதையடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ( ஐ.ஓ.சி) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ( எச்.பி) ஆகிய இரு நிறுவனங்களும் அடுத்த இரு நாட்களில் பெட்ரோல் விலை உயர்வு எவ்வளவு என்று அறிவிக்கும் என்று கூறப்பட்டது. நிச்சயமாக இந்த நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ2.50க்கு மேல் உயர்த்தலாம் என்று கூறப்பட்டது.
மேலும், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக, வரும் 22ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் ஆலோசிக்க உள்ளது. சந்தை விலையைஅனுசரித்து பெட்ரோலைப் போல டீசலும் விலை உயர்த்தப்படும் அபாயமும் இதனால் அதிகரித்திருக்கிறது.
No comments:
Post a Comment