அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, July 30, 2012

யான்புவில் இஃப்தார் மற்றும் மார்க்க விளக்க நிகழ்ச்சி!



Sunday, July 29, 2012

பதவி வெறி என்றால் என்ன என்று பாடம் ‎நடத்திக்காட்டிய வாத்தியார்!‎

ம.ம.கட்சியின் மூத்த தலைவர் வத்தியாரின் பதவி வெறி ரொம்ப ‎முற்றிப்போய் அந்தப் பதவி வெறி மிக உச்சத்தை எட்டியுள்ளது.‎
‎ 
கடந்த வாரம் பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அவர் எந்த அளவிற்கு ‎பதவி வெறி பிடித்து அலைகின்றார் என்பதைப் படம் பிடித்துக்காட்டியுள்ளது.‎
‎ 
சமீபத்தில் வக்ஃபு வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு ‎உத்தரவு பிறப்பித்தது. அதில் நமது ஜால்ரா மன்னனின் பெயர் இடம் ‎பெறவில்லை. இந்த அளவிற்கு அம்மாவிற்கு சிங்கி அடித்து, ஜிங்சா ‎தட்டியபோதும், அ.தி.மு.க.வினரே ஆச்சர்யப்படக்கூடிய அளவிற்கு அம்மா ‎புகழ் பாடிய போதும் தனக்கு அதில் இடம் வழங்கப்படவில்லையே என்று ‎நொந்து கொண்ட நமது ஜால்ரா மன்னன் சீறி எழுந்தார்.‎
‎ 

Friday, July 27, 2012

சலீமுல்லாகான் குமுதம் ரிப்போர்டருக்கு அளித்த பேட்டி!

காலியாகும் மமக கூடாரம்!

கடந்த 15.07.12 அன்று ஞாயிற்றுக்கிழமை இராமநாதபுர மாவட்டத் திலுள்ள மண்டபம் திருப்புலாணி பாம்பன் இராமேஸ்வரம் வேதாளை தங்கச்சிமடம் ஆகிய தமுமுக மற்றும் மமகட்சி கிளைகள் கூண்டோடு கலைக்கப்பட்டு தமுமுக மற்றும் மமக மாநிலச்செயலாளர் சலீமுல்லாகான் (இவர் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் மமக சார்பில் போட்டியிட்டு மமக  வேட்ப்பாளர்களிலேயே அதிக வாக்குப்பெற்றவர் சுமார் 23 ஆயிரம் வாக்குகள்) தலைமையில் மற்றும் மமகவின் மாவட்ட செயலாளர் தஸ்ஃபிக் அலி தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் அஜ்மல் மற்றும் எராளமான மமகவினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!

Sunday, July 22, 2012

யான்புவில் ஃபித்ரா மற்றும் ஜகாத்தை வழங்க தொடர்பு கொள்ள வேன்டிய முகவரி!


Friday, July 20, 2012

தமிழகத்தில் இன்று (20-7-2012) ரமளான் பிறை பார்க்கப்பட்டது!


கடலூர் மாவட்டம் பி முட்லூர் என்ற ஊர் அருகில் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் இன்று  (20-7-2012)   மக்ரிபிலிருந்து ரமளான் 1 ஆம் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- தலைமையகம்

2011 பித்ரா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிநாட்டில் வசூலித்து தாயகத்தில் மாவட்டம் வாரியாக விநியோகித்த பட்டியல் விபரம்!


ரமளான் தொடர்பான அனைத்து கட்டுரைகளையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!



Thursday, July 19, 2012

ஜெத்தா தவ்ஹீத் ஜமாஅத்தின் புனித ரமளான் நல்வாழ்த்துக்கள்



யான்பு தவ்ஹீத் ஜமாஅத்தின் புனித ரமளான் நல்வாழ்த்துக்கள் !



Monday, July 16, 2012

உடனடி தேவை இஸ்லாமிய குற்றவியல் சட்டமே!

செய்தி  : ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற திருடனை காட்டிக்கொடுத்த அப்பாவி ஆட்டோ டிரைவர் ஜாமீனில் வெளிவந்த அந்த திருடனால் நடுரோட்டில் வைத்து கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

செய்தி  : அண்ணியை கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்தவன் பல ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை அவனை தொடர்ந்து சிறையில் வைக்க எந்த முகாந்திரமும் இல்லை மேலும் தொடர்ந்து  சிறையில் வைக்க சட்டத்தில் இடமில்லை என நீதிபதிகள் அறிவிப்பு ஏனென்றால் கற்பழித்த போது  அந்த கயவனுக்கு வயது 17 நான்கு மாதமாம் அதனால் அவன் சிறுவன் என  நீதிபதிகள் தெரிவித்து விடுதலை செய்து தீர்பளித்தனர்.

