Saturday, June 30, 2012
வெளிச்சத்திர்க்கு வரும் காவி முகம்!
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, June 30, 2012
0
comments


Labels:
காவிக்கும்பல்
"லண்டன் பள்ளியில் குட்டைப் பாவாடைக்குத் தடை "
லண்டனில் உள்ள பிரபலமான பள்ளியில் மாணவர்களின்
குட்டைப் பாவாடை சீருடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .
பிரிட்டனின் நார்த்தாம்டன்ஷயரில் மவுல்டன் அறிவியல் பள்ளி
உள்ளது. இங்கு 11 வயது முதல் 18 வயது வரையுள்ள 1,300 மாணவ ,
மாணவியர் படிக்கின்றனர் .
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டிரிவோர் ஜோன்ஸ் கூறியதாவது :
எங்கள் பள்ளி மாணவியருக்கு முன்பு பாவாடை சீருடையாக இருந்தது.
முழங்கால் வரை இந்த பாவாடை இருக்க வேண்டாம் .
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Saturday, June 30, 2012
0
comments


Labels:
செய்தி
Wednesday, June 27, 2012
சுகாதாரத்துறை அளித்த விளக்கம் சரியா? -ஒரு விரிவான அலசல்!
விளக்கம் என்ற பெயரில் ம.ம.கவின் முகத்தில் கரி பூசிய சுகாதாரத்துறை :
இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது என்று தவ்ஹீத் ஜமாஅத் குற்றம்சாட்டி போராட்டத்தில் இறங்க, மற்ற முஸ்லிம் அமைப்புகளும் இந்த துரோகத்தை பெயரளவில் கண்டிக்க, ம.ம.கட்சியும் தடாலடியாக கணடன அறிக்கை வெளியிட என்று தமிழக அரசியல் களம் சூடு பறந்தது.
ஆரம்பத்தில் முஸ்லிம்கள் திட்டமிட்டு வஞ்சிங்கப்பட்டுவிட்டார்கள்; புறக்கணிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கண்டன அறிக்கை வெளியிட்ட ம.ம.கட்சியினர் பிறகு அந்தர்பல்டி அடித்து இடஒதுக்கீட்டில் துரோகம் நடக்கவில்லை என்று தமிழக அரசுக்கு முட்டுக்கொடுத்தனர். தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தினர்.
இந்த விஷயத்தில் ம.ம.கட்சியினர் செய்த துரோகத்தைக் கண்டித்து மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டத்தை 24.06.12 ஞாயிறன்று நடத்தவுள்ளோம் என்று கடந்த 22.06.12 வெள்ளிக்கிழமை அன்று அறிவிப்பு நாலாபுறமும் பறக்க ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கப்போகின்றது என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்த பரபரப்பான நேரத்தில், இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவித்த 24.06.12 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11மணியளவில், இந்த ஒப்பந்த மருத்துவர்கள் தேர்வை பொறுப்பேற்று நடத்திய தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, இது குறித்த ஒரு அறிக்கையை அன்றைய மாலை நேர பதிப்பாக வெளிவரக்கூடிய இதழ்களில் வெளியிட்டு மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Wednesday, June 27, 2012
0
comments


Labels:
சமுதாய பிரச்னை
காத்திருக்கும் பேராபத்து? பெற்றோர்களே கவனம்!
நம்பிக்கை
கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக்
கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு
அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்(அல்குர்ஆன் 66.6)
சமீபகாலமாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடக்கூடாத சில நிகழ்வுகள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது அது முஸ்லிம் மாணவிகளை குறிவைத்து அரங்கேற்றும் சதிச்செயல்தான் குறிப்பாக சில கல்வியில் முன்னேறிய மாவட்டங்களாக சொல்லப்படும் அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் இந்த சதி வேலை கொடி கட்டிப்பறக்கிறது
கடந்த
வாரம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை சித்திரை மகாராஜபுரம் என்ற ஊரைச் சேர்ந்த நாடார் இனத்தை சார்ந்த ரமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனர் சிலரால்
கொலை செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது ரமேஷ் என்ற சங்க்பரிவாரதால்மூளைச்சலவவை
செய்யப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தயார் படுத்தப்பட்ட இவண் இரண்டு வருடங்களுக்கு முன்பு நிஷா என்ற முஸ்லிம் மாணவியை காதலித்து
திருமணம் செய்து கொண்டுள்ளான் அவளும் அவனின் மதத்தையே பின்பற்றி வாழ்ந்தே வந்திருக்கிறாள் அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது நிஷாவிற்க்கு ஒரு அண்ணன் இருக்கிறார் ஆரம்பத்தில் அவளின்
திருமணத்தை எதிர்த்த அவளின் பெற்றோர் நாளடைவில் தனது மகளுடன் இணைத்து
கொண்டுள்ளார்கள்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Wednesday, June 27, 2012
0
comments


