அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, November 29, 2012

துப்பாக்கி படமும் சறுக்கும் சமுதாய தலைவர்களும்?

சென்ற தீபாவளியன்று வெளியான துப்பாக்கி என்ற திரைப்படம் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது அதில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் அப்பட்டமாக முஸ்லிம்களுக்கு எதிராகவும் சமூக ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாகவும் முஸ்லிம் அனைவரையும் தீவிரவாதிகளாகவும் காட்ட வேண்டுமென்றே திட்டமிட்டே திரைப்படம் எடுத்துள்ளனர் . 

இந்த ஈனச்செயலை தமிழக முஸ்லிம் சமுதாய இயக்ககங்கள்  அனைத்தும் ஒட்டுமொத்தமாக கண்டித்தன இந்த படத்தை மக்கள் பார்ப்பதற்கு முன்பே அந்த திரைப்படத்தை தடுத்து நிறுத்திவிடவேண்டும் என அணைத்து இயக்கங்களும் எண்ணின இதனை அடுத்து பத்தொன்பது தமிழக முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழக காவல்துறை அதிகாரியிடமும் அதனைத் தொடர்ந்து தமிழக அரசிடமும்  இத்திரைப்படம் முஸ்லிம்களின் உண்மையான கொள்கைக்கு  எதிரானது இதை திரையிடுவதை தடுக்கவேண்டும் என்று மனுக்கொடுதனர்.

Saturday, November 24, 2012

பால்தாக்ரே சாவும் இந்திய ஊடகமும்?


மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, நாட்டைத் துண்டாடி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த இந்திய நாட்டில் இரத்த ஆறு ஓட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழக்கக் காரணமாக இருந்தவர் மதவெறி பிடித்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே.


இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் போலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர்.

பால்தாக்கரே என்ற இவர் தலைமையேற்று நடத்திய கலவரங்கள் கொஞ்ச நஞ்சமா? அதையெல்லாம் இந்த ஊடகங்கள் மறந்துவிட்டனவா?

மக்களை நேசித்த தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யான்பு கிளை சார்பாக ஆன்லைன் பயான் 23.11.2012  வெள்ளியன்று நடைபெற்றது அதில் தாயகத்திலிருந்து சகோ.முஹம்மது ஒலி MISC  அவர்கள் மக்களை நேசித்த தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ற தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள் மேலும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்கள்.

Wednesday, November 21, 2012

முஸ்லிம்களை சீண்டும் கூத்தாடிகளின் கொட்டத்தை ஒடுக்குவது எப்படி?

துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகுதான் இது குறித்து நமக்கு தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சித்தரித்துள்ளார்கள் என்பதை நாம் இன்று வரை பார்க்கவில்லை. ஆனாலும் பல சகோதரர்கள் அதைப் பார்த்து அந்தப் படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையே பயங்கரவாதிகளாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளராகவோ காட்டியுள்ளது என்று தெரிவித்தனர்.

அப்படியானால் எங்கும் அந்தப் படத்தை திரையிட முடியாத அளவுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று 15 – 11- 12 அன்று கூடிய அவசர நிர்வாகக் குழுவில் முடிவுசெய்யப்பட்டது.

20.11.12 – செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளையும் முற்றுகையிட்டு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக தினந்தோறும் முற்றுகை இடுவது எனவும் தீர்மானித்து காவல்துறையிலும் 15 ஆம் தேதி அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.

Sunday, November 18, 2012

மனிதகுல வழிகாட்டி நபி (ஸல்) அவர்கள்




Friday, November 16, 2012

ஆஷூரா நோன்பின் நோக்கமும் ,சிறப்பும் !


நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 1592

Wednesday, November 07, 2012

சாதிய தலைவர்களின் விழாவும் சேதப்படுத்தப்படும் மக்கள் சொத்தும்?

சிலகாலமாக அடங்கியிருந் தென்மாவட்ட சாதிக் கலவரம் கடந்த இரண்டு வருடவங்களாக மீண்டும் தலை தூக்கியுள்ளது   இதற்கு முதல் காரணம் என்ன என்று பாமர மக்களிடம் கேட்டாலும் உடனே பதில் வரும் இதற்கு முதல் முக்கிய காரணம் அரசின் கையாளாகதனம் தான் என்று ஒட்டுப்பொறுக்கும் இந்த அரசியல்வாதிகளால் இன்று தென்மாவட்ட மக்கள் ஒருவித அச்ச உணர்வுடனேயே வாழ்கின்றனர். 



இந்த கலவரம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு அவர்களில் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது அன்றாடம் வேலை செய்தால் தான் தமது குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையிலிருக்கும் ஏழை கூலித்தொழிலாளிகள் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர் தாய்மார்கள் தங்கள் வீட்டுக்குதேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கோ அல்லது அருகிலுள்ள நகரங்களுக்கோ போய்வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்  இவற்றையெல்லாம் கூட சகித்துக்கொள்ளலாம் நோயாளிகள் அவசரமாக மருத்துவமனை செல்ல முடியாமல் உயிரிழப்பு ஏற்ப்படும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

இவற்றை சீர் செய்ய அரசு எந்த வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொண்டதாக தெரியவில்லை  இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு என்ன காரணம் என்பதை நாம் முதலில்  தெரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y