மேலே குறிப்பிட்ட செய்திகள் இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து நிகழ்த்து வருகிறது அவைகள் சில உதாரணங்கள் மட்டுமே இதுபோன்ற அத்துமீறும் செயல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கு இதற்க்கெல்லாம் ஒரே காரணம் இந்திய குற்றவியல் சட்டம் மிகவும் பலகீனமாக இருப்பதே இந்திய குற்றவியல் சட்டத்தை இயற்றிய அறிவு ஜீவிகள் மனிதர்கள் என்கிற வகையில் தங்களால் முடிந்த அளவு சட்டத்தை இயற்றி உள்ளனர்.

Saturday, July 14, 2012

மனக் குழப்பத்திற்கு மகத்தான தீர்வு!







Wednesday, July 11, 2012

பாலகோட் மர்கஸ் அமைய யான்பு கிளை சார்பாக உதவி!

பாலக்கோட்டில் மார்கஸ் அமைய யான்பு கிளையின் சார்பாக ரூபாய் 7000 ஜெத்தா மண்டல நிர்வாகியிடம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, July 10, 2012

அகில உலக ஜால்ரா மன்னன் புளுகு மன்னனாக மாறிய கதை!

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி!‎என்ற தலைப்பில், மானம் கெட்ட வாத்தியார், சங்பரிவாரத் தலைவர் இல.கணேசனுடன் கைகோர்த்து போஸ் கொடுத்து நின்ற செய்தியை  புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தோம்.

சட்டமன்றத்தில் ஜனாஸாவாக வீற்றிருக்கும் ம.ம.கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கை கோர்த்துக் கொண்டு உற்சாகமாக போஸ் கொடுத்து நின்றது ஏன்? என்பதற்கு அற்புதமான(?) விளக்கத்தை அளித்துள்ளார்.
ம.ம.கட்சி தொண்டர்களே இந்த விஷயத்தில் அவரைக் காரித்துப்பி கேள்வி கேட்டவுடன் செய்வதறியாது விழிபிதுங்கிய சட்டமன்ற ஜனாஸா, வேறுவழியின்றி தனது அந்த மானங்கெட்ட செயலை நியாயப்படுத்தி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த மய்யித்து அறிக்கை குறித்து இங்கே அலசுவோம்.
இதுவரைக்கும் இவர், “அகில உலக ஜால்ரா மன்னன்” என்ற பட்டம் பெறுவதற்குத்தான் முயற்சி செய்து வருகின்றார் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். இவரது இந்த அறிக்கையைப் பார்த்தபிறகுதான், “அகில உலக புளுகு மன்னன்” என்ற பட்டமும் தனக்கே வர வேண்டும் என்று இவர் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளார் என்பது நமக்குத் தெரியவந்துள்ளது.

Monday, July 09, 2012

கலவரத்தின்போது வழிபாட்டுத் தளங்களை பாதுகாக்க தவறிய குஜராத் அரசு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!


டெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தின் போது இடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
முன்னதாக 2002ம் ஆண்டு நடந்த வன்முறைச் சம்பவங்களில் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து இஸ்லாமிய நிவாரணக் கமிட்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கத் தவறியதற்காக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
மேலும் சேதப்படுத்தப்பட்ட 500 வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு தருமாறும் குஜராத் அரசுக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

சிறுபான்மையின மாணவியருக்கு கல்வி உதவித் தொகை!

11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியருக்கு மத்திய அரசின் மவ்லானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தம், பார்சி மதங்களைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவ்லானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 


இக்கல்வி உதவித் தொகை மூலம் கல்விக் கட்டணம், பாடப் புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் உண்டு, 


Sunday, July 08, 2012

பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த மதுரை ஆதினம்! வீடியோ இணைப்பு

ஒரு நாட்டின் இறையாண்மைக்கு மிக முக்கிய தூண்களாக விளங்கி வருவது மூன்று துறைகள் காவல்துறை நீதித்துறை பத்திரிக்கைத்துறை இவை மூன்றும் செம்மையாக செயல்பட்டால் மாத்திரமே நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படும் இல்லாவிட்டால் ஒட்டு மொத்த சமூக கட்டமைப்பும் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும் ஆனால் இந்த மூன்று தூண்களாக வர்ணிக்கப்படும் இவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து செயல்படுகிறார்களா என்றால் யோசிக்காமல் இல்லை என்று சொல்லிவிடலாம்.