Labels:
சமுதாயம்
Friday, June 22, 2012
பாவத்தைக் கழுவும் தொழுகை!
உங்கல் ஒருவரது வாசல் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலிலுள்ள) அழுக்குகல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்? என்று கேட்டார்கள். அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது என்று மக்கள் பதிலளித்தார்கள். இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்;இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Friday, June 22, 2012
0
comments


Labels:
மார்க்கம்
Thursday, June 21, 2012
ஏமாற்றும் முஸ்லிம் கட்சிகள்? ஏமாளிகள் நாங்கள் இல்லை!
முஸ்லிம்களை வஞ்சிப்பதற்கு மோடியோ அத்வானியோ தேவையில்லை என்கிற அளவிற்கு தமிழக முஸ்லிம் கட்சிகளின் சமுதாய துரோகத்திற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது சென்ற திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு வழங்கிய 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகாரிகள் சரியாக வழங்காமல் வஞ்சித்து வந்தனர் அதை பல்வேறு வழிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அப்போதைய ஆளும் அரசுக்கு கொண்டு சென்றது .
அதே நேரத்தில் சமுதாயத்தை முன்னேற்ற போகிறோம் என்று கியம்பிய ஒரு கூட்டம் முஸ்லிம்களுக்கு அரசு அதிகாரிகள் துரோகம் இளைத்தது சரிதான் என்கிற அளவிற்கு முஸ்லிம்களின் முதுகில் குத்தினார்கள் ஆளும் அரசுக்கு சாதகமாக ஜால்ரா தட்டினார்கள் அப்படிப்பட்ட இவர்களின் சமுதாய துரோகத்தையும் தவ்ஹீத் ஜமாஅத் மக்களின் முன் கொண்டு சென்றது .
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Thursday, June 21, 2012
0
comments


Labels:
சமுதாய கட்சிகள்
Monday, June 18, 2012
சமுதாய சிந்தனை இல்லாத சுயநல அரசியல் வாதிகள்!
சமுதாய மக்களின் உரிமைகளுக்காக வீதியில் நின்று குரல் எழுப்பினால் அது செவிடன் காதில் ஊதிய சங்காய்அமையும்> சட்டமன்றத்தில் குரல் கொடுத்தால் தான் செவிட்டில் அறைந்தால் போல் விழும் என்பதால் மாபெரும்மக்கள் பேரியக்கமாகிய தமுமுகவை அரசியல் அமைப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்று இப்போதைய தமுமுககாரர்கள் அப்போதுக் கூறியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
தமுமுகவினர் சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கு தடையாக இருப்பது தவ்ஹீத் பிரச்சாரம் தான் என்று பகிரங்கமாக்கூறி தவ்ஹீத் பிரச்சார அறிஞர்களை வெளியேற்றி விட்டு சமுதாயப் பேரியக்கத்தை தங்களுக்கு ஓட்டுப் பிச்சைஎடுக்கும் சுயநல இயக்கமாக மாற்றிக் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் இரண்டு பேர் மட்டும் சட்ட மன்றத்திற்குள்நுழைந்தனர்.
சொன்னது என்னாச்சு ?
இவர்களுக்கு ஆதரவளித்த அதிமுக தனது ஓராண்டு சாதனையை(?) நூறாண்டு சாதனையாக பட்டியலிட்டது.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, June 18, 2012
0
comments


Labels:
சமுதாய தலைவர்கள்
Thursday, June 14, 2012
ஜெ அரசின் பச்சை துரோகத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டம்! கலைஞர்டிவி,புதியதலைமுறை,சன்,செய்தி வீடியோ இனைப்பு!
சென்னையில் ஆயிரம் விளக்கு மசுதி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 2 நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட முற்றுகைப் போராட்டம் என்றாலும் ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு கோஷங்களை முழங்கி தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர் அல்ஹம்துலில்லாஹ் மாநில செயலாளர் முஹம்மது யூசுப் கண்டன உரை ஆற்றினார்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Thursday, June 14, 2012
0
comments


Labels:
இயக்கம்
Wednesday, June 13, 2012
பச்சை துரோகத்திற்கு எதிராக மாபெரும் முற்றுகைப் போராட்டம் நேரடி ஒளிபரப்பு இன்ஷா அல்லாஹ்!
மார்ச் மாதம் 1346 பயிற்சி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1346 பேரில் ஒரே ஒரு முஸ்லிமுக்குக் கூட வேலை அளிக்கப்படவில்லை.3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்குக் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் இதற்கு நிகரான பச்சைத் துரோகம் வேறு இருக்க முடியாது. இந்த அநியாயத்தைக் கண்டித்து மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் நடத்துகிறது.14 ஆம் தேதி வியாழன்[நாளை] காலை11 மணிக்கு நடக்கும் சிறை செல்லும் இப்போராட்டம் இன்ஷா அல்லாஹ் ஆன்லைன்பிஜேயில் நேரடியாக இங்கே ஒளிபரப்பு செய்யப்படும்
பச்சை துரோகம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1346 பேரில் ஒரே ஒரு முஸ்லிமுக்குக் கூட வேலை அளிக்கப்படவில்லை.3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்குக் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் இதற்கு நிகரான பச்சைத் துரோகம் வேறு இருக்க முடியாது. இந்த அநியாயத்தைக் கண்டித்து மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் நடத்துகிறது.14 ஆம் தேதி வியாழன்[நாளை] காலை11 மணிக்கு நடக்கும் சிறை செல்லும் இப்போராட்டம் இன்ஷா அல்லாஹ் ஆன்லைன்பிஜேயில் நேரடியாக இங்கே ஒளிபரப்பு செய்யப்படும்
பச்சை துரோகம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Wednesday, June 13, 2012
0
comments