நாடே எதிர்பாத்து காத்திருந்த ஒரு மிக முக்கிய தீர்ப்பான பாபர் பள்ளிவாசல் தீர்ப்பு எவ்வாறு வெளியானது என்று இந்த அனைவருக்கும் தெரியும் உலகமே இந்தியா நீதித்துறையை பார்த்து காரி உமிழும் அளவிற்கு இருந்தது ஒரு சமுதாயத்திற்கு மிகப்பெரிய அநீதி சங்க்பரிவார தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது அதை இந்த உலகமே அதிர்ச்சியுடன் நேரடியாக பார்த்தது அதுமட்டுமில்லை அந்த இடம் சம்பந்தப்பட்ட அணைத்து ஆவணங்களும் முஸ்லிம்களிடமே இருந்தது இடிக்கும் அந்த நொடி வரை பொசிசனும் முஸ்லிம்களிடம்தான் இருந்தது ஆனால் இவற்றை எதையும் பார்க்காமல் என்ன தீர்ப்பு வழங்கினார்கள் இந்த மிக முக்கிய தூண்களில் ஒன்றான நீதித்துறை பறிகொடுத்தவனுக்கு ஒரு பங்கு அநியாயமாக அபகரித்தவனுக்கு இரண்டு பங்கு என்று மகா கேடுகெட்ட தீர்ப்பை அளித்து.

Saturday, July 07, 2012

கவர்ச்சி ஆடை அணிந்து வரக்கூடாது ஆசிரியைகளுக்கு தமிழக அரசு உத்தரவு! வீடியோ இணைப்பு

நமது கலாசசாரத்திற்கேற்பவும், பண்பாட்டுக்கு ஏற்பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் திடீரென ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாம்.
ஜூன் 29ம் தேதி இந்த சுற்றறிக்கை போயுள்ளது. அதில், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியைகள், ஆசிரியர்ள், வகுப்பறையில் நாகரீமான முறையில் உடையுடன் காணப்பட வேண்டும் என அறிவுறுத்துமாறு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளது.
நாகரீகமற்ற, நமது கலாச்சார, பண்பாட்டுக்குப் புறம்பான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, July 06, 2012

ஆபாச உடைகளால் களவாடப்படும் கற்ப்பு ?

இன்று உலக நாடுகளில் ஏற்ப்பட்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று பெண்களின் கற்ப்பு குறித்த சர்ச்சை குறிப்பாக ஐரோப்பிய மற்றும்  அமெரிக்கா போன்ற நாடுகளில்  கற்ப்பென்றால் என்ன விலை அது எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்க்கும் அளவிற்கு அவர்களின் கலாச்சாரம் சீரழிந்துவிட்டது  அப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற சுதந்திரம் இன்று கலாசாரத்தை அதிகம் மதிக்கின்றோம் என்று சொல்லக்கூடிய  இந்தியா போன்ற நாடுகளையும் பீடித்துள்ளது தான் வேதனை.

முன்பெல்லாம் தேடிச்சென்று சினிமாவில் மட்டுமே பார்த்த கவர்ச்சி இன்று அணைத்து இடங்களிலும்  நாகரீகம் என்ற போர்வையில் நடமாடுவதை காணலாம் இந்த நாகரீகம் என்னும் ஆபாசம் விளையாட்டுத்துறை அலுவலகம் கடைவீதிகள் தெருக்கள் எல்லாம் கடந்து ஒழுக்கத்தை பயிற்றுவிக்கும் கல்விக்கூடங்களிலும் நவநாகரீகம் என்ற ஆர்ப்பரித்து விட்டதுதான் கொடுமை. 

Thursday, July 05, 2012

கடவுள் இருக்கின்றார், 99.9 % உருதிபடுத்தியுள்ளது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்! வீடியோ இனைப்பு


கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.
Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

முஸ்லீம் தனியார் சட்டத்தில் கைவைக்கும் அயோக்கியத்தனம்!‎ ஆர்ப்பரித்து எழுந்தது டிஎன்டிஜே!

 பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அரும்பாவூர் என்ற குக்கிராமம். இந்த ‎ஊர் பெரம்பலூரிலிருந்து 20கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊரில் வசித்து ‎வரும் சாகுல் ஹமீது என்ற மணமகனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த யுரேஷா பானு ‎என்ற மணமகளுக்கும் கடந்த 25.06.12 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ‎அங்குள்ள கோகுல் திருமண மண்டபத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் ‎முன்னிலையில் திருமணம் நடைபெற இருந்தது.‎

திருமண தினத்தன்று காலை 10.20 மணியளவில் ஆர்.டி.ஓ பேச்சியம்மாள் ‎தலைமையில் மண்டபத்தினுள் புகுந்த காவல்துறையினர் திருமணத்தைத் தடுத்து ‎நிறுத்தி மணமகன், மணமகள், மணமகனின்பெற்றோர்கள், மணமகளின்பெற்றோர்கள் ஆகியோரை அழைத்துச் சென்றனர்.‎

ஏன் திருமணத்தை நிறுத்துகின்றீர்கள் என்று காரணம் கேட்டதற்கு சமூக ‎நலத்துறையிலிருந்து புகார் வந்துள்ளது. நீங்கள் நடத்தும் இந்தத் திருமணம் ‎குழந்தைத் திருமணம் ஆகும். மணமகளுக்கு 16 வயதுதான் ஆகின்றது. இது இந்திய ‎அரசியல் அமைப்பு சாசனச் சட்டப்படி குற்றம். எனவே உங்களைக் கைது ‎செய்கின்றோம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.‎

Wednesday, July 04, 2012

ஜெமினி பாலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்து!‎ உயிர்காக்கும் பணியில் உடனடியாக களம் கண்ட டிஎன்டிஜே!


ஜெமினி பாலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்து!‎ உயிர்காக்கும் பணியில் உடனடியாக களம் கண்ட டிஎன்டிஜே கடந்த ஜூன் 27ஆம் தேதி புதன்கிழமை அன்று சென்னை ஜெமினி ‎மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த நகரப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை ‎இழந்து ஜெமினி பாலத்தின் பக்கச் சுவர்களை இடித்துக் கொண்டு ‎பாலத்திலிருந்து 20அடி ஆழத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 39 ‎பயணிகள் காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து நடந்த நேரத்தில் ‎அந்த வழியாக மண்ணடியிலிருந்து தி.நகருக்கு சவாரி ஏற்றிச் சென்ற ‎தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினரான ஆட்டோ ஓட்டுனர் ரியாஸ் ‎அவர்கள் அந்த வழியாக தேனாம்பேட்டையை நோக்கிச் சென்று ‎கொண்டிருந்துள்ளார்.‎ ‎
பஸ் கவிழ்ந்து விழுந்த போது, அவரது ஆட்டோ அந்த பாலத்திற்கு கீழே ‎சென்று கொண்டிருந்துள்ளது. அல்லாஹ்வுடைய மிகப்பெரும் கிருபையால் ‎சில நொடிப் பொழுது வித்தியாசத்தில்தான் இந்த ஆட்டோவும், ஆட்டோவில் ‎சென்றவர்களும் வல்ல இறைவனால் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

நாகை காவல்துறையை நடுநடுங்க வைத்த டிஎன்டிஜேயின் முற்றுகைப் போர்!‎


நாகை (வடக்கு) மாவட்டம் தரங்கம்பாடி தாலூக்காவில் உள்ள பொறையார் ‎பத்தாய் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது அலி (வயது 75). ‎ஏகத்துவக் கொள்கையில் உள்ள இவர் கடந்த 19.6.2012செவ்வாய்க்கிழமை ‎இரவு 8 மணியளவில் வஃபாத் ஆனார்.‎ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.‎
இவருடைய மகன்களான யூசுப், இஜ்ஜதீன் உள்ளிட்ட மூன்று மகன்களுமே ‎தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.‎
இவ்வூரில் யாரேனும் மரணித்தால் பள்ளிவாசலில் அறிவிப்பு செய்வது ‎வழக்கம். எனவே முஹம்மத் அலி அவர்களின் மரணச் செய்தியை பள்ளியில் ‎அறிவிப்புச்செய்ய வேண்டும் என்று ஜமாஅத் நிர்வாகிகளிடம் குடும்பத்தார் ‎கூற, அவர்களோ ஒரு படிவத்தைக் கொடுத்து அதில் கையெழுத்துப் போட்டுத் ‎தருமாறு கூறியுள்ளனர். அந்த படிவத்தில் ‘நான் முஹையதீன் ஆண்டவர் ‎பள்ளிவாசலின் பாரம்பரிய வழக்கப்படி தொழுகை நடத்த சம்மதிக்கிறேன்’ ‎என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்ட குடும்பத்தார் கையெழுத்துப் போட ‎மறுத்து விட்டனர். கையெழுத்துப் போடாவிட்டால் ஜனாஸாவை அடக்கம் ‎செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ஜமாஅத் நிர்வாகிகள் அடாவடியாகக் ‎கூற பிரச்சனையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகளிடம் ‎முஹமது அலியின் குடும்பத்தார் கொண்டு வந்தார்கள்.‎
இவர்களிடம் நேருக்கு நேர் பேசினால் எந்தப் பயனும் இல்லை என்பதால் ‎காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. மறுநாள் காலை 10 மணியளவில் ‎காவல்துறை ஆய்வாளர் மற்றும் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை ‎ஆரம்பமானது.‎
தூக்கி வீசிய எலும்புத்துண்டிற்கு ஏற்ப வாலை ஆட்டிய காவல்துறை:‎
இந்தப் பிரச்சனையில் சட்டப்படியும், மனிதநேய அடிப்படையிலும் ‎செயல்படக்கூடிய அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும்?.‎