Labels:
சமுதாய பிரச்னை
Monday, June 11, 2012
ஜெ அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை! டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம் முற்றுகை!
தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.
நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Monday, June 11, 2012
0
comments


Labels:
சமுதாய பிரச்னை
Friday, June 08, 2012
குர்ஆனில் விளையாடிய போலி சுன்னத் ஜமாஅத்!

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
சில தினங்களுக்கு முன்னால் கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை சார்பில் ஒரு நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அந்த நோட்டீஸில் பெண்கள் பள்ளிக்கு சென்று ஜமாத் தொழுகையில் கலந்து கொள்வது ஹராமான செயல் என்றும் எனவே பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாது என்றும் போலி சுன்னத் வல்ஜமாத்தினர் கூறியிருந்தனர்.
தங்கள் நிலைபாட்டை நிரூபிப்பதற்காக மார்க்க ஆதாரங்களை மறைத்து திரித்துக் கூறுவதில் இவர்கள் யூத நஸாராக்களை மிஞ்சிவிட்டனர். தன்னுடைய சொந்த சரக்கை அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுவதும் அல்லாஹ் கூறிய சட்டத்தை மக்களிடத்தில் கூறாமல் மறைப்பதும் யூத நஸாராக்களின் கேடுகேட்ட செயலாகும்.
போலி சுன்னத் ஜமாஅத்தினர் அந்த நோட்டீஸில் இந்த இழிசெயலைச் செய்து தாங்கள் சுன்னத் ஜமாத்தினர் இல்லை. சுன்னத்துக்கு (நபிவழிக்கு) எதிரானவர்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இவர்களை சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று சொல்லாமல் பித்அத் ஜமாஅத்தினர் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது.
பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுகையில் கலந்துகொள்வது நபிவழி என்பதையும் இதற்கு எதிராக பித்அத் ஜமாத்தினர் வைக்கும் வாதங்களுக்கு சரியான விளக்கத்தையும் இந்த பிரசுரத்தின் வாயிலாக நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Friday, June 08, 2012
0
comments


Labels:
பித்அத் ஜமாஅத்
Tuesday, June 05, 2012
தடம்புரண்ட தவ்ஹீத் ஆலிம்!
வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். அல் குர்ஆன் 3:144
ஹாமித்பக்ரி ஏகத்துவவாதிகள் அவ்வளவு சீக்கிரம் இவரை மறந்திருக்கமாட்டார்கள் தவ்ஹீத்வாதிகளுக் கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் ஒரு காலத்தில் தமிழகமெங்கும் தவ்ஹீத் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் இன்று இவரின் நிலையை பார்த்தால் நம்மை அறியாமல் நமது உள்ளத்தில் சிறு வலி ஏற்படுகிறது காரணம் ஆரம்ப கால கட்டத்தில் இந்த தவ்ஹீதுக்காக உழைத்தவர்களில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது ஆனால் இன்று அப்படி பாடுப்பட்டு அடிபட்டு உதைபட்டு வளர்த்த தவ்ஹீதை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார் இந்த முன்னால் தவ்ஹீத்வாதி!
ஹதீஸ்களை தேடி எடுக்கும் லாவகம் என்ன அவரின் நினைவாற்றல் என்ன எந்த பிரச்சினைக்கும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மிகவும் எளிமையாக பதில் அளிக்கும் திறமை என்ன அணைத்து தவ்ஹீத் ஜமாத்திற்கு மாநில தலைவராக இருந்தவர் இப்படி பல சிறப்புகள் பெற்ற ஒருவர் இன்று கப்ர் வணங்கிகளுக்கும் பித்அத்வாதிகளுக்கும் மத்ஹப் வாதிகளுக்கும் பிரசார பீரங்கியாக மாறிவிட்டார்.
Posted by
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு (TNTJ YANBU) தொடர்புக்கு:tntjyanbu.blogspot@gmail.com
at
Tuesday, June 05, 2012
1 comments


Labels:
பித்அத் ஜமாஅத்
Subscribe to:
Posts (Atom)