“இறந்த மய்யித்தை அடக்கம் செய்யக்கூடாது என்று அடம்பிடிக்கின்றீர்கள். ‎இது சட்டப்படி குற்றம். எனவே அடக்கம் செய்வதற்கு மையவாடியை ‎திறந்துவிடுங்கள்” என்று அடாவடித்தனம் செய்யும் பள்ளிவாசல் ‎நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டிருக்க வேண்டும்.‎

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி!‎


அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதிலிருந்து விலகி, பா.ஜ.கவின் ‎சிறுபான்மைப் பிரிவாக மாறி அவர்களுடன் கூட்டணி வைக்க திட்டமா?‎ – வெளிவராத உண்மைகள்!!‎
மாமல்லபுரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது தலசயன பெருமாள் கோயில். ‎இதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் முடிவை தொல்லியல் துறை ‎எடுத்துள்ளது. இந்தக் கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கூடாது. ‎அவ்வாறு அறிவித்தால் அந்தக் கோவிலில் நடக்கக்கூடிய பூஜைகள் தடைபட்டுவிடும்; ‎அதுமட்டுமல்லாமல் அங்கு பூஜை செய்ய வரக்கூடிய பக்தர்கள் இதனால் ‎பாதிக்கப்படுவார்கள் என்று சங்பரிவாரங்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர்.‎
ஏற்கனவே 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைய ‎அலைவாயில் கோவில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பூஜைகள் ‎இன்றி பாழடைந்து கிடக்கும் நிலையில், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பலமுறை ‎புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கீர்த்திக்குரிய தலசயன ‎பெருமாள் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் ‎கொண்டுவர கடந்த 20.05.2012 அன்று தேதியிட்ட நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி ‎உள்ளது. இந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள ‎முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது” என்று இந்த கோவிலுக்கு ‎ஆதரவாக கண்டன அறிக்கை விட்டு வருகின்றனர்.‎
பக்தியின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் அறிக்கை விடுவது மேலோட்டமாக ‎அணுகக் கூடிய விஷயம் அல்ல, பழமையான ஆலயங்களை பழமையான ‎கட்டடங்களைப் பாதுகாக்க இந்த நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் ‎சட்டத்தின்படி இவ்வளவு காலம் கடந்து விட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‎கட்டடங்களை தொல் பொருள் துறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தின் படியே ‎ஏராளமான கோவில்களும் சில பள்ளிவாசல்களும் இன்னும் பல புராதனக் ‎கட்டடங்களும் மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி ‎வருகின்றன.‎

Monday, July 02, 2012

+92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் திருப்பிக் கூப்பிடாதீங்க!


டெல்லி: உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால் கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர்.
அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன் சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது # 90 என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம் கார்டை குளோன் செய்து நாம் அதில் வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள்.
அதனால் இதுபோன்ற எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க வேண்டாம். மேலும் செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து வைக்க வேண்டாம்.
இதுபோன்று மிஸ்ட் கால் வந்த எண்ணை மீண்டும் அழைத்து சுமார் 1 லட்சம் பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:தட்ஸ்தமிழ் 

Sunday, July 01, 2012

மனக் குழப்பத்திற்கு மகத்தான தீர்வு! ரமலான் உரை.




தